ரணத்திற்கு பின்னர் உயிரின் நிலை என்ன...? என்ற நசிகேதனின் கேள்விக்கு யமதர்மன் பதில் கூறுகிறார்.

Advertisment

நான் "யார்..?''

திருமூலர் பாடல்,பெற்றோர் வைத்த பெயரும் பிணம் என்று  மாறுது. விரும்பி அணிந்த துணியும் கந்தல் என்று ஆகுது. பாடுபட்டு சேர்த்த சொத்து வாரிசு இடம் சேருது.

Advertisment

கூடிவாழ்ந்த மனைவி கூடவே வா சாகுது. ஓடியாடி உழைத்த உடம்பு உயிரைவிட்டு கிடக்குது. உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம் ஊமையாய் நிற்குது. சொந்தம் என்று சொல்வதெல்லாம் உனக்கு சொந்தமில்லை. நீ வந்த இந்த உலகில் அவன் தந்த உடம்பில் சொந்தம் என்பது ஏதடா தங்கிச் செல்லும் வழிப்போக்கனே. -திருமூலர்இங்கே தங்கிச் செல்லும் வழிப்போக்கன் என்பதே "நீ' ஆகும். அதுவே ஆன்மா. 

அதுவே "நீ'.

ஒன்றேயானதும், அனைத்தையும் ஆள்வதும், எல்லோரிலும் இருப்பதும், இதயத்தில் உறைவதும், ஒன்றாக இருந்தும் பலவாறாக தோன்றுவதும், ஆன்ம அனுபவம்  உள்ளவர்களுக்கே புரிந்த ஒன்று, மற்றவர்களுக்கு இல்லை ஏனெனில் அவர்கள் மாயையில் அமிழ்ந்திருக்கிறார்கள்.

Advertisment

மாயை என்பது என்ன..?

பதில் மிகச் சுலபம். இருப்பதை இல்லாததாக, இல்லாததை இருப்பதாக நினைப்பதே மாயை..! 

உலகம், உயிர்கள் என்று அனைத்திலும் உறைவது ஆன்மா. அது ஒரே உணர்வுப் பொருள். மாயை நம் கண்களை மறைப் பதால் இவை எல்லாவற்றையும் வெவ்வேறாக பார்க்கிறோம்.

இந்த மாயையும் இறைவனின் சக்தியால்தான், வேறுபாட்டு உணர்வு இருக்கும்பொழுது பயம் தவிர்க்க முடியாதது. ஒரு முகமான உணர்வில் பயம் இருக்காது. 

உதாரணமாக வைக்கோல் பிரியை வேறுபாட்டு உணர்வுடன் பார்க்கும்பொழுது மாயை காரணமாக நமக்கு அது பாம்பு என்ற பயத்தைத் தருகிறது. 

அதையே ஒரு முகமான மனத்துடன் உற்று நோக்கும்பொழுது  அதை வைக்கோல் பிரியாகப் பயமின்றி பார்க்கிறோம். ஆன்மா நிலையற்ற உடம்பில் நிலையாக- உயிரினங்களின் உணர்வாக விளங்குகிறது.

அந்த ஆன்மா ஒருமையில் பன்மை, பன்மையில் ஒருமை, இறைவனை நாம் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு சந்தியாக, எந்த விவேகி உணர்கிறானோ அவர்களுக்கே ஆன்ம அனுபவம் கிட்டும் மற்றவர்களுக்கு இல்லை. ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது என்னவென்று விளக்க இயலாது..! அதனை ஆராயவும் முடியாது. அது அனுபவத்திற்கு உரியது. நசிகேதனும் யமதர்மனிடம் அதனைப்பற்றி கேட்கிறான். அதற்கு யமதர்மன் தகுந்த பதிலையும் தருகிறார்.

மரணபயம் தேவையில்லை!

நசிகேதன் கேட்கிறார் மரணபயத்தை விலக்கி வாழவேண்டும். அதை எப்படி புரிந்து கொள்வது...? 

யமதர்மன் மூன்று நிலைகளில் அதனை விளக்குகிறார்.

இந்த அரசமரம் பழமையானதுமேலே வேரும் கீழே கிளைகளும் கிடையாது. 

அதனை இறைவன் என்று பார்த்தால் அது அழிவற்றது. எல்லா உலகங்களும் இந்த எண்ணத்தையே சார்ந்திருக்கின்றன. மரணத்தை யாரும் கடந்து செல்ல முடியாது. ஆன்மாவும் கடந்து செல்ல முடியாது. 

அதுவே நீ கேட்ட உண்மை.

அதாவது- யமதர்மன் விளக்குவது என்னவெனில் அந்த அரசமரத்தின் பிரதிபிம்பத்தை நீரில் பார். அதன் வேர்கள் மேலேயும் கிளைகள் கீழேயும் தெரிகின்றன. தண்ணீரில் அது  தலைகீழாக நிற்பதுபோல் தோன்றும்.

பிரதிபிம்பம் உண்மையாகாது. நிழல் நிஜமாகாது. இந்த வாழ்க்கை ஒரு பிரதிபிம்பத்திற்கு ஒப்பானது. எனவே அது உண்மையல்ல. நாம் காண்பது எல்லாம் உண்மையல்ல. தலைகீழ்த் தோற்றம்.

இதன் பொருள் என்ன..?

இனிப்பு இன்பமாக இருக்கிறது. அது இன்பம் அல்ல.

அதுபோல் துன்பமாகக் காண்பவை  எல்லாம் துன்பமல்ல.

பிறவியை நாம் இன்பமாக நினைக்கிறோம். 

மரணத்தை கண்டு நடுங்கிவிடுகிறோம். அதனால்தான் உண்மையான மகான்கள் பிறப்பு வேண்டாம் என்கிறார்கள்.

சாதாரண மனிதன் வாழ்க்கையை நேசிக்கிறான். 

துறவி மரணத்தை நேசிக்க வேண்டும். இது ஒரு கசப்பான உபதேசம்தான். 

அரசமரத்தின் பிரதிபிம்பத்தை பார்ப்பது வெறும் புறத்தோற்றம் மாலையிலும் காலையிலும் வெய்யிலுக்கு எதிரே நம் நிழல் மிக நீளமாக தெரிகிறது. அது நம்முடைய பிரதிபிம்பம். நாம் அவ்வளவு உயரமானவர்களா..? 

இல்லை. அது நிழல், நிஜமல்ல. வாழ்க்கையின் உண்மையை அறிய இறைவனை நாடவேண்டும். வேத ரிஷிகளின் அனுபவம் ஒரு ஒருமை உணர்வு. 

இறைவனை அடைய வாழ்க்கையும் ஒரு சாதாரணம். நம் எல்லா நிலைகளும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதுவே, "நீ' என்ற தியானப் பகுதி இந்த உலகங்கள் அனைத் தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணன் இயங்குகின்றன.

இறைவனுக்கு பயம் கொள்பவர்கள் (ஏர்க் ச்ங்ஹழ்ண்ய்ஞ்) நாம் பல சமயங்களில் நல்ல செயல்களையே நினைக்கிறோம். தீய செயல்களை செய்ய அஞ்சுகிறோம். 

வஜ்ராயுதத்திற்கு இரு பொருள் உண்டு. ஒன்று இடி..!  மற்றது விருத்திராசுரனை அழிக்க இந்திரனுக்காக ததீசி முனிவரின் எழும்பிலிருந்து செய்யப்பட்ட ஆயுதம். 

இடியும் தாக்கும். அந்த ஆயுதமும் தாக்கும். இரண்டுமே பேராற்றல் உடையவைகள். இறைவன் அந்த பேராற்றல்களின் தலைவர். உறைவிடம் இதனை நாம் உணரவேண்டும். இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்னி எரிகிறது. சூரியன் சுடுகிறது. ஒரு குவி ஆடியின் (லென்ஸ்) வழியே சூரிய ஒளிக் கிரணங்களைக் குவித்து ஒரு பொருளின்மேல் விழச்செய்தால். அது தீப்பற்றும். அதுபோல இறைவன், ஒரு சூரியன். மனம் ஒரு  (ஈர்ய்ஸ்ங்ஷ் கங்ய்ள்) குவி ஆடி இறையுணர்வு என்பது ஆன்மாவிடம் நான் செல்லும் பாதையைக் காட்டுகிறது. கடவுள் பயத்தினால்தான் இந்திரனும் வாயு தேவனும் தத்தம் வேலைகளை ஒழுங்காக செய்கிறார்கள். மரணதேவனுக்கும் அதே நிலைதான். ஆனால் இறைவனோ கருணசாகரம். 

அதாவது- கருணைக் கடல். அவன் எப்படி தண்டிப்பான் தண்டிக்க வேண்டிய குற்றங்கள் செய்யப்படும்பொழுது தண்டனை உண்டு.

எல்லோருமே இப்படி இருப்பதில்லை. வாழ்க்கைக்கு மறுபக்கம் என்று ஒன்றிருக்கிறது. அங்குதான் பயம், கொடுமை போன்றவை நிகழ்கின்றன. அதுவும் இறைவனின் அருள்தான் உதாரணமாக "கொல்பவனும் அவனே..! கொல்லப்படுவதும் அவனே'' என்கிறது கீதை படுபயங்கரத்தின் உறைவிடமாக, அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம். இதையே காட்டுகிறது.

நம் தெய்வங்களில் சில அதாவது- காளி, கராளி, வராஹி, ருத்திரன், நரசிம்ம மூர்த்தி போன்ற பயங்கர வடிவங்களில் தெய்வத்தை வழிபடுவதன் நோக்கம் இதுவே.! 

அதனால் மரணபயம் என்பது வாழ்க்கையின் எதிர்மறை உணர்வு.!

இந்த உடம்பு வீழ்வதற்குமுன் இந்த உண்மைகளை உணரமுடியுமானால் நமக்கு அக்காட்சி கிடைக்கிறது (அகக் காட்சி) உணரமுடியாதவன் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.  புற உலகையும் அக உலகையும் பகுத்தறியத் தெரிந்திருக்க வேண்டும் இதில் ஆச்சார்யனின் பங்கு அதிகம். அவர் புற உலகைவிட்டு அக உலகையே காட்டுகிறார். மனம் அப்போது தெளிவுபெறுகிறது.

இறைவனை எவ்வாறு காண்பது நசிகேதன் கேட்கிறார் கண்களால் காணப்படாத சொற்களால் அறியப்படாத மேலான இறைவனை உணர்வது எவ்வாறு..?

யமதர்மன் சொல்கிறார்-

இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரை கண்களால் காண்பதில்லை. அவரைப் பற்றிய உணர்வைப் பெறக் கீழ்க்கண்டவை தேவை-

1) விழிப்பு நிலையில் உள்ள புத்தி.

2) மனதின் தொடர்ந்த முயற்சி.

அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர். அந்தணர்கள் பரமாத்மாவை அக்னியில் பூஜிக்கிறார்கள். யோகிகள் பரமாத்மாவை தங்கள் இதயத்தில் பூஜிக்கிறார்கள். 

அறிவின் முதிர்ச்சி அடையாதவர்கள். பரமாத்மாவை பிம்பங்களில் (சிலைகளில்) பூஜிக்கிறார்கள். 

ஸமதர்ஸிகள் எதையும் ஒரே நோக்குடன் வேற்றுமையின்றி பார்ப்பவர்கள். பரமாத்மாவை எங்கும் பூஜிக்கின்றனர். 

அதாவது- புறக்கண்களால் காணமுடியாத பரமாத்மாவை இதயக் குகையிலுள்ள ஆன்மாவால் அவருடைய பேரொளியில் அவரைக் காணலாம்.

இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர் அல்லது ஒரு பொறி.

இந்த பொறி எல்லோரிடமும் உள்ளது அதுதான் இறைவனை அடையும் ஒரு சக்தி சாதனம் ஆன்ம சுடரை அறிவது அவசியம். அதற்கு புத்தி தெளிய வேண்டும். கலங்கிய மனமோ. புத்தியோ ஆன்ம அனுபூதிபெற இயலாது. மனதின் தொடர்ந்த முயற்சியும் இதில் சேரவேண்டும். மனதை கட்டுப்படுத்த ஏதாவது ஒரு பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும். பின் முழு மூச்சில் அதே பயிற்சியைத் தொடரவேண்டும். 

அப்போதுதான் புத்தி தெளிவடையும். 

தெளிந்த புத்தி தன்னை ஆன்மாவுடன் இணைத்துப் பார்க்கும். அப்போதுதான் நாம் ஆன்மா என்கிற புதிய நிலை உருவாகும்.

தெளிந்த புத்தி. மனம் எப்போது ஆன்மாவை அடையும்..?

எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை.

-தொடர்ந்து பார்ப்போம்!

செல்: 96599 69723