ன்னிலையை முன்னிலைப்படுத்தும், நிகழ்வுகளில் தன்னை அர்ப்பணித்த மானுட இனம், தனக்கான இருப்பிடத்தை அமைத்து அதன்வழியே அறம்சார் சமூக கட்டமைப்பை உருவாக்கி, வளர்ச்சியின் வாயிலாக விண்ணைத் தொட முயன்று வருகின்றது.

Advertisment

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உறைவிடம், இன்று இல்லமாக பரிமாண வளர்ச்சி அடைந்து வாழ்வின் கனவாகவும், நியாய மான ஆசையாகவும், லட்சியமாகவும் உருப்பெற்று அமைந்துள்ளது. 

Advertisment

அத்தகைய லட்சிய வாழ்வின் கனவான வீடு, மனை அமையும் யோகமானது எல்லோருக்கும் எளிதில் அமைவது இல்லை என்பதுதான் உண்மை.

ஆகட்டும்; வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டு இந்த அற்புதமான யோகத்தை, எந்த ராசி அன்பர்களுக்கு அளிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதையும், இந்த அற்புதத்தை அடையும் பரிகாரங்கள் என்ன என்பதையும் காணலாம். 

Advertisment

கனவுகளை நினைவுகளாக்க காத்திருக்கும் 2026-ல் நிலைபெற்று வரம் அருளும் குரு, சனி, ராகு, கேதுக்களின் கோட்சார நகர்வுகளின் தன்மைகளை கணக்கில்கொண்டு, வீடு, மனை அமைத்துக் கொள்ளும் ராசிகள் எவை என்று ஆராயலாம். 

முதல் ராசியான மேஷ ராசிக்கு வீடு மனை, அமைய வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றது. 9-ஆம் அதிபதி குரு, 4-ல் உச்சமாகும் காலமான 2-6-2026-க்குமேல் இவர்களுக்கு பூர்வீக இடம் சார்ந்த வகையில் வீடு மனை போன்றவை அமையும். குறிப்பாக தந்தைவழி உறவுகளின் மூலம் வீடு அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அது மட்டுமல்லாமல் பூர்வீக வீட்டை புணரமைக்கும் சூழலும், உருவாகும். இதுவரை தந்தையின் வசம் இருந்துவந்த வீடு இவர்களின் பெயருக்கு மாற்றி அமையும் சூழலும் உருவாகலாம். சனியின் பார்வை 2, 6, 9 பாவகத்திற்கு பதிவதினால் சிறு தாமதத்துடன் வங்கி கடன் கிடைக்கப்பெறும். செவ்வாயின் அஸ்தமனம் பங்குனி 12-ஆம் தேதியோடு அதாவது- மார்ச் 26-ஆம் தேதியோடு முடிந்துவிடுவது, மனை சார்ந்த விஷயத்தில் மேலும் சிறப்பை எதிர்பார்க்கலாம். 

கடகம் 

கடக ராசிக்கு ஆண்டின் துவக்கத்திலேயே வீடு கட்டும் அமைப்பை கிரகங்கள் வழங்கும் சூழ-ல் அமர்ந்துள்ளது. 2-6-2026 இந்த காலகட்டத்திற்குள் இவர்களுக்கு மேற்கூறிய யோகம் அமையும். கேதுவின் பார்வை நான்காம் பாவகத்திற்கு பதிவதனால் சில தடைகள் குறுக்கிட்டு நிவர்த்தியாகும். 

கன்னி 

கன்னி ராசிக்கு நான்காம் பாவகமான தனுசு ராசியை குருபகவான் சம சப்தம பார்வை இடுவதனால், இவர்களுக்கும் வீடு மற்றும் கா- மனைகள் அமைவதற்கான சூழலை வழங்கும். மேலும் ராகுவின் பார்வையும், சனியின் பார்வையும், இதே இடத்திற்கு வலு சேர்த்து பிரம்மாண்டமான புராதானமான வீட்டை அமைக்கும் சூழலை வழங்கும். சிலருக்கு பழைய வீட்டை பிரம்மாண்டப்படுத்தி குடிபோகும் தன்மையை அளிக்கும். ஊரைவிட்டு வெளியில் வந்து வசித்தாலும் சொந்த ஊரில் வீடு கட்டும் அமைப்பு இந்த காலகட்டம் அமைத்துத் தரும். 

தனுசு 

தனுசு ராசிக்கு தடைபட்டு நின்றுகொண்டி ருக்கும் வீடு 2-6-2026க்கு பிறகு பூர்த்தியாகும். நான்காம் அதிபதி குரு உச்சமாகும் சூழ-ல், இவர்களுக்கு வீடு அமையும். எட்டாம் பாவகத்தில் உச்சமா வதை கண்டு கலக்கம் தேவையில்லை. வீடு கட்டுவதற்கான கடன் வெகுவிரைவில் கிடைக் கும். குரு மற்றும் சனியின் பார்வை இணைந்து ராசியில் வீழ்வதனால் குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் அனுசரணையும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அமையும். 

கார்த்திகை மாதம் 18-ஆம் தேதிமுதல் தை மாதம் 26-ஆம் தேதிவரை சுக்கிரனும், கார்த்திகை 15-ஆம் தேதிமுதல் பங்குனி 12-ஆம் தேதிவரை செவ்வாயும், ஆண்டின் ஆரம்பத்திலேயே தங்களின் அஸ்தகங்களை முடித்துக்கொள்வதனால் சிறப்பான மனை சார்ந்த பலனை மேற்கூறிய ராசிகள் அனுபவிக்க முடியும். 

இதுவரை கூறிவந்த பலன்கள் கோட்சாரத்தின் அடிப்படையில் கூறப்பட்டது. மற்ற ராசிகளுக்கு வீடு மனை அமையாதா என்கின்ற கேள்வியும் ஆழமாக நம்மை வந்து தழுவும். அவரவரின் சுய ஜாதகத்தில் செவ்வாய் தசாபுக்தி காலங்களிலோ, நான்காம் அதிபதியோ அல்லது நான்காம் அதிபதி ஏறிய சாரநாதனின் தசா புக்தி காலங்களிலோ, நிச்சயமாக ஒரு ஜாதகருக்கு வீடு அமையும்.

தசாபுக்திகளும், கோட்சாரமும், சாதகமாக இல்லாதபட்சத்தில் நம்மை நின்று ஆட்கொள்ளும் இறை சக்தியின் அருளாலும் ஒருவரால் நிச்சயமாக வீடு மனைகளை பெறமுடியும். அதற்கான பரிகாரங்களை பின்வருமாறு காணலாம். 

செவ்வாயின் முழு ஆளுமையை பறைசாற்றும் பழனி, வீடு இல்லாதவர்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமாகிய தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியன்று வீட்டில் அளவுபடி அல்லது மரக்கால் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நெல்லை நிரப்பி அதன்மேல் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், 101 ரூபாய் தட்சணை ஆகியவற்றை வைத்து சிறு படையல், ஏதேனும் ஒரு இனிப்பு பிரசாதத்தை வைத்து படைத்து, சிவப்பு நிற துணியில் படியில் எடுத்து வைக்கப்பட்ட நெல்லை மூட்டையாக கட்டி பௌர்ணமியன்றே பழனி முருகன் கோவில் உண்டிய-ல் சேர்த்துவிட நிச்சயமாக வீடு அமையும். 

மனை இருந்தும் வீடு கட்ட முடியாத சூழ-ல் இருப்பவர்களுக்கு மனையின் வடகிழக்கு மூலையிலுள்ள மண்ணை ஒரு சிவப்பு நிற துணியில் மூன்று பிடி வைத்து ஒரு செங்கல்லை மண்ணுடன் சேர்த்துவைத்து மஞ்சள் குங்குமம் இட்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்பது நாணயங்களை வைத்து இறுககட்டி மலை மேலுள்ள முருகன் ஆலயத்தில் வைத்துவிட அந்த மனையில் வீடு அமையும்.

பாதியில் நிற்கும் வீட்டை கட்டி முடிப்பதற்கு வீடு கட்டப்பட்ட மனையின் வட கிழக்கு பகுதி மண்ணை எடுத்துவந்து, செவ்வாய் அன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் ஏதாவது ஒரு முருகன் ஆலயத்தில் மண்ணை பரப்பி அதன்மேல் ஒன்பது நெய் தீபங்கள் ஏற்றி வர, தடைபட்ட வீடு கட்டி முடிக்கப்படும்.