Advertisment

பரிகாரம் எப்போது பலன் தரும்?

parigaram


மது வாழ்க்கைக்கும் கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. நவகிரகங்களை ஆராய்ந்தால் நமது வாழ்க்கையின் போக்கைக் கணிக்கலாம். சந்திரனின் வரவைக் கண்டு அல்லி மலர்வதும், கதிரவனின் வருகையைக் கண்டு தாமரை மலர்வதும், பூவுலகில் வாழும் ஜீவராசிகளுக் கும் கிரகங்களுக்குமுள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. இந்துமதம் போன ஜென்மம், மறுஜென்மம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை; உடலுக்குத் தான் அழிவுண்டு என்று இந்துமதம் போதனை செய்கிறது. மறுஜென்மம் உண்டு என்பதை இக்காலத்தில் விஞ்ஞானரீதியாக நிரூபித்துள்ளார்கள். 

Advertisment

நமது இந்து மதம் நாம் செய்கின்ற நன்மை- தீமைகளுக்கேற்ப அடுத்த ஜென்மத்தில் வாழ்க்கை அமைகிறதென்று கூறுகிறது. இந்த உண்மையை சிலப்பதிகாரத்தில்கூட காணமுடிகிறது.

Advertisment

கோவலன் முந்தைய ஜென்மத்தில் ஒருவன்மேல் பொய்க் குற்றம்சாட்டி, அவன் மரணத்துக்குக் காரணமாக இருந்தான். 

அதனால் அடுத்த ஜென்மத்தில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறான். 

கற்புடைய பெண்கள் நோற்க


மது வாழ்க்கைக்கும் கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. நவகிரகங்களை ஆராய்ந்தால் நமது வாழ்க்கையின் போக்கைக் கணிக்கலாம். சந்திரனின் வரவைக் கண்டு அல்லி மலர்வதும், கதிரவனின் வருகையைக் கண்டு தாமரை மலர்வதும், பூவுலகில் வாழும் ஜீவராசிகளுக் கும் கிரகங்களுக்குமுள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. இந்துமதம் போன ஜென்மம், மறுஜென்மம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை; உடலுக்குத் தான் அழிவுண்டு என்று இந்துமதம் போதனை செய்கிறது. மறுஜென்மம் உண்டு என்பதை இக்காலத்தில் விஞ்ஞானரீதியாக நிரூபித்துள்ளார்கள். 

Advertisment

நமது இந்து மதம் நாம் செய்கின்ற நன்மை- தீமைகளுக்கேற்ப அடுத்த ஜென்மத்தில் வாழ்க்கை அமைகிறதென்று கூறுகிறது. இந்த உண்மையை சிலப்பதிகாரத்தில்கூட காணமுடிகிறது.

Advertisment

கோவலன் முந்தைய ஜென்மத்தில் ஒருவன்மேல் பொய்க் குற்றம்சாட்டி, அவன் மரணத்துக்குக் காரணமாக இருந்தான். 

அதனால் அடுத்த ஜென்மத்தில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறான். 

கற்புடைய பெண்கள் நோற்க வேண்டிய நோன்புகளை கண்ணகி தன்னுடைய முந்தைய ஜென்மத்தில் மேற்கொள்ளாததால், அடுத்த ஜென்மத்தில் அவள் பலவித கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது. இதுதான் நமது இந்து பாரம்பரிய ஜோதிடத்தின் அடிப்படை.

இந்த அடிப்படைத் தத்துவத்தை மேலைநாட்டு ஜோதிடம் ஒப்புக்கொள்கிறதா? இல்லை. பின்னர் நமக்கும் அவர்களுக்குமுள்ள  வித்தியாசம்தான் என்ன? நமது ஜோதிடத்தில் பரிகாரங்கள் உண்டு.மேல் நாட்டு ஜோதிடர்களிடம் அது கிடையாது. நாம் நவகிரகங்களை தெய்வமாக பாவிக்கிறோம். 

சில நேரங்களில் மூலதெய்வங்களான விஷ்ணுவையும் சிவனையும் கூட மறந்துவிடுகிறோம். 

குருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. பைரவருக் கும், சனி பகவானுக்கும் இடையே பேதங்கள் காட்டுவது கிடையாது.

நாம் நமது எதிர்காலத்தைக் கணிக்க விம்சோத்தரி தசா புக்தி முறையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் மேல் நாட்டினர்புரக்ரஷன் (டழ்ர்ஞ்ழ்ங்ள்ள்ண்ர்ய்), டைரக்ஷன் (உண்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்) என்னும் முறையைப் பயன்படுத்துகின்றனர். இதில் கிரகப் பார்வையை- உதாரணமாக 30, 60, 45, 90, 120, 180 என (இருகிரகங்களுக்கு இடைப்பட்ட தூரம்) டிகிரி கொண்டு பலனை உரைக்கின்றனர். நம்முடைய கணிதம் நிராயனம்; அவர்களது சாயனமாகும்.

பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகுமா?

தொட்டது துலங்கவில்லை; நினைத்தது நடக்கவில்லை; எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றவுடன் ஜோதிடரை அணுகுபவர் சிலர். கிரக தசாபுக்தி நடப்பு என்ன? கிரகம் பலமாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா என அணுகுபவர் சிலர். ஜோதிடர் என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே என, எவ்வித நோக்கமுமின்றி ஜோதிடர்களை சந்திப்பவர்களும் உண்டு. இவற்றுள் எல்லா பிரச்சினைகளையும் பரிகாரத்தால் தீர்வு காணமுடியும் என்ற எண்ணம் தலைதூக்குவது இயல்பு.

நாம் செய்யும் பாவங்கள் பலவகைப்படும். மிகக் கொடூரமான பாவங்கள் செய்தோருக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பலன் இருக்காது. எவ்வளவுதான் பணம் செலவழித்துப் பரிகாரங்கள் செய்தும் பலன் கிட்டாது. கொலை, கொள்ளை, வயதான தாய்- தந்தையரைக் கைவிட்டது போன்ற குற்றங்கள் இவ்வரிசையில் வரும். இதற்கு "துருத கருமம்' என்று பெயர். இது முதல்வகை.

சிலர் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் செய்திருப்பார். இவர்களுக்கு பரிகாரம் பலன் தரும். இதற்கு "துருத அத்ருத கருமம்' என்று பெயர். இது இரண்டாம் வகை.

சிலர் மிகச் சிறிய குற்றங்கள் புரிந்திருப்பர். 

அச்செயலால் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பர். இதற்கு "அத்ருத கருமம்' என்று பெயர். இவர்கள் எவ்வித பரிகாரமும் செய்யாமலேயே காரியங்கள் அனுகூலமாகும். இது மூன்றாவது பிரிவில் வரும்.

முதல்வகை ஜாதகர்களின் ஜாதகத்தில், லக்னத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ அல்லது தற்போது நடக்கும் தசாபுக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ, சேர்க்கையோ அல்லது பாக்கியாதிபதியெனும் 9-ஆம் அதிபதியின் பார்வையோ இருக்காது.

இரண்டாவது பிரிவினருக்கு லக்னத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ அல்லது தசாபுக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ அல்லது 9-ஆம் அதிபதியின் பார்வையோ இருக்கும்.

பரிகாரம் பலன் தரும் காலம் எப்போது?

ப் கோட்சார குரு, தற்போது நடப்பிலுள்ள தசாநாதனையோ அல்லது புக்தி நாதனையோ அல்லது அந்தர நாதனையோ பார்வை செய்திடவேண்டும்.

ப் ஜனன சந்திரனை கோட்சார குரு பார்வை செய்திடவேண்டும்.

ப் ஜனன கால சந்திரன் நின்ற ராசியில் கோட்சார குரு அமையவேண்டும்.

ப் ஜனன (ஜென்ம) ராசிக்கு 1, 5, 9; 3, 7, 11; 2, 12-ஆம் இடங்களில் கோட்சார குரு சஞ்சாரம் செய்திடவேண்டும்.

ப் ஜனன ஜாதக பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான 5-ஆம் அதிபதியையோ, பாக்கிய ஸ்தானாதிபதியான 9-ஆம் அதிபதியையோ கோட்சார குரு பார்வையிடவேண்டும்.

ப் ஜனன ஜாதக ஜீவன, கர்ம, ராஜ்ஜிய ஸ்தானாதிபதியான 10-க்குடையவரை கோட்சார குரு பார்வை செய்யவேண்டும்.

 இத்தகைய காலகட்டத்தில் செய்யப்படும் பரிகாரங்கள் பலன் தரும் என்பது ஜோதிட சாஸ்திரம் இயம்பும் வகையாகும்.

சில தோஷங்கள் மட்டுமே சக்தியுள்ள மந்திரங்களாலும், மந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருத்தலங்களைப் பூஜிப்பதாலும் நிவர்த்தியாகின்றன. தெய்வீக ஆலயங்கள் நமது கஷ்டங்கள் தீரவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஜாதக தோஷங்களின் அளவீடுகளை 6, 8, 12-ஆம் வீடுகள் சுட்டிக்காட்டும். நல்ல ஜோதிடரின் ஆலோசனை பெற்று, உரிய காலத்தில் உரிய முறையில் பரிகாரம் செய்தால் நன்மை காணலாம்.

-கேயார்

bala210226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe