Advertisment

தங்கத்தின் விலையில் தேகம் எப்போது?- ஜோதிட பார்வை  பேராசிரியர், முனைவர் சிவபிரகாஷ் J.S.

gold


ற்போது தங்கத்தின் விலை அதி உச்சம் அடைந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதே நிலை. இவை இந்தியாவில் மட்டுமல்ல; அகில உலக வர்த்தகத்திலும் இதே நிலையே உள்ளது என்று உலக தங்க கவுன்சில் நிறுவனத் தின்மூலம் வெளியிடப்பட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. 

Advertisment

தற்போது நடைமுறையிலுள்ள தங்கத்தின் விலை மற்றும் உலகளாவிய தங்கத்தின் வர்த்தகம் முதலியவற்றை அடிப்படையாக வைத்தும், கடந்த 60 ஆண்டுகளாக உள்ள தங்கத்தின் விலையின் தகவல்களை இரண்டாம் தர தகவல்களாக வைத்தும், ஜோதிடத்திலுள்ள நுட்பங்களை வடிவமைத்தும் இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 61 ஆண்டுகளில் இதுவரை உலகில் 10 முறை அதிகப்படியான விலை உயர்வைக் கண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 1973-74ல் 37.87% மற்றும் 81.69% உயர்வுபெற்று இரண்டே வருடத்தில் 119.56 % அதிகபட்ச உயர்வினை கண்டுள்ளது. இதேபோல் 1978-80ஆம் ஆண்டுகளில் மொத்தம் 173.66% உயர்வு அடைந்துள்ளது. மேலும் 2007-ல் 54.29%, 2011-ல் 42.70%, 2020-ல் 38.13% உயர்வடைந்து, இந்த ஆண்டில் ஐப்பசி மாதம் வரை மட்டும் 65.43% என்ற உயர்வினை பெற்ற


ற்போது தங்கத்தின் விலை அதி உச்சம் அடைந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதே நிலை. இவை இந்தியாவில் மட்டுமல்ல; அகில உலக வர்த்தகத்திலும் இதே நிலையே உள்ளது என்று உலக தங்க கவுன்சில் நிறுவனத் தின்மூலம் வெளியிடப்பட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. 

Advertisment

தற்போது நடைமுறையிலுள்ள தங்கத்தின் விலை மற்றும் உலகளாவிய தங்கத்தின் வர்த்தகம் முதலியவற்றை அடிப்படையாக வைத்தும், கடந்த 60 ஆண்டுகளாக உள்ள தங்கத்தின் விலையின் தகவல்களை இரண்டாம் தர தகவல்களாக வைத்தும், ஜோதிடத்திலுள்ள நுட்பங்களை வடிவமைத்தும் இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 61 ஆண்டுகளில் இதுவரை உலகில் 10 முறை அதிகப்படியான விலை உயர்வைக் கண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 1973-74ல் 37.87% மற்றும் 81.69% உயர்வுபெற்று இரண்டே வருடத்தில் 119.56 % அதிகபட்ச உயர்வினை கண்டுள்ளது. இதேபோல் 1978-80ஆம் ஆண்டுகளில் மொத்தம் 173.66% உயர்வு அடைந்துள்ளது. மேலும் 2007-ல் 54.29%, 2011-ல் 42.70%, 2020-ல் 38.13% உயர்வடைந்து, இந்த ஆண்டில் ஐப்பசி மாதம் வரை மட்டும் 65.43% என்ற உயர்வினை பெற்றுள்ளது. இதை 1974-க்குப்பின் 51 ஆண்டுகளில் நடைபெறும் இரண்டாம்நிலை உயர்வு என்று எடுத்துக்கொள்ளலாம். 

இதே நிலை மேலும் தொடருமா?

இதற்கான ஜோதிடரீதியான காரணங்களையும் கிரகங்களின் சூட்சும நிலைகளைப் பற்றியும் ஆராய்வோம்.

குரு- தங்கத்திற்கு அதிபதி 

சுக்கிரன்- வெள்ளிக்கு அதிபதி  பதினோராம் பாவம் அதிகப் படியான விலை உயர்வுக்குக் காரணம். 

ஜோதிடத்தில் தங்கம் குருவின் அம்சமாக பாவிக்கப்படுகிறது. சுக்கிரன் வெள்ளிக்குக் காரகம் ஆகிறார்.

பொருளாதாரத் தத்துவப்படி, ஒரு பொருளின் மதிப்பு அதன் உபயோகத்தில் வெளிப்படும். இவை விலை மற்றும் உபயோகத்திற்கான காலத்திற்குச் சம்பந்தப்பட்டது. தங்கம் ஆடம்பர பொருட்களில் ஒன்றாக உள்ளது. இந்த தங்கத்தின் விலை எப்போது உயர்கிறது? 

1. குரு பலம் பெறும்போதும், பொருளாதாரத்திற்கும் சம்பாத்தி யத்திற்கும் அடிப்படையான ரிஷப ராசியோ அல்லது சிம்ம ராசியோ பாவக் கிரகங்களினால் பாதிப்படையும் போது தங்கத்தின் விலை உச்ச பட்ச விலையை சந்திக்கிறது. 

2. குரு காலபுருஷனுக்கு சஷ்டாஷ் கம் பெற்று வீற்றிருக்கும் போது, சிம்ம ராசி பாவக்கிரகங்களினால் பாதிப்படையும்போது தங்கத்தின் விலை உச்சபட்ச விலையை சந்திக் கிறது. 

குறிப்பு: சிம்மத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அது காலபுருஷனுக்கு உண்டான 11-ஆமிடத்தைப் பார்க்கும்.

முதலில் பார்த்த விதிப்படி, தங்கம் அதன் விலையேற்றத்தினால், பிற்பகுதியில் பொருளாதாரத்தில் வளர்ச்சியும் மாற்றமில்லா விலையும் தொடர்ந்துள்ளது. இரண்டாவது விதிப்படி, தங்கம் அதன் விலையேற்றத்தினால், பொருளாதாரத்தில் பாதிப்பும் பிற்பகுதியில் விலை குறைவையும் சந்தித்துள்ளது. 

இதனை ஒவ்வொரு ஆண்டிற்கும் உடைய கோட்சார கிரக நிலையினை வைத்து ஆராயலாம்.

காலபுருஷ தத்துவப்படி, தற்போதைய கோட்சார அமைப்பில் ராகுவும் சனியும் 11-ல் சேர்ந்தும் சனி ஆட்சி பலம் பெற்றும், ராகு- குருவின் சாரத்தில் பயணிக்கும் போது குரு அதிசாரம் பெற்று உச்சமும் அடைந்துள்ளது. குருவுக்கு 2-ல் கேது பாதக பலத்துடன் சுக்கிரனின் சாரத்தில் பயணிக்கிறது. இதன் அடிப்படையில் தங்கம் தனது உச்ச விலையை தொட்டுள் ளது. பலம் பெற்ற குருவுக்கு, ராகு சஷ்டாஷ்கமாகப் பயணிக்கும்போது, இவை நிகழ்ந் துள்ளது. சிம்மம் என்ற அரசாங்கத்திற்கும் சம்பாத்தியத்திற்கும் அடிப்படையாக விளங்கும் வீடு கேதுவினால் பங்கம் அடைந்துள்ளது.

மேலும் ஒவ்வொருமுறை நிகழ்ந்த இந்த தங்கச் சந்தையில் தங்கம் உச்சம் அடையும்போதும் பலம்பெற்ற குருவுக்கு 2-ல் கேது அல்லது சனி, பாதக அல்லது சாதக பலத்துடன் சுப கிரகத்தின் சாரத்தில் பயணிக்கிறது என்பதைக் காணமுடிகிறது.  

இதேபோல், கடந்த 2020-ஆம் ஆண்டிலும், குருவுக்கு 2-ல் சனி, 12-ல் கேது மற்றும் ரிஷபத்தில் ராகு. மேலும், பொருளா தாரத்திற்கு அடிப்படையான ரிஷப ராசி ராகுவினால் பாதிப்படையும்போது தங்கத்தின் விலை உச்சபட்ச விலையை சந்திக்கிறது. பலம் பெற்ற குருவுக்கு, ராகு சஷ்டாஷ்கமாகப் பயணிக்கும்போது இவை நிகழ்ந்துள்ளது.


இதே கணிதமுறையே கடந்த 2011-லும் காணமுடிகிறது. அன்றைய கோட்சாரத்தில் குரு லக்ன கேந்திரம் பெற்று, ராகு அஷ்டமத்தில் அமர்ந்து தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாகிறது. பலம்பெற்ற குருவுக்கு, ராகு சஷ்டாஷ்கமாகப் பயணிக்கும்போது, இவை நிகழ்ந்துள்ளது.

இதற்கு மறுமுனைத் திருத்தமாக, கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த கோட்சார அமைப்பின்படி, குரு லக்ன பாவத்திற்கு அஷ்டமத்தில் மறைவு மற்றும் சிம்மம் என்ற அரசாங்கத்திற்கும் சம்பாத்தியத்திற்கும் அடிப் படையாக விளங்கும் வீடு சனி மற்றும் கேதுவினால் பங்கம் அடைந்துள்ளது.

இதேமுறையில் 1979-80 ஆம் ஆண்டில் குரு லக்ன பாவத்திற்கு சஷ்டாகம் பெற்றும் சிம்மம் என்ற அரசாங்கத்திற்கும் சம்பாத்தியத்திற்கும் அடிப்படையாக விளங்கும் வீடு சனி மற்றும் ராகுவினால் பங்கம் அடைந்துள்ளது.

இதற்கு சற்று மாற்றமாக, கடந்த 1974-ஆம் ஆண்டில், மாற்றுச்சந்தைகளில் ஏற்பட்ட விலை உயர்வின் காரணமாக, பொருளாதாரத்திற்கு அடிப் படையான ரிஷப ராசி கேது வினால் பாதிப்படைந்து குரு 11-ல் வீற்றிருக்க தங்கத்தின் விலை உச்சபட்ச விலையை சந்தித்துள்ளது.

தங்கம் விலை உயர்வு மேலும் தொடருமா என்ற கேள்வி பலர் சிந்தனையில் மேலோங்கி உள்ளது. குரு அதிசாரகதியில் அமர்ந்துள்ளதால், வரும் மார்கழி மாதம் 6-ஆம் தேதிவரை (டிசம்பர் 21 வரை) 

தொடர்ந்து பின் நிலை பெறும். குரு வக்ரகதியில் பயணிக்கும்போது தங்கத்தின் விலை சற்று தேக்கமடையும். எனவே, முதலீட்டிற்காக தங்கம் வாங்குபவர்கள் பங்குனி மாத இறுதியில் வாங்கலாம். அடுத்து 2026-ஆம் ஆண்டு வரும் குரு பெயர்ச்சியில் தங்கத்தின் விலை உயர்வை மீண்டும் எதிர் நோக்கலாம். 

செல்: 90251 61336

bala131225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe