Advertisment

வனத்தில் இருந்து வானத்தைப் பார்த்தபோது அகத்தியரின் அருளாசி! - சித்தர்களைத் தேடி மலைப்பயணம் (3)

tour

பொதிகை மலை செல்லும் வழியில் விழுந்து கிடக்கும் மரங்கள், வழியை மறைக்கும் இடையூறுகள் இதையெல்லாம் தாண்டித்தான் நடந்தோம். அகத்தியரை காணவேண்டும் என்ற ஆவல், தடைகள் பல கடந்தோம். குள்ள முனியாம் குருமுனியை காணுவது என்பது சாதாரணமான காரியமா?

Advertisment

 நாங்கள் சென்ற இடத்தில் ஒரு குட்டை இருந்தது. அதில் அட்டைகள் நெüந்து கொண்டிருந்தன. ஆகவே, நடக்க நடக்க அட்டைகள் பயம் எங்களைத் தொடர்ந்தது. உடன் வந்த சிவனடியார் கோளறு பதிகத்தைச் சத்தம்போட்டுப் பாட ஆரம்பித்தார். அந்தச் சத்தம் காட்டில் எதிரொலித்தது. அந்த சத்தத்தைக் கேட்டு வண்டுகள் ரீங்காரமிட்டன. அந்த இசையை வண்டுகள் ரசித்து கேட்டிருக்க வேண்டும் போல. எனவேதான் வண்டின் ரீங்காரம் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு வந்தது. சிவனடிமையாக வந்தவரின் பாட்டோடு  வண்டுகள் போட்டி போட்டுக்கொண்டு பாடியது போலவே  எங்களுக்குப் புரிந்தது. ஆம். அது ஒரு எதிர்ப்பாட்டு. அகத்தியரின் அருளால் அடியாருக்கும், வண்டாருக்கும் நடந்த எதிர்ப்பாட்டு.  அங்கே ஒரு இசைப்போட்டி நடந்துகொண்டிருந்தது. ரசித்துக்கொண்டே கடந்தோம்.

Advertisment

  சிறிது தூரத்தில் ஒரு நீரோடை இருந்தது. இதை "நாலாறு' என்று சொல்கிறார்கள். 

tour1

அந்த நீரோடையில் அதிகமான கொக்குகள் வசிக்கின்றன. இந்த இடம் தியானம் செய்ய நல்ல இடம். பலர் அங்கே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்கள். சிலர் மூச்சுப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆன்மிகத்தின் எத்தனை நிலைகள் உண்டோ அனைத்தும் செல்லும் வழியில் நமக்கு நினைவு படுத்துவது போலவே அமைந்தது இந்தப் பயணம்.  

  பொதிகை மலையில் எல்லா இடங்களும் ரம்மியம்தான். அகத்தியரை நம்பிச் செல்வதால் நம்முடன் இணைந்து வருவது பேரின்பமும் தான்.

 ஆனாலும் அந்த இன்பம் உடனே கிடைக்குமா?  கரடுமுரடான பாதையில் அகத்தியரை தேடி  கிளம்பியிருக்கிறோம். அவரைக் கண்டால் மட்டுமே பேரின்பம். இந்த ஆன்மிக உலகத்தில் அவரைக் கண்டபிறகு எல்லாமே நமக்குக் கிடைத்து விடும் என்பது உண்மையிலும் உண்மை.

   இப்போது நமது உடலில் நல்ல வலு இருக்கிறது. நாம் எதற்கு ஐயப்படவேண்டும் என்று இறுமாப்புடன் நினைப்போரையும் பொதிகை மலைப் பயணம் புரட்டிப் போட்டுவிடும்.

 "மனிதா இளமை எப்போதும்  உன்னோடு  இருக்கும் என நம்பாதே. இதோ இந்த மலையில் ஏறும் போது உனக்கு  கைகüல் மூன்றாவது தடி தேவைப்படுகிறது. முதுமையில் நீ தேடும் அந்த மூன்றாவது தடி இப்போதே வந்து விடுகிறது. எனவே அகத்தினை விட்டு விடு'' என எண்ணத் தோன்றுகிறது.

 அப்பன் அகத்தியர் தனது தரிசனம் தரும் முன் நமக்கு பல உண்மைகளை உணர்த்தி விடுவார் போல.

 தீர்க்கமான முடிவுடன் நடைபோடுகிறோம். அதல பாதாளமான ஒரு ஆறு ஓடுகிறது. 

இந்த ஆற்றை அட்டையாறு என்கிறார்கள். ஆகா... ஏற்கனவே அட்டைக் கடியோ நம்மை பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது. மேலும் ஒரு அட்டையாறா? அடடா என பயந்து விடக்கூடாது.

 அந்த ஆற்றைக்கடக்கும் போது முட்டு ஏத்தமும், இறக்கமும்தான் இருந்ததே தவிர பெரிய அளவில் அட்டைக் கடி இல்லை.

 அதைத் தாண்டியவுடனே மிகப்பெரிய புல் வெü நம்மை  வரவேற்றது.  தூரத்தில் சுழன்று வரும் மேகக் கூட்டம். அருகில் சில்லெ

 அதைத் தாண்டியவுடனே மிகப்பெரிய புல் வெü நம்மை  வரவேற்றது.  தூரத்தில் சுழன்று வரும் மேகக் கூட்டம். அருகில் சில்லென வீசும் தென்றல் காற்று. இதோ வெட்ட வெüயாக இருக்கும் புல்வெü. மிகவும் ரம்மியமாக இருந்தது.

 ஆனாலும் அட்டை ஆற்றில் இருந்து ஏறியதால் மூச்சு இரைத்தது.

  "இப்பவே இப்படி மூச்சு வாங்குறீங்க. இன்னும் புல்மேடு கடக்கணும், ஏழுமடங்கு ஏறணும், ஏசி காடு வழியா அத்ரிமலை போனும்.  எத்தனை முட்டு ஏத்தம் இருக்கு. இதுலே வேற மழை வரும்போல தெரியுது. மழை பெஞ்சா, வழுக்கும். நடக்கவே முடியாது. சீக்கிரம் கிளம்புங்க'' -கைடு சொல்லும் போது நமக்கு மனதுக்குள் பயம் ஏற்பட்டது. ஆனால் நம்மோடு அகத்தியர் இருக்கிறார் என்ற நம்பிக்கை நம்மை நிமிர்ந்து நடைபோட வைக்கிறது.

அதுவரை வெயிலே படாமல் நடந்துவந்த எங்கள் முகத்தில் வெயில் அடித்தது. மே மாத வெயில் இங்கு இதமாகத்தான் இருந்தது. தூரத்தில் மலை முகடுகளைப் பார்த்தவுடன் எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. மலை முகடுகüல் மேகக்கூட்டங்கள் எங்களைப் பார்த்து சிநேகமாகக் கையசைத்தன. கரு மேகங்கள். அப்படியே பொழிந்தால் மழை! ஆனால் பொழிவது போலவே பாவ்லா காட்டிக்கொண்டிருந்தது.

"காரென்று பேர் பெற்றாயே ககனத்துரும்போது நீரென்று பேர்பெற்றாய் நிலத்தில் வந்ததென்னே!' என்ற காளமேகப் புலவர் பாடல்தான் நினைவுக்கு  வருகிறது. அந்த மேகக் கூட்டம் எப்போதும் மழையாகப் பொழிய வேண்டும். வற்றாத ஜீவநதியான தாமிரபரணியாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதானே அனைவருக்கும் ஆசை. அகத்திய பெருமான் தோற்றுவித்த நதிதான் வற்றுமா? வற்றத் தான் குள்ள முனியாம் குருமுனி அகத்திய பெருமான் விடுவாரா?.

 "நீர் செழித்தாலே நிலம் செழிக்கும். நிலம் செழித்தாலே மக்கள் வளம் கொழிக்குமே' என்ற அடிப்படையை நமக்கு தருபவர் அல்லவா அகத்திய பெருமான். 

tour2

  புல்மேடு ஏறும் போதே முட்டு வலித்தது. காரணம். அந்தப் பகுதியில் இருந்த முட்டு ஏத்தங்கள் தான். இங்கு சில இடங்கüல் புல் 6 அடி வரை வளர்ந்து இருந்தது. எங்கள் பின்னால் வந்தவர்கள் அந்த புல்வெüக்குள் நடந்து வருவது, முன்னால் வந்த எங்களுக்குத் தெரியவில்லை. அழகான இடம். ஏதோ தேவலோகம் மாதிரி பச்சைப் பசேல் என்று பட்டு விரித்ததுபோல இருந்தது. இங்கு சில நேரங்கüல் மான்கள்  தாவி ஓடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும். சிறுத்தைகள் கூட நிற்குமாம். 

ஆனால் அகத்தியர் அதுபோன்ற விலங்குகளை நம் கண்ணில் காட்ட மாட்டார். 

அடுத்து ஒரு சமவெüப் பகுதிக்கு வந்தோம். பாதை சிவப்புக் கலரில் இருந்தது. இருபுறமும் புல்மேடு இருந்தது. பச்சை பூமியில் சிவப்புக் கம்பளம் விரித்து, அகத்தியர் பக்தர்களான எங்களை பெருமான் வரவேற்பதுபோல எங்கள் மனதில் தோன்றியது.

  அடுத்து நம்மை எதிர்நோக்கி காத்து இருந்தது ஏழுமடங்கு.

  ஏழுமடங்கு என்பது பெயருக்கு ஏற்ப 7 மடங்கு உயரம்தான். நல்ல முட்டு ஏத்தம். இதை "மூட்டு இடிச்சான் தேரி' என்றும் சொல்வார்கள். இவ்விடத்தில் ஏறும் போது தேன், பேரீச்சம் பழம் போன்ற உணவுகளை வைத்துக்கொள்ள வேண்டும். தேன் நாக்கில் பட்டவுடன் ரத்தத்தில் சேரும். உடனே சக்தி கிடைக்கும். மறு நிமிடம் உற்சாகமாக மலை ஏறிவிடலாம். ஆகவே, தேன் பாட்டில் ஒன்றை  மலை ஏற்றத்தில் உடன் வைத்துக்கொள்ளவேண்டும்.

 "ஏழு மடங்குப் பாதையில் எப்படி ஏறப் போகிறோம்!' என்று நினைக்கும்போதே பிரமிப்பாக இருந்தது. கைடு, "இங்கே ஒரு தடவை ஏற நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க... ஆனா, இங்க உள்ள செட்டில்மென்ட் காரங்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை ஏறி இறங்கிடுவாங்க தெரியுமா?'' என்றார் இந்த ஏழு மடங்கில் ஏறும்போது மேலே மேக மூட்டம்  அதிகரித்தது. அந்த மூட்டம் எங்களோடு சேர்த்து அந்த மலை முகட்டையே மூடி விடும்போல தெரிந்தது. அப்போது, மேலே இருந்து 15 பேர் வேகமாகக் கீழே இறங்கினார்கள். இவர்கள் காணிகள். தேன் எடுக்க பொதிகை மலை சென்று இருந்தார்கள்.  மேக மூட்டம் மூடிக்கொண்டது. இந்த மேகம் வந்தால் அருகில் உள்ள பள்ளத்தாக்கு கூட தெரியாது. எனவேதான் இவர்கள் வேகமாக இறங்கி விட்டார்கள். என்ற தகவலை எங்கüடம் கூறினார்கள்.

 எங்களுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நாமும் கவனமாக ஏறவேண்டும். அனுபவம் மிக்க கைடு இருப்பதாலும், அகத்தியர் அருள் இருப்பதாலும் தைரியமாக ஏறுகிறோம்.  ஏழுமடங்கில் ஏறும் போது மூச்சு முட்ட ஏற வேண்டி இருந்தது. நமது உடம்பில் உள்ள வியர்வை அனைத்தும் வெüயே வந்துவிட்டது. தாகம் எடுத்தது. கையில் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்ட நிலையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. நாக்கு வறண்டது. 

அடுத்த நிமிடம் கண்ணைக் கட்ட ஆரம்பித்து விட்டது. திட்டமிட்டு வைத்திருந்த தேன் கூட யாருடைய பையில் இருக்கிறது என்று தெரியவில்லை. 

  "அகத்தியப் பெருமானே! இது என்ன சோதனை!' என்று  பக்தர்கள் "ஓம் அகத்தியரே போற்றி' என ஒரே குரலாக குரல் கொடுத்தோம். என்ன ஆச்சரியம்  மேகம் எங்களை மழையாகத் தாக்க ஆரம்பித்தது.

  சாக்கு மூட்டையில் எங்களுடைய கேமராவை கட்டினோம். கைடு அதை தலைச் சுமையாக சுமக்க ஆரம்பித்தார். மழை பெய்தவுடன் எங்கள் தாகம் தணிந்து விட்டது. சரியான மழை! வெளுத்து வாங்கியது என்று சொல்வோமே. அதுபோல, மழை வெளுத்துக் கட்டிக்கொண்டு இருந்தது.

  நாங்கள் கைடுகளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தோம்.  அடுத்து வந்ததோ ஏசி காடு.  இந்தக் காட்டுக்குள் செல்லும் நேரத்தில் பெய்த மழை, கண்ணில் கண்ணாடி கூட போட முடியாத அளவுக்குப் பெய்தது. கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு நடந்தோம். எங்கும் மழைத் தண்ணீர் அருவியாகக் கொட்டிக்கொண்டு இருந்தது. எங்கள் காலின் வழியாக தண்ணீர் ஓடிச் சென்றது. அதனால் வெüயே வராத அட்டைப் பூச்சிகளும் வெüயே வர ஆரம்பித்துவிட்டது. கொட்டும் மழையைப் பார்ப்பதா? அல்லது ஏறும் அட்டையைப் தடுப்பதா?  என்பது தெரியாமல்  கால்களை உதறிக்கொண்டே நடந்தோம். சுமார் 34 நிமிட வேக நடை. ஏசி காட்டைத் தாண்டி நடந்தோம். பல இடங்கüல் விழுந்து கிடந்த மரங்களைத் தாண்டி, குரங்குகள் போல தாவி ஓடினோம்.

  ஏ.சி காடு  என்பதை மழை இல்லாத நேரங்கüல் பயணம் செய்யும் போது அறிந்து இருக்கிறேன். மிகவும் அடர்ந்த காடு இது. மே மாதத்தில் மதியம் 12 மணி காலகட்டத்தில் கூட சூரிய வெüச்சமே தெரியவில்லை. உடலுக்கு ரொம்ப இதமாக இருந்தது. இந்தக் காட்டுக்குள் நடந்த எங்களுக்கு ஏ.சி. போலத்தான் இருந்தது. இங்கு வரும் தமிழர்கள்தான் இந்த இடத்துக்கு வேடிக்கையாக "ஏசி காடு' என்று பெயர் வைத்தனர். அது வரை இந்த காடு குறித்த எந்தவொரு பெயரும் வைக்காத கேரள மக்களும் தற்போது 'ஏசி வனம்'  என்றே கூறுகிறார்கள்.

  தொடர்ந்து, அட்டைக் காடு வந்தது. 

இங்கு அட்டைகள் மிக அதிகமாக இருக்கும். நமது மேல் நன்றாக ஏறும். நாம்  ஆற்றில் கூட அட்டையை அதிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இந்த அட்டைக் காடு அட்டைகள் நிரம்பிய காடு.  தொடர்ந்து நாம் "அத்திரி மலை நிரப்பு' என்ற இடத்தை அடைந்தோம். இங்கு மரம் விழுந்து கிடந்தது. அதை மிக எüதாகத் தாண்டினோம். 

தொடர்ந்து சமபரப்பு வந்து விட்டது.  

அப்பாடா என மூச்சு விட்டோம்.

உடன் வந்த சிவபக்தர் கூறினார்,  

"இந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் உண்டு. ஆனால் அகத்தியர் அருளால் அவரைக் காண வரும் பக்தர்கள் யாரும் இதுவரை புலிகளைப் பார்த்தது கிடையாது. ஆனால் வனத்துறையில் இப்பகுதியில் மாட்டி வைத்திருக்கும்  தானியங்கி கேமராவில் புலிகள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறது'' என்றார்.

  "அகத்திய மாமுனிவருக்கு ஜே!' என்று சத்தம் போட்டபடி கிளம்பினோம். சிறிது நேரம் நடைபோட்டு இருப் போம்.

  அங்கு அதிசயக் கற்களைக் கண்டோம்.

  இந்தக் கற்கள், பத்து அடி நீள அகலத்தில் வித்தியாசமாக இருந்தது. இவை எல்லாம் ஏதோ ஒரு முகத்தைக் கொண்டதாக இருக்கிறது. பொதிகை மலையில் இந்த இடத்தில் மட்டும் இந்தக் கற்களை நாம் பார்க்கலாம். இந்தக் கற்களை தெய்வமாக தமிழக மக்கள் வணங்குகிறார் கள். இந்தக் கற்கள் பெரும்பாலும் கடவுள் அம்சமாக கருதப்படுகிறது.

 அந்த இடமே அபூர்வமாக இருந்தது. பொதிகை மலையில் இந்தக் கற்களை யார் கொண்டுவந்து வைத்தார்கள். நமக்கு வியப்பாக இருந்தது. அகத்திய மாமுனிவர் பிரதிஷ்டை செய்தது, அல்லது அவர் வணங்கியது என்று எந்த ஒரு பின்னணி வரலாறும் இதில் புகுத்தப்படாமல் இருப்பது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.  நிறைய நேரம் அந்தக் கற்களை நின்று ரசித்துப் பார்த்தோம். தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.

  15 நிமிடத்தில் அதிரி கேம்ப் வந்த டைந்தோம். இதை "கேம்ப் 6' என்று சொல்கிறார்கள்.

   காட்டுக்குள் ஒரு பங்களா இருந்தது.

  முழுக்க முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்ட அந்தக் கட்டிடம் நம்மை ஆச்சரியப்பட வைத்தது. அங்குதான் இரவு தங்கப்போகிறோம். 

பங்களா வாசலில் ஒருவர் நின்று கொண்டு, எங்கள் உடம்பில் அட்டை இருக்கிறதா என சோதித்துப் பார்த்து உள்ளே அனுப்பினார். 

இருட்டுக்குள் அந்த பங்களாவில் தங்கி இருக்கும் நேரம், அட்டை தொந்தரவு வந்துவிடக் கூடாது என்பதற்கான முன்னேற்பாடு, இந்த அட்டை பரிசோதனை. 

 அங்கே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் இருந்தனர். ஒரு பக்கம் அவர்களுக்கு உணவு சமைத்தபடி இருந்தனர் கைடுகள். மற்றவர்கள் தட்டில் கஞ்சி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

  ஓலையால் வேயப்பட்ட அந்தக் குடில் உள்ளே கும்மிருட்டாக இருந்தது. பசியோடு வந்த காரணத்தினால்  சாப்பாடு வாங்க தட்டை தூக்கிக்கொண்டு சென்றோம். கொதிக்கக் கொதிக்க கஞ்சியை ஊற்றினார்கள்.  

சிறிது நேரத்தில் ஆறி விட்டது. நல்ல உரைப்பு இருந்தது. ஆனால், அது நமக்கு தேவாமிர்தம் போலத்தான் இருந்தது. சிலர் வத்தல் குழம்பை வைத்து சாப்பிட்டனர். சிலர் துவையல்  வைத்து சாப்பிட்டனர். ரசித்து சாப்பிட்டு பசி தீர்த்துக்கொண்டோம். 

அறுசுவை உணவு என்று சொல்லமுடியாது. ஆனால் அதைவிட சுவையாக இருந்தது அகத்தியரின் மலையில் நமக்குக் கிடைத்த உணவு.

  இருட்டிவிட்ட காரணத்தினால் அனைவரும் உறங்கச் சென்றோம். ஊரில் இரவு 12 மணிக்குத்தான் தூக்கம் வரும். ஆனால் 6 மணிக்குச் சாப்பிட்டுவிட்டு 7 மணிக்குத் தூங்கப்போகும் பழக்கம் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தது. பங்களாவுக்குள் மின்சார வசதி இல்லை. மெழுகுவர்த்தி வைத்திருந்தார்கள். எல்லோரது கையிலும் டார்ச் லைட் இருந்தது. வெüயே சூரியன் மூலம் மின்சாரம் பெறும் இரண்டு சோலார் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

6 மணிக்குமேலே இந்த இடங்கüல் கடுவா, யானை போன்ற மிருகங்கள் வரும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்த காரணத்தி னால் யாருமே வெüயே செல்லவில்லை. சமையல் அறை, குüயலறை ஆகியவற்றுக்கு தண்ணீர் பைப் மூலம் வந்துகொண்டு இருந்தது. சற்று மேடான இடத்தில் விழும் ஒரு அருவியில் இருந்து சிறிய நீர் தேக்கம் அமைத்து,  அந்த இடத்தில் இருந்து பைப் மூலம் இங்கே தண்ணீர் கொண்டுவருகிறார்கள். 

மிக சுத்தமான தண்ணீர், அதுவும் மூலிகை கலந்த தண்ணீர், குடிக்கக் குடிக்க சுவையாக இருந்தது. 

 தூங்க செல்லும் முன்பு நாளைக்கு நாம் காணப்போகும் அகத்தியர் குடியிருக்கும் பொதிகை மலையைக் காணவேண்டும் என்று ஆசை. எனவே அந்த மலையை நோக்கிப் பார்த்தோம். அங்கே நாங்கள் பார்த்த பார்த்த அபூர்வ காட்சி எங்கள் மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது.

  ஆம் பொதிகை மலை மீது வானத்தில் அந்த அற்புத நட்சத்திரம் ஒüர்ந்தது!

 சிவனடியார் வெüயே வந்தார். "ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி' என உணர்ச்சி பூர்வமாக கத்தியவர். "பெருமானே நாளை உம்மை காணும் முன்பே, இன்று உமது காட்சியை தந்து விட்டாயே' என்றார். 

 ஆம். எங்களுக்கு அகத்தியர் அருள் புரிந்து விட்டார். அகத்தியப் பெருமான் ஒü வடிவில் காட்சி தந்துவிட்டார்.

 பங்களா உள்ளே இருந்தவர்கள் அந்த நட்சத்திர தரிசனத்தினை கண்டு  கை கூப்பி நின்றனர்.

 பெரும்பாலும் சினிமாக்கüல்தான் செட் போட்டு இருப்பார்கள். தேவலோகம் என்பதை பார்த்து இருப்போம். ஆனால் நாங்கள் தற்போது அதைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆம். இது பொதிகை மலை அல்ல; அகத்தியர் மலை.

 அவரின் அருள்பெற்ற மலை.

 இதை சிவன் மலை என்றும் கூறுவர். ஆகவே தான் காணிகள் இந்த மலை மீது ஏற மாட்டார்கள். சிவனின் சிரசில் எங்களது  கால் படக்கூடாது எனவே இந்த மலையை சுற்றி வருகிறோம். பொதிகை மலையில் ஏற மாட்டோம் என்பார்கள்.

 பங்களாவிலும் அகத்தியரைப் போற்றி, அந்த விளக்கு வெüச்சத்தில் பக்தர்கள் பக்தி இசை இசைக்க ஆரம்பித்து விட்டனர்.

 எங்கும் நிறைந்த அகத்தியப்பெருமானே...  உமது அருளோ அருள் எனஆச்சர்யப்படும் வகையில் எங்களுக்கான ஆச்சர்யம் அங்கே காத்திருந்தது.

 ஆம். நாங்கள் காலையில் பார்த்த மலை பொதிகை மலையா? இல்லை  பனிபொதிந்த கயிலாய மலையா? என வியக்கும் வண்ணம் அகத்தியர் அருளால் இயற்கை அன்னை எங்களை வரவேற்க தயார் ஆகிக்கொண்டிருந்தாள்.

   இரண்டாம் மலை ஏற்றத்துக்கு எங்களை தயார் படுத்தவும், சற்று ஓய்வு எடுக்கவும் நாங்கள் உறங்கச் சென்றோம்.

(சித்தர்களைத் தேடும் பயணம் தொடரும்)

om011025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe