தாரித்ர யோகம்
ஒரு ஜாதகத்தில் சூரியனிலிருந்து சனி வரை ஏழு பாவங்களில் ஏழு கிரகங்களும் இருந்தால், தாரித்ர யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பலவித கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மனதில் பல கவலைகள் இருக்கும். சிலருக்கு தந்தையால் சந்தோஷம் குறைவாக இருக்கும்.
சகட யோகம்
ஒரு ஜாதகத்தில் ஏழு கிரகங்களும் லக்னத்தில், ஏழாம் பாவத்தில் இருந்தால், சகட யோகம் உண்டாகும்.
இதில் பிறப்பவர்கள் வாகனங்களை ஓட்டுபவர்களாக இருப்பார்கள். பிறருக்குப் பணி செய்வார்கள்.
நந்தா யோகம்
ஒரு ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் இரண்டு பாவங்களில், மூன்று கிரகங்கள் ஒரு பாவத்தில் இருந்தால், நந்தா யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் சந்தோஷமாக வாழ்வார் கள். நீண்ட ஆயுள் இருக்கும். ஊரில் பெரிய மனிதர் களாக இருப்பார்கள்.
சர்வாத்தாத்தா யோகம் (சர்வார்த்த சித்தி யோகம்)
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் குரு, நான்காம் பாவத்தில் சுக்கிரன், ஏழாம் பாவத்தில் புதன், பத்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்களின் மனதில் நினைக்கும் அனைத்து காரியங்களும் நடக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். ராஜ யோகம் இருக்கும். பெரிய மனிதர்களாக இருப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.
ராஜஹன்ஸ யோகம்
ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுஷ் ஆகிய ராசிகளில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் அரசரைப்போல வாழ்வார் கள். சந்தோஷ வாழ்க்கை இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும்.
மகாகாத்தக் யோகம்
ஒரு ஜாதகத்தில் ராகுவுடன் சந்திரன் இருந்தால், பாவ கிரகங்களுடன் குரு சேர்ந்து சந்திரனையும் ராகுவையும் பார்த்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் கெட்டவர்களாக இருப் பார்கள். மோசமான செயல்களைச் செய்வார்கள். பாவ காரியங்களில் ஈடுபடுவார்கள். மனதில் நிம்மதி இருக்காது.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/yogam-2025-12-18-13-13-00.jpg)