பலிவத்ஹந்த் யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு செவ்வாய், சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் பார்வை இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.
இதில் பிறப்பவர்களுக்கு மிருகங்களால் ஆபத்து உண்டாகும். காளைகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
ஹட்ஹந்த் யோகம்
ஒரு ஜாதகத்தில் 11-ஆவது பாவத்தில் சந்திரன், கடக ராசியில
பலிவத்ஹந்த் யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு செவ்வாய், சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் பார்வை இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.
இதில் பிறப்பவர்களுக்கு மிருகங்களால் ஆபத்து உண்டாகும். காளைகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
ஹட்ஹந்த் யோகம்
ஒரு ஜாதகத்தில் 11-ஆவது பாவத்தில் சந்திரன், கடக ராசியில் சூரியன் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.
இதில் பிறப்பவர்கள் பிடிவாத குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். அந்த குணம் காரணமாக சிலருக்கு மரணம்கூட நடக்கும். பிடிவாத குணத்தை விட்டால், இவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.
விருட்ச்ஹந்த் யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தின்மீது ராகுவின் பார்வை இருந்தால், அந்த ராகுவை சனி பார்த்தால், இந்த யோகம் உண்டாகும்.
இதில் பிறப்பவர்கள் எப்போதும் மரங்களை விட்டு தூரத்தில் இருக்கவேண்டும். மரம் இவர்களின்மீது விழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதை இவர்கள் தவிர்ப்பது நல்லது.
நாசாசேத யோகம்
ஒரு ஜாதகத்தில் 6-ஆம் பாவத்தில் சுக்கிரன், லக்னத்தில் செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.
இதில் பிறப்பவர்களுக்கு அஸ்திர பயம் இருக்கும். வாள், கம்பு, துப்பாக்கி ஆகியவற்றை பயன்படுத்தும் சமயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவற்றால் மரணம்கூட நடக்கலாம்.
கர்ணசேத யோகம்
ஒரு ஜாதகத்தில் சந்திரனின்மீது சனியின் பார்வை இருந்தால், லக்னத்தில் செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.
இதில் பிறப்பவர்கள் நீரில் கவனமாக இருக்கவேண்டும். நெருப்பிற்கு அருகில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். நீர் அல்லது நெருப்பால் இவர்களுக்கு மரணம்கூட வரலாம்.
பாதஹஞ்ச யோகம்
ஒரு ஜாதகத்தில் சனி. சுக்கிரனுடன் இருந்தால் அல்லது குருவும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், அவற்றின்மீது எந்த சுப கிரகத்தின் பார்வையும் இல்லாதிருந்தால், இந்த யோகம் உண்டாகும்.
இதில் பிறப்பவர்களின் காலில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு காலில் ஊனம் இருக்கும்.
செல்: 98401 11534
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us