சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், மனைவியால் சந்தோஷம் இருக்காது. பணவரவு குறைவாக இருக்கும். இரக்க குணம் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் உயரமாக இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். மனநோய் இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் பல சிரமங்கள் இருக்கும். மனநோய் இருக்கும். பண வரவு இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். சிலருக்கு படிப்பு இருக்காது. ஆனால், அறிவாளிகளாக இருப்பார்கள். தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது. வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். படிப்பிற்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். சிலர் ஏதாவது பணிசெய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு படிப்பார்கள். சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். 

தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது. 36 வயதிற்குப் பிறகு, பண வரவு இருக்கும். நல்ல மனைவி இருப்பாள்.

Advertisment

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். 

தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். ஜாதகர் தன் சுய சம்பாத்தியத்தை வைத்து குடும்பத்தை நடத்துவார். புகழ் இருக்கும். கோப குணம் இருக்கும். 

ஜாதகர் பலசாலியாக இருப்பார்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நல்ல பதவியில் இருப்பார். சிலர் அரசியலில் இருப்பார்கள். சிலர் சிறந்த வர்த்தகர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். காலில் அடிபடும். அடிக்கடி பயணம் இருக்கும். அதன்மூலம் பெயர், புகழ் கிடைக்கும். பண வரவு இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். எனினும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். மனைவிக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக  இருப்பார். கண்ணில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். பண வரவு இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் நோய் இருக்கும். மனநோய் இருக்கும். சீதளம் இருக்கும். 32 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். 

பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் சுயமாக சம்பாதிப்பார். நல்ல வாரிசு இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், கடவுள் நம்பிக்கை இருக்கும். ஆடம்பரச் செலவுகள் இருக்கும். உறவினர்களுடன் பகை இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். சிலர் வழக்கறிஞராக இருப்பார்கள். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். தைரிய குணம் இருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை இருக்கும். பண வரவு இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், பல தொழில்கள் இருக்கும். வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். அதிகமான சிந்தனைகள் இருக்கும். மனநோய் இருக்கும். பல வாகனங்கள் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். வீண்செலவுகள் இருக்கும். சிலர் போதைக்கு அடிமை யாக இருப்பார்கள். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். பயணம் செய்யும்போது, ஏதாவது பிரச்சினை உண்டாகும். கோப குணம் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

செல்: 98401 11534