சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், இரக்க குணம் இருக்கும். ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார். பல இடங்களுக்குப் பயணம் இருக்கும். குடும்பத்தில் மூத்தவராக இருப்பார். தைரிய குணம் இருக்கும். பண வரவு இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். ஏதாவது கலையில் நிபுணராக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார். வெளிநாடுகளுக்குச் செல்வார். பேச்சாற்றல் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் வெளியூரில் வாழ்வார்கள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பல தொழில்களைச் செய்பவராக இருப்பார். வாரிசுகளுடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடு இருக்கும். நல்ல மனைவி அமைவாள். கடவுள் நம்பிக்கை இருக்கும். ஜாதகர் நன்கு சம்பாதிப்பார். நீண்ட ஆயுள் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும். பல தொழில்கள் இருக்கும். நல்ல வாரிசு அமையும். கோபம் வரும். சொந்த வீடு, மனை, வாகனம் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். சிலர் அரசியலில் பதவியில் இருப்பார்கள். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பண வரவு இருக்கும். பயணம் இருக்கும். பல தொழில்கள் இருக்கும். காலில் பிரச்சினை இருக்கும். கோபம் அதிகமாக வரும். தூக்கம் குறைவாக இருக்கும். ஜாதகர் சம்பாதித்த பணத்தைச் சேமிப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலானவராக இருப்பார். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். பல தொழில்கள் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். பண வசதி இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் நன்கு சம்பாதிப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், கடவுள் நம்பிக்கை இருக்கும். பல தொழில்கள் இருக்கும். அதிக பயணங்கள் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி அமைவாள். துணிச்சல் குணம் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல பிரச்சினைகள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் பல விஷயங்கள் அறிந்தவராக இருப்பார். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் வைத்தியர்களாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார் கள். பெயர், புகழ் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், பல தொழில்கள் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.
பண வசதி இருக்கும். வாரிசுகளுடன் சந்தோஷம் இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும். தலைவலி இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், தலைவலி இருக்கும். ஜாதகர் வெளியூரில் சென்று பணம் சம்பாதிப்பார். நல்ல பண வசதி இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். சிலர் துறவிகளாக இருப்பார்கள்.