சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்.... 26.07.25

sun

 

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். குறைவாக பேசுவார். பெண் மோகம் இருக்கும். தர்ம காரியங்களைச் செய்வார். நல்ல வாரிசு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் பல மொழிகள் அறிந்தவராக இருப்பார். பல விஷயங்களைத் தெரிந்தவராக இருப்பார். கலை, சாஸ்திரம் ஆகியவற்றில் ஈடுபாடு இருக்கும். 31 வயதிற்குப் பிறகு, நல்ல பண வசதி இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் வெளியூரில் வாழுவார். இளம்வயதில் படிப்பு விஷயத்தில் பிரச்சினைகள்

 

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். குறைவாக பேசுவார். பெண் மோகம் இருக்கும். தர்ம காரியங்களைச் செய்வார். நல்ல வாரிசு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் பல மொழிகள் அறிந்தவராக இருப்பார். பல விஷயங்களைத் தெரிந்தவராக இருப்பார். கலை, சாஸ்திரம் ஆகியவற்றில் ஈடுபாடு இருக்கும். 31 வயதிற்குப் பிறகு, நல்ல பண வசதி இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் வெளியூரில் வாழுவார். இளம்வயதில் படிப்பு விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கும். குடும்பத்தில்  பிரச்சினைகள் இருக்கும். கவனமாக இருக்கவேண்டும். பல தொழில்கள் இருக்கும். நல்ல மனைவி இருப்பாள். நல்ல வாரிசு இருக்கும். காலில் பாதிப்பு இருக்கும். சீதளம் பிடிக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். 

வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் பல விஷயங்களை அறிந்தவராக இருப்பார். சொந்த வாகனம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். அரசியலில் செல்வாக்கு இருக்கும். சிலர் உயர்ந்த அரசு பதவியில் இருப்பார்கள். சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் இருப்பார்கள். வீடு, வாகனம் இருக்கும். சந்தோஷ வாழ்க்கை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், கண்ணில் பிரச்சினை இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். கோப குணம் இருக்கும். ஆணவம் இருக்கும். துணிச்சல் இருக்கும். ஜாதகர் யாரையும் மதிக்க மாட்டார். ஆடம்பர செலவுகள் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான மனைவி இருப்பாள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். தைரிய குணம் இருக்கும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் பல விஷயங்கள் தெரிந்தவராக இருப்பார். சிலர் சில நேரங்களில் சில சிக்கல்களில் மாட்டிக்
கொள்வார்கள். உடல்நல பாதிப்பு இருக்கும். 

சிலர் வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் தொழில் செய்வார்கள். கடுமையாக உழைப்பார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். கடவுள் நம்பிக்கை இருக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். ஜாதகர் தந்தையின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார். பூர்வீக சொத்து இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், அரசியலில் ஈடுபாடு இருக்கும். சிலர் அரசு பதவிகளில் இருப்பார்கள். சிலர் அரசாங்கத்தின் உதவியுடன் தங்களின் தொழிலைச் செய்வார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள். வீடு, மனை, வாகனம் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். பல தடங்கல்களைக் கடந்து படிக்க வேண்டியதிருக்கும். ஜாதகர் பல விஷயங்களை அறிந்தவராக இருப்பார். அவருக்கு தன் பெற்றோருடன் நல்ல உறவு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். சந்தோஷ வாழ்க்கை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் இருக்கும். ஜாதகர் துணிச்சல் குணமுள்ளவராக இருப்பார். அலைச்சல் இருக்கும். சிலர் வெளிநாட்டிற்கு அடிக்கடி பயணிப்பார்கள். சிலர் வெளிநாட்டில் வாழ்வார்கள். ஜாதகர் பல மொழிகள் அறிந்தவராக இருப்பார். 

வாழ்க்கையின் பிற்பகுதி மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

செல்: 98401 11534

bala190725
இதையும் படியுங்கள்
Subscribe