சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். தர்ம விஷயங்களைப் பற்றி பேசுவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெயர், புகழுடன் இருப்பார்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், கண்ணில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் வைத்தியர்களாக இருப்பார்கள். சிலர் மனநல மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் கதாசிரியர்களாக இருப்பார்கள். சிலர் ஆசிரியர்களாக இருப்பார்கள். சிலர் குருநாதராக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பிரச்சினைகள் இருக்கும். சிலர் வெளியூரில் படிப்பார்கள். நல்ல படிப்பு இருக்கும். தைரிய குணம் இருக்கும். சீதள நோய் இருக்கும். அழகான மனைவி இருப்பாள். கடவுள் நம்பிக்கை இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தாயால் சந்தோஷம் கிடைக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும்.
ஜாதகர் வசதியான குடும்பத்தில் பிறப்பார். வீடு, மனை, வாகனம் இருக்கும். தந்தையுடன் சிறிய விவாதம் இருக்கும். தொழில் நன்றாக நடக்கும்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். உயர் பதவியில் இருப்பார். சிலர் அரசு தூதர்களாக இருப்பார்கள். சிலர் கல்லூரி பேராசிரியராக அல்லது பிரின்ஸிபாலாக இருப்பார்கள். வயிற்றில் நோய் இருக்கும். புனித பயணம் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். கா-ல் பிரச்சினை இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். நல்ல படிப்பு இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும். சிலருக்கு மனநோய் இருக்கும். சிலர் தொழிலுக்காக வெளிநாட்டிற்குச் செல்வார்கள். ஜாதகர் ரசித்து உணவைச் சாப்பிடுவார்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். அழகான மனைவி அமைவாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலர் அக்கவுண்டன்டாக இருப்பார்கள். சிலர் சார்ட்டட் அக்கவுண்டன்டாக இருப்பார்கள். சிலர் பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ்வாக பெரிய நிறுவனத்தில் இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் நோய் இருக்கும். ஜுரம் வரும். வயிற்றில் நோய் இருக்கும். ஆழமான சிந்தனை இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் மனநல மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் பெரிய விவசாயியாக இருப்பார்கள். சிலருக்கு கிட்னியில் பிரச்சினை இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். சிலர் குருநாதராக இருப்பார்கள். சிலர் கோவிலைக் கட்டுவார்கள். சிலர் கோவில் தர்மகர்த்தாவாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல படிப்பு இருக்கும். நல்ல பதவி இருக்கும். சிலர் தர்மகுருவாக இருப்பார்கள். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். சிலர் கல்லூரி பிரின்ஸிபாலாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். சிலர் பெரிய அரசியல்வாதியாக இருப்பார்கள்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். நல்ல பண வசதி இருக்கும். ஆழ்ந்த சிந்தனை இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். ஜாதகர் தன் வாக்கைக் காப்பாற்றுபவராக இருப்பார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் வெளியூரில் வாழ்வார்கள். சிலர் வெளிநாட்டில் பெயர், புகழுடன் இருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். ஜாதகர் சிக்கனமாக இருப்பார். நல்ல வாரிசு இருக்கும். ஜாதகர் பிறரிடம் சண்டை போடுவார்.
செல்: 98401 11534