செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்.... (18.07.25)

tues

 

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், மனம் ஒரே நிலையில் இருக்காது. நல்ல பேச்சாற்றல் இருக்கும். பண வசதி இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். எனினும், இல்வாழ்க்கையில் அவ்வப்போது சில சிக்கல்கள் இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இளமையில் படிப்பில் பிரச்சினை இருக்கும். தைரிய குணம் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். சிலர் கடுமையாக பேசக்கூடிய தர்மகுருவாக இருப்பார்கள். மனைவியுடன் விவாதம் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். எனினும், ஜாதகர் அதைச் சரி பண்ணிவிடுவார்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், காதில் பிரச்சினை இரு

 

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், மனம் ஒரே நிலையில் இருக்காது. நல்ல பேச்சாற்றல் இருக்கும். பண வசதி இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். எனினும், இல்வாழ்க்கையில் அவ்வப்போது சில சிக்கல்கள் இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இளமையில் படிப்பில் பிரச்சினை இருக்கும். தைரிய குணம் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். சிலர் கடுமையாக பேசக்கூடிய தர்மகுருவாக இருப்பார்கள். மனைவியுடன் விவாதம் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். எனினும், ஜாதகர் அதைச் சரி பண்ணிவிடுவார்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், காதில் பிரச்சினை இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். பல தொழில்கள் இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். ஜாதகர் பயணம் செய்து பணம் சம்பாதிப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். அடிக்கடி பயணம் செய்வார். சிலர் பெரிய தொழிலதிபராக இருப்பார்கள்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். சிலர் காவல் துறை அதிகாரியாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். 

வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் விருதுகள் வாங்குவார்கள்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். பணவசதி இருக்கும். ஆடம்பர செலவுகள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். தைரிய குணம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.       

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல படிப்பு இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். கோப குணம் இருக்கும். தலையில் முடி குறைவாக இருக்கும். சிலருக்கு தலை வழுக்கையாக இருக்கும். அழகான மனைவி இருப்பாள். எனினும், ஜாதகர் மனைவியிடம் கோபத்துடனும் ஆணவத்துடனும் பேசுவார்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபக்காரராக இருப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். தோல் நோய் இருக்கும். காலில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். மனதில் சந்தோஷம் எப்போதும் இருக்காது.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். தந்தையுடன் விவாதம் இருக்கும். பண வசதி இருக்கும். முதுகுத் தண்டில் சிறிய பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் பெரிய தொழிலதிபராக இருப்பார்கள். வீடு, மனை, வாகனம் இருக்கும். சிலர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களாக இருப்பார்கள்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். கோப குணம் படைத்தவராக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். நல்ல வாரிசு இருக்கும். பல தொழில்கள் இருக்கும். நல்ல வருமானம் வரும். தர்மச் செயல்களுக்காக செலவழிக்க வேண்டியதிருக்கும்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். இளம் வயதில் கஷ்டங்கள் இருக்கும். பணவரவு இருக்கும். பயணம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். சிலருக்கு கண்கள் பெரிதாக இருக்கும். 

ஜாதகர் குடும்பத்திற்காக செலவு செய்வார். எனினும், அவரை யாரும் மதிக்க மாட்டார்கள். பல சிக்கல்களுடன் வாழ்க்கையை நடத்த வேண்டியதிருக்கும்.

செல்: 98401 11534

bala180725
இதையும் படியுங்கள்
Subscribe