"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.' -குறள்
வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப (செயல்பட்டால்) திட்டமிடும் அறிவுடையோருக்கு அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது.
எண் கணிதரீதியாக நாம் பிறந்த தேதிக்கு எது ராசியான வாகன எண் என்பதை சாஸ்திர வாயிலாக அறிவோம்.
எந்த எண் அதிகமான நற்பலனைத் தரும்?
எண்- 1
எந்த மாதம், எந்த வருடம் பிறந்தாலும், அவர்களுக்கு ராசியான வாகன எண், வர்ணம், எதிர்வினை செய்யும் எண், அதிர்ஷ்டம் தரும் வயதுகள், ராசியான லக்னம் இவை போன்றவற்றை பார்ப்போம். உங்களுக்கு ராசியான எண் 1, 4, 8 நன்மை தரும். உதாரணமாக 5230=10=1 வாகனத்தின் இறுதியில் வரும் நான்கு எண்களை பார்க்கவேண்டும். எண்- 8 என்றாலே அச்ச உணர்வு என்றாலும் (ஹெவி லோட்) அதிக பாரங்களை சுமந்துவரும் தன்மைக்கு எண்- 8 கச்சிதமானது. நீண்டதூரப் பயணத்திற்கு எண் 8 துணைவரும். கெடுதலுக்கு துணைவரும் எண் என்றும் கூறலாம். எண் 8 சிலருக்கு நல்ல சந்தர்ப்பங்களைத் தரும்.
எண் 1-ன் அதிர்ஷ்ட தினம்: ஞாயிறு, திங்கள். அதிர்ஷ்டமான லக்னம்:
விருச்சிகம், சிம்மம், மேஷம். ராசியான நிறம்: லைட் ரெட், பாதாம் பருப்பு தோல் நிற பிரவுண் (லைட் பிரவுண்) நீலம் தவிர்க்கவும். வாழ்வில் மாற்றம் தரும். வயதுகள்: 19, 28, 37, 46, 54, 64, 73, 82 ஆகியவை.
எண்- 2
நல்வழிப்படுத்தும் எண்கள் 2, 7, 9 ஆகியவை. உதாரணமாக 5231=11=2. நீங்கள் பிரயாணத்தின்போது தங்கும் ஹோட்டல் அறை எண் இவ்வாறு இருத்தல் நன்று. ஆனால் 102=3 இந்த எண்ணை தவிர்க்கவும். அதிர்ஷ்டம் தரும் கிழமை: ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகியவை
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.' -குறள்
வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப (செயல்பட்டால்) திட்டமிடும் அறிவுடையோருக்கு அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது.
எண் கணிதரீதியாக நாம் பிறந்த தேதிக்கு எது ராசியான வாகன எண் என்பதை சாஸ்திர வாயிலாக அறிவோம்.
எந்த எண் அதிகமான நற்பலனைத் தரும்?
எண்- 1
எந்த மாதம், எந்த வருடம் பிறந்தாலும், அவர்களுக்கு ராசியான வாகன எண், வர்ணம், எதிர்வினை செய்யும் எண், அதிர்ஷ்டம் தரும் வயதுகள், ராசியான லக்னம் இவை போன்றவற்றை பார்ப்போம். உங்களுக்கு ராசியான எண் 1, 4, 8 நன்மை தரும். உதாரணமாக 5230=10=1 வாகனத்தின் இறுதியில் வரும் நான்கு எண்களை பார்க்கவேண்டும். எண்- 8 என்றாலே அச்ச உணர்வு என்றாலும் (ஹெவி லோட்) அதிக பாரங்களை சுமந்துவரும் தன்மைக்கு எண்- 8 கச்சிதமானது. நீண்டதூரப் பயணத்திற்கு எண் 8 துணைவரும். கெடுதலுக்கு துணைவரும் எண் என்றும் கூறலாம். எண் 8 சிலருக்கு நல்ல சந்தர்ப்பங்களைத் தரும்.
எண் 1-ன் அதிர்ஷ்ட தினம்: ஞாயிறு, திங்கள். அதிர்ஷ்டமான லக்னம்:
விருச்சிகம், சிம்மம், மேஷம். ராசியான நிறம்: லைட் ரெட், பாதாம் பருப்பு தோல் நிற பிரவுண் (லைட் பிரவுண்) நீலம் தவிர்க்கவும். வாழ்வில் மாற்றம் தரும். வயதுகள்: 19, 28, 37, 46, 54, 64, 73, 82 ஆகியவை.
எண்- 2
நல்வழிப்படுத்தும் எண்கள் 2, 7, 9 ஆகியவை. உதாரணமாக 5231=11=2. நீங்கள் பிரயாணத்தின்போது தங்கும் ஹோட்டல் அறை எண் இவ்வாறு இருத்தல் நன்று. ஆனால் 102=3 இந்த எண்ணை தவிர்க்கவும். அதிர்ஷ்டம் தரும் கிழமை: ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகியவை. அதிர்ஷ்டம் தரும் லக்னம்: மேஷம், விருச்சிகம், மிதுனம். ராசியான வர்ணம்: வெள்ளை பால் நிறம். கிரீம் கலர். தவிர்க்கப்படவேண்டிய வர்ணம்: கருப்பு, நீலம் ஆகியவை. மாற்றம் தரும் வயதுகள். 20, 29, 38, 47, 56, 65, 74 ஆகியவை. 5, 8 ஆகிய எண்களைத் தவிர்க்கவும். வாகனம் நிறுத்தும் திசை: (கார்ஷெட்) வடமேற்கில் அமைதல் நன்று. வருடத்தில் ராசியான மாத கால அளவு: 16.7 (ஜூலை) முதல் 16.8 (ஆகஸ்ட்) மற்றும் 13.5 (மே) முதல் 13 (6) ஜூன் இவ்வாறாக இருக்கும்.
எண்- 3
எண் 3, 6, 9 நன்றாக வழிநடத்தும். உதாரணமாக 5232=12=3. நீண்ட தூரப்பயணத்திற்கு கச்சிதமாக செயல்படும். அதிர்ஷ்ட தினம்: செவ்வாய், வியாழன், ஞாயிறு. அதிர்ஷ்டமான லக்னம்: மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம். ராசியான நிறம்: மஞ்சள் மேக நிறம், இளம் பச்சை ஆகியவை. மாற்றம் தரும் வயதுகள்: 21, 28, 39, 48, 57, 66, 75, 84. தவிர்க்கப்படவேண்டிய வர்ணம்: ஆரஞ்ச். உங்களுக்கு பக்க துணை வரும் எண்களாக 1, 7, 9, 2 நல்லவையே 5-ஆம் எண் தவிர்க்கவும். உங்களுக்கு பக்கபலமாக துணைவரும் கிரகங்கள். குரு, சந்திரன், செவ்வாய், சூரியன் ஆகியோர். வியாழன் ஒருபொழுது விரதம் கடைப்பிடித்தல் மிக நல்லது. வாகன ஆசை நிறைவேறும்.
எண்- 4
அதிர்ஷ்டமான வாகன எண்: 1, 4, 8. இதுவும் துணைபுரியும். உதாரணமாக 5233=13=4. யோகம் தரும். லக்னம்: கடகம், சிம்மம் ஆகியவை. எல்லா வருடமும் அதிர்ஷ்டம் தரும் ஆங்கில மாதம்: 19 ஜூலைமுதல், ஆகஸ்ட் 23 தேதிவரை மாற்றம் தரும். வயதுகள்: 22, 31, 40, 49, 58, 67, 76, 85, 94 ஆகியவை. ராசியான வர்ணம்: இளம் மஞ்சள், இளம் நீலம், தங்க நிறம் பொருத்தமானது. ராசியான நாட்கள்: திங்கள், ஞாயிறு, சனி ஆகியவை. ஆங்கில மாதத்தில் கீழே தரப்பட்டுள்ள தேதியில் பிறந்த பெண்ணை வாழ்க்கையோடு இணைத்தால் அதிக நன்மைகள் பெறலாம். எந்த வருடத்திலும், மாதத்திலும் 1, 4, 8, 13, 17, 22, 26, 28, 31 ஆகிய தேதிகளில் பிறந்தோரை மணந்தால் குடும்பம் பல நன்மைகளை பெற்றுத்தரும்.
எண்- 5
அதிர்ஷ்டமான வாகன எண்கள்: 5, 3, 9 ராசியானது. 5234=14=5. இந்த வாகன எண் நம்முடைய கௌரவத்தை மேலும் மேலும் உறுதி செய்யும். அரசியல் மற்றும் பொதுநல சேவை செய்வோருக்கு ஏற்றம் தரும் எண். நீண்ட தூரப் பயணம் செய்யும்போது சார்பு எண்ணான 3, 9 தேதியில் பிறந்தோர் ஒன்றாக சவாரி செய்தால், தடங்கலில்லா பிரயாணத்தை உணரலாம். அதிர்ஷ்டம் தரும் வயதுகள்: 23, 32, 41, 50, 68, 77, 86, 95 ஆகியவை. வாகனத்தின் ராசி வர்ணம்: பச்சை ஆலிவ் கிரீன், கிரீன் பைஸ் இவை நன்று. சிவப்பு மற்றும் கருப்பு நிறம் தவிர்ப்பது நல்லது. ராசியான நாட்கள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி. 5 தேதியில் பிறந்தோர் வாழ்க்கை துணையாக: 3, 5, 9, 14, 18, 21, 23, 27, 30 தேதியில் பிறந்தோரை தேர்வு செய்யலாம். நீண்ட தடைகள் விலக, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய, பச்சை நிற ஆடைகள் தானம் பவளம், அமுல் பட்டர். கதம்ப பூக்கள் நன்று. எமரால்ட் ராசிக்கல் அணியலாம்.
எண்- 6
அதிர்ஷ்டம் தரும் வாகன எண்கள்: 2, 4, 5, 8 ஆகியவை. தவிர்க்கப்பட வேண்டியவை: 1, 7, 9 உங்களுக்கு ஆதரவுதாம். கிரக நாதர்கள் புதன், சனி, ராகு ஆகியோர். நல்ல ராசிகள்: மிதுனம், துலாம். ராசியான ஆங்கில மாதங்கள்: 20 ஏப்ரல்முதல் மே 19 மற்றும் 22 செப்டம்பர்முதல் 21 அக்டோபர்வரை. நல்ல மாற்றம் தரும் வயதுகள்: 4, 33, 42, 51, 60, 69, 78, 85, 94 ஆகியவை. ராசி வர்ணம்: கிரிப்டல் ஒயிட், லைட் ப்ளூ. ஸ்கை ப்ளூ (மேக வர்ணம்). ராசியான நாள்: வெள்ளி, தவிர்க்கப்படவேண்டிய நிறம்: டார்க் எல்லோ (கடுமையான மஞ்சள்) டார்க் ரெட் ஆகியவை. வாழ்க்கை துணைக்கு ஏற்ற பிறந்த தேதி எண்கள். 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 ஆகியவை. இந்த தேதியில் பிறந்தோரோடு கூட்டு வியாபாரம் தொழில் செய்யலாம். எண் 6 புகழை சுலபமாக்கும்.
எண்- 7
அதிர்ஷ்டமான வாகன எண்: 2, 6, 7 ஆகியவை. உதாரணமாக வாகனத்தின் கடைசி நான்கு எண்கள்: 5236=16=7 இவ்வாறு அமைவது மிக நல்வழி காட்டும் எண். 106=7. இவ்வாறான ஹோட்டல் தங்கும் அறையும் ராசியானது. நீங்கள் தவிர்க்கவேண்டிய எண். 4, 5, 8 ஆகியவை. ராசியான நாட்கள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் ஆகியவை. மாற்றம் ஏற்படும் வயதுகள்: 25, 34, 43, 52, 61, 70, 79, 88 ஆகியவை. ராசியான வர்ணம்: லைட் ப்ளூ (இளம் நீலம்) லைட் பிரவுண் மற்றும் லைட் எல்லோ (இளம் மஞ்சள்). தவிர்க்கப்பட வேண்டிய வர்ணம். கருப்பு- சிவப்பு. ராசியான திசை: கிழக்கு, வடகிழக்கு. ராசியான லக்னம்: ரிஷபம், துலாம்.
இவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக பொருத்தமான தேதியில் பிறந்தோராக: 2, 6, 7, 11, 15, 16, 24, 25 மற்றும் தேதி 29-ல் பிறந்தோரும் பொருத்தமானவர்கள். இவர்களுக்கு ராசியான ஆங்கில மாதம்: 21 ஜூலை முதல் 25 ஜூலை வரையிலும் எல்லா வருடமும் ராசியானதாக அமையும்.
எண்- 8
அதிர்ஷ்டம் தரும் வாகன எண்கள்: 8, 1, 4 ஆகியவை. 5237=17=8. பொதுவில் எண் 8 என்றாலே தயக்கம் ஏற்படும். ஆனால் எண் 5, 6 இவையும் சாதகமாகவே செயல்படும். தவிர்க்கப்பட வேண்டியவை: 3, 9 ஆகியவை. உங்களுக்கு துணை கிரகங்கள் புதன், சுக்கிரன் ஆகியவை. ராசியான லக்னங்கள்: ரிஷபம், துலாம், மகரம், கும்பம். ஆங்கில மாதத்தில் யோகம் தரும் கால அளவு: 21 டிசம்பர்முதல் 19 ஜனவரிவரை மற்றும் 20 பிப்ரவரி முதல் 18 மார்ச்வரை. ராசி தினம்: சனி, புதன் ஆகியவை மாற்றம் ஏற்படும். வயதுகள்: 26, 35, 44, 53, 62, 71, 80, 89 இருவர் சேர்ந்து கூட்டாக இணைந்து செயல்பட ஏற்ற பிறந்த நாள் எண்கள்: 1-4-8-10, 13, 17, 19, 22, 26, 28, 31 ராசியான வர்ணம். டார்க் பிரவுண், நீலம். (ப்ளூ) கருப்பு நிற பிராணிகளுக்கு உணவூட்டல் நல்ல பரிகாரம். யோகமான திசை மேற்கு.
எண்- 9
உங்களுக்கு எண் 9 மிக ராசியான வாகன எண் 9 தான் 5238=18=9. இருப்பினும் நீங்கள் வியாபாரம், தொழிற்சாலை நடத்துபவர் எனின் 3, 6, 9 நல்ல பக்கபலமாக செயல்படும். செவ்வாய் துணைபுரிவார். பகை எண்ணாக 4, 8 தவிர்த்தல் நன்று. மாற்றம் ஏற்படும் வயதுகள்: 27, 36, 45, 54, 63, 72, 81, 90 ஆகியவை. நல்ல நாட்கள்: செவ்வாய், சூரியன், குரு, சந்திரன். பகையாக கருதப்பட வேண்டியவர்கள்: ராகு, புதன். கூட்டு வியாபாரம் மற்றும் வாழ்க்கைத் துணைக்கு ஏற்ற. பிறந்த தேதிகள்: 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 30. ஆங்கில மாதத்தில் நல்ல பலன் தருபவை: ஏப்ரல் 13 முதல் 12 மே மற்றும் 14 நவம்பர்முதல் 14 ஜனவரிவரை. ராசியான வர்ணம்: வெர்மலின், ஆரஞ்ச், ரெட் நல்லவை. கெடுதலானவை, கருப்பு, இன்டிகோ கரும் பச்சை ஆகியவை. நல்ல காரியங்களுக்கு துணைவரும். நல்ல எண் 9. இந்த எண்ணுடைய வாகனத்தை பொதுவில் எவர் செலுத்தினாலும் அதிக தொல்லை தராத எண். குருபகவானை வணங்கி செயல்பட்டால் அதிக நன்மை சுலபமாகும்.
செல்: 93801 73464