தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது, உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், பாமர மக்கள் தான். மதம், இனம், சாதியென்ற பேதமில்லாமல் மக்களை தங்கள் வசமாக்கி, அவர்கüன் ஆதரவால் ஓட்டுகளை பெறுபவர்கள் பதவியை அடைவார்கள்.

Advertisment

தேர்தலில், தங்கள் அணி வெற்றி பெற வேண்டும், என்று வழி கேட்டு நாடி பலன் பார்க்க வந்தவர், அகத்தியர் கூறியதை தன் கட்சி தலைமையிடம்  கூற, கட்சியின் தலைமை உளவுத்துறை மூலம், தொண்டர்கüன் மனம், விருப்ப நிலையை அறிந்து, அவர்கள் விருப்பப்படி , எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தன் கொள்கையை ஏற்று, தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பியவர்களை, தன் கட்சி சின்னத்திலேயே போட்டியிட வைத்து, வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. 

Advertisment

தேர்தலில் வெற்றி பெற கடவுள், பூஜை, யாகம், பிரார்த்தனை பலன் தராது.  தொண்டர்கள், மக்கள் ஆதரவு தான் வெற்றி தரும் என்பதை தலைமை புரிந்து செயல்பட்டு வென்றது.  

2016 தேர்தலில் முதன்மையாக செயலாற்றிய எதிர்க்கட்சி தங்கள் கூட்டணி தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எதிரணியினரிடம் பணம் பெற்றுக்கொண்டு கட்சியை தோல்வியடையச் செய்தது  தெரிந்தது.

Advertisment

அதனால்தான் 2021-ம் ஆண்டு தேர்தலில்  கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்காமல் அவர்கüன் பலம், மக்கüன் ஆதரவு நிலையறிந்து, குறைவான தொகுதிகளைத் தந்து போட்டியிடச் செய்தது. அதனால் சொந்தக் கட்சி உறுப்பினர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணி செய்தனர். அதிக இடங்கüல் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தனர் இதுவும் அகத்தியர் காட்டிய வழிதான் என்றேன்.

ஒரு நண்பர் நாங்கள் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் கூறவில்லையே, 2026 தேர்தலின் நிலை என்ன? வெற்றிப் பெறப் போவது எந்த அணி? என்பதை அகத்தியரிடம் கேட்டுக் கூறுங்கள் என்றார்.

ஓலையைப் பிரித்துப் படித்தேன், 2026 தேர்தல், ஒரு குழப்பமான சூழ்நிலையில் சுழன்று கொண்டு இருக்கின்றது. ஆலமரம் போன்ற ஒரு கட்சியில் நிர்வாகிகளாக இருக்கும் வேர்கள், சிலரின் சூழ்ச்சியால் வெட்டப்பட்டுக் கொண்டு  இருக்கிறது.  பணத்தாசை, பதவி ஆசையைக் காட்டி, சிலர் இந்த மரத்தின் வேர்களை துண்டித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் என்ற விழுதுகளால்தான், மரம் கீழே விழாமல் இன்னமும் தாங்கிக் கொண்டு இருக்கிறது.  தொண்டர் களுக்காக, பாமர மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி இது. அதனால் மரத்தின் பக்க வேர்களான, மேல் மட்ட தலைவர்களையும், கட்சி நிர்வாகிகளையும் பற்றிக் கவலைப்படாமல், விழுது களாகிய தொண்டர்களை அவர்கüன் விருப்பம், கொள்கை பிடிப்பினை மதித்து, அறிந்து செயல்படவேண்டும்.

வரப்போகும் தேர்தலில் மேற்கு, வடமேற்கு, தெற்கு, தென்மேற்கு சார்ந்த திசைகüல் உள்ள மாவட்டங்கüல், முக்கிய கட்சிகளுக்கு தங்கள் கட்சிக்காரர்களாலும், கூட்டணி கட்சியினராலும் துரோகம், குழப்பம், இழப்புகள் உண்டாகும். 

எனவே கவனமாக அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

2026 தேர்தல் நெருங்கும் சமயத்தில், அரசியலில் மாற்றங்கள் உண்டாகும். அப்போது யாருக்கு பதவி என்ற பழம் நழுவி, ஆட்சி என்ற பாலில் விழும் என்பதைக் கூறுகின்றேன் , இப்போது கட்சி தொண்டர்களும், மக்களும் அமைதியாக இருக்கிறார்கள் என்று சொல்லி, தேர்தலில் வெற்றி பெறுவது நம்பிக்கையினால் அல்ல, நடைமுறையில் செய்கின்ற செயல் மூலம் தான். யார் ஆட்சியில் அமர்வார் என்பதை அகத்தியர் சூட்சுமமாக கூறி விட்டார். புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். என்றேன். 

2026 தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று அகத்தியர் நேரடியாக கூறவில்லையே, அவரும் குழப்பி விட்டாரே என்று  நண்பர் கூறினார். 

நான் அர்த்தம் பொதிந்த புன்னகையோடு நண்பர்களை அனுப்பி வைத்தேன்.                      

-செல் 9944113267