சத்துசாகர் யோகம் - 1
"நான்கு கடல்களின் யோகம்' என்று இதற்கு அர்த்தம். ஒரு ஜாதகத்தில் 4 கேந்திர ஸ்தானத்தில் அனைத்து கிரகங்களும் இருந்தால், அதற்குப் பெயர் சத்துசாகர் யோகம்.இதில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராக இருப் பார்கள். அரசரைப்போல வாழ்வார்கள். இல் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். தைரிய குணம் இருக்கும்.
சத்துசாகர் யோகம்- 2
ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளில் இருந்தால், அதுதான் சத்துசாகர் யோகம்- 2.இதில் பிறந்தவர்கள் மன்னரைப்போல வாழ்வார்கள். ஆட்சி செய்வார்கள். வாழ்க்கையில் கஷ்டமே இருக்காது. பகைவர்களை வென்று, சந்தோஷமாக வாழ்வார்கள்.
அமர யோகம்
ஒரு ஜாதகத்தில் அனைத்து பாவ கிரகங்களும் கேந்திர ஸ்தானத்தில் இருந்தால் அல்லது அனைத்து சுப கிரகங்களும் கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், அமர யோகம் உண்டாகும்.பாவ கிரகங்களால் அமர யோகம் உண்டானால், குரூரமான மனிதர்களாக இருப்பார்கள். சுப கிரகங்களால் அமர யோகம் உண்டானால், நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் நன்கு பழகுவார்கள். அனைவருக்கும் நல்லவற்றைச் செய்வார்கள். எல்லாரும் மதிக்கும் பெரிய மனிதர் களாக இருப்பார்கள்.
சாப யோகம்
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன், துலா ராசியிலும், செவ்வாய், மேஷ ராசி யிலும், குரு, சுய ராசியான தனுசு அல்லது மீன ராசியிலும் இருந்தால், அதற்குப் பெயர் சாப யோகம்.இதில் பிறப்பவர்கள், பிறக்கும்போதே ராஜயோகத்தில் பிறப் பார்கள். அரசரைப்போல வாழ்வார்கள். அனைத்து வசதிகளும் இருக்கும்.
தண்ட யோகம்
ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங் களும் கடகம், மிதுனம், மீனம், கன்னி, தனுசு ராசிகளில் இருந்தால், தண்ட யோகம் என்று பெயர். இதில் பிறப்பவர்கள் சிம்மாசனத்தில் அமர்வார்கள். தைரியசாலிகளாக இருப்பார்கள். பல விஷயங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள். பேச்சாற்றல் இருக்கும்.
அம்ஸ யோகம்
ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங் களும் மேஷம், கும்பம், தனுசு, துலாம், மகரம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் இருந்தால், அதுதான் அம்ஸ யோகம்.இதில் பிறப்பவர்கள் தலைவராக இருப்பார்கள். மன்னராக பிரகாசிப் பார்கள். சகல ஐஸ்வர்யங்களும் இருக்கும்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/yogam-2025-11-21-16-00-46.jpg)