ராஜமந்திரி யோகம்

ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், அதற்கு எந்த பாவ கிரகங்களின் பார்வையும் இல்லாமலிருந்தால், எந்த பாவ கிரகங்களும் குருவுடன் இல்லாமலிருந்தால், அதுதான் ராஜ மந்திரி யோகம். இதில் பிறப்பவர்கள் பல விஷயங்களையும் அறிந்தவர்களாக இருப்பார்கள். அறிவாளியாக இருப்பார்கள். நீதி நூல்களைப் படித்தவர் களாக இருப்பார்கள். ராஜாவுக்கு மந்திரி இருக்கும் நிலையில் இருப்பார்கள்.

Advertisment

விச்சேத யோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் இருந்தால், அதன்மீது ராகு, சனி, சூரியன் ஆகியவற்றின் பார்வை இருந்தால், அதற்குப் பெயர் விச்சேத யோகம். இதில் பிறப்பவர்கள் பெரிய பதவியில் இருக்கும்போது, திடீரென பதவி அவர்களிடமிருந்து போய்விடும்.

Advertisment

சுய இச்சா ம்ருத் யோகம்

ஒரு ஜாதகத்தில் கேந்திரத்தில் செவ்வாய், 7-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், அதற்குப் பெயர் சுய இச்சா ம்ருத் யோகம். இதில் பிறப்பவர்கள் தங்களின் மரணம் எப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதேபோல நடக்கும்.

பாலாரிஷ்ட யோகம் 

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 7-ஆம் பாவத்தில் சந்திரன், 8-ஆம் பாவத்தில் பாவ கிரகம், லக்னத்தில் சுக்கிரன், சூரியன் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் இளம் வயதிலேயே மரணம் அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Advertisment

அனஃபா யோகம் 

ஒரு ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 12-ஆம் பாவத்தில் சூரியனைத் தவிர, வேறு எந்த கிரகங்கள் இருந்தாலும், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர் கள் அழகான தோற்றத் துடன் இருப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். நல்ல பண வரவு இருக்கும். தைரிய குணம் இருக்கும்.

சுனஃபா யோகம் 

ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு 2-ஆம் பாவத்தில் சூரியனைதவிர, வேறு எந்த கிரகங்கள் இருந்தாலும், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். சிலர் கலைஞர்களாக இருப்பார்கள். சிலர் இசை மேதைகளாக இருப்பார்கள். 

அழகான தோற்றம் இருக்கும். பிறரை ஈர்க்கக் கூடியவர் களாக இருப்பார்கள்.

     செல்: 98401 11534