செவ்வாய் தசை ஏழு வருடங்கள் இருக்கும். செவ்வாய் தசையில் விபத்து நடக்கும். நெருப்பு பயம் இருக்கும். நோய் பயம் இருக்கும்.பண இழப்பு உண்டாகும்.
திருட்டு நடக்கும். வர்த்தகத்தில் கஷ்டங்கள் இருக்கும்.
கடன் இருக்கும். பல சிரமங்கள் இருக்கும்.
செவ்வாய் தசை நடக்கும்போது, செவ்வாய் உச்சமாக இருந்தால், பெயர், புகழ் இருக்கும். பூமி, வீடு வாங்குவார்கள். செவ்வாய் 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள்.
செவ்வாய் சுய ராசியில் இருந்தால், மேஷம் அல்லது விருச்சிகத்தில் இருந்தால், அதே லக்னமாக இருந்தால், ராஜயோகம் உண்டாகும்.கடன் குறையும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
செவ்வாய் பலவீனமாக இருந்தால், சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். நமைச்சல் இருக்கும். செவ்வாய் பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. தைரியம் இருக்காது. கோபம் வரும். கடன் அதிகமாக இருக்கும். பலவீனமான செவ்வாய் 6-ஆம் பாவத்தில் இருந்தால், 7, 8-ஆம் பாவங்களில் இருந்தால், 12-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.
செவ்வாய் லக்னத்தில் உச்சமாகவோ அல்லது சுயவீட்டிலோ இருந்தால், ரூட்சக யோகம் உண்டாகும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். தைரிய குணம் இருக்கும். பூமி, வாகனம் வாங்குவார்.
செவ்வாய் 2-ஆம் பாவத்தில் இருந்தால், வீடு, மனை, வாகனம் இருக்கும். செவ்வாய் பலவீனமாக இருந்தால், ஜாதகர் கடுமையாக பேசுவார். சிலர் தாங்கள் கூற நினைப்பதைக் கூறாமல் இருப்பார்கள். சிலருக்கு திக்கு வாய் இருக்கும். இளமையில் நெருப்பால் விபத்து உண்டாகும்.
செவ்வாய் 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
செவ்வாய் 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். பணவரவு இருக்கும். செவ்வாய் பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப் பட்டால், சிலருக்கு மறுமணம் நடக்கும்.
செவ்வாய் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். சிலர் விவசாயியாக இருப்பார்கள். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். செவ்வாய் பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால், வாரிசு பிறப்பதில் பிரச்சினை இருக்கும். பெண் களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.
செவ்வாய் 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
ஜாதகர் விரோதிகளை வெல்வார். சிலருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். சகோதரர்கள் ஏமாற்றுபவர்களாக இருப் பார்கள். பிறர் சூனியம் வைப்பார்கள்.
செவ்வாய் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். செவ்வாய் பாவ கிரகத் துடன் இருந்தால் அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால், சிலருக்கு மறுமணம் நடக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. செவ்வாய் குருவுடன் இருந்தால் அல்லது குருவால் பார்க்கப்பட்டால், இல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
செவ்வாய் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கடுமையாக பேசுவார். செவ்வாய் பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது பாவ கிரகத்தைப் பார்த்தால், உடல்நலம் கெடும்.
செவ்வாய் 9-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும்.முதுகுத் தண்டில் பிரச்சினை இருக்கும். தந்தை- மகன் உறவு சுமாராக இருக்கும். கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது.
செவ்வாய் 10-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் குலதீபக் யோகத்தில் பிறந்தவராக இருப்பார். குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். அனைத்து காரியங்களையும் தைரியமாக முடிப்பார். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள்.
செவ்வாய் 11-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும்.பணவரவு இருக்கும். குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும்.
செவ்வாய் 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண்செலவுகள் இருக்கும். கோபம் வரும்.
இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் தான் செய்யவேண்டிய காரியங் களைச் செய்யாமல் வீண் விஷயங்களில் கவனத்தைச் செலுத்துவார்.
செவ்வாய் தசையில் செவ்வாய் அந்தரம் நடந்தால், சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. வீண் சண்டை இருக்கும். பிற பெண்களுடன் தொடர்பு இருக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். பித்தம் இருக்கும்.
செவ்வாய் தசையில் ராகு அந்தரம் நடந்தால், நெருப்பு பயம் இருக்கும். திருட்டு பயம் இருக்கும். விபத்து நடக்கும். பண இழப்பு ஏற்படும். நோய்களின் பாதிப்பு இருக்கும்.
செவ்வாய் தசையில் குரு அந்தரம் நடந்தால், ஜாதகர் தன் குருநாதர்களை வணங்குவார். கடவுள்களை வழிபடுவார். புனித இடங்களுக்குச் செல்வார். ஆட்சியாளர்களிடம் பயம் இருக்கும்.
செவ்வாய் தசையில் சனி அந்தரம் நடந்தால், குடும்பத்தில் யாருக்காவது விபத்து நடக்கும்.
செவ்வாய் தசையில் புதன் அந்தரம் நடந்தால், திருட்டுச் செயல் நடக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். நெருப்பு பயம் இருக்கும். கொடூரமான மனிதனால் கஷ்டம் உண்டாகும்.
செவ்வாய் தசையில் கேது அந்தரம் நடந்தால், மழைக் காலத்தில் மின்னல், மின்சாரத்தால் பாதிப்பு இருக்கும். வீட்டில் திருட்டு நடக்கும். சுக்கிரன் அந்தரம் நடந்தால், நோய் வரும்.வீண் விவாதம் நடக்கும். கடன் இருக்கும். பண கஷ்டம் இருக்கும்.வெளிநாட்டுப் பயணம் இருக்கும்.
செவ்வாய் தசையில் சூரியன் அந்தரம் நடந்தால், பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் எந்த காரியத்தையும் சர்வசாதாரணமாக முடிப்பார். பெரிய மனிதர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவார். அவர் பேசுவதை மற்றவர்கள் கேட்பார்கள்.
செவ்வாய் தசையில் சந்திரன் அந்தரம் நடந்தால், மணி, மாணிக்கம், நவரத்தினம் ஆகியவற்றை வாங்குவார்கள். பல விருதுகள் கிடைக்கும். சந்தோஷ வாழ்க்கை இருக்கும்.
செல்: 98401 11534