ரு மனிதருக்கு சூரிய தசை வந்தால், அது ஏழு வருடங்களுக்கு இருக்கும். சூரியன் ஒரு ராஜ கிரகம். அதனால் அந்த மனிதருக்கு ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், உச்சமாக இருந்தால் (மேஷ ராசி), அதை குரு பார்த்தால் அல்லது சூரியன் லக்னத்திலோ,  10-ஆவது பாவத்திலோ இருந்து, அதை குரு பார்த்தால், அந்த மனிதர் அந்த தசையில் ராஜ யோகத்தை அனுபவிப்பார். 

Advertisment

சூரியன் பலவீனமாக இருந்தால், நீசமாக இருந்தால் (துலா ராசி), அந்த தசா காலத்தில் அந்த மனிதருக்கு சந்தோஷம் இருக்காது.பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். 

சூரியன் லக்னத்தில் பலவீனமாக இருந்தால், ஒரு மனிதருக்கு சூரிய தசை நடந்தால், அவருக்கு பயம் இருந்துகொண்டே இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். பித்தம் இருக்கும். தூக்கம் சரியாக வராது. இல்வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். தேவையற்ற பயணங்கள் இருக்கும். தந்தையின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். கண்ணில் நோய் இருக்கும்.

Advertisment

சூரியன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சிலர் வெளியூரில் இருப்பார்கள்.

சூரியன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் தந்தையைவிட்டு பிரிந்துசென்று வாழ்வார்கள். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், படிப்பு நன்றாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். ஒரு ஆண் வாரிசு இருக்கும்.

Advertisment

சூரியன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் குறைவாக இருப்பார்கள். அடிக்கடி பயணம் இருக்கும். தலைவ- இருக்கும்.

சூரியன் 7-ஆம் பாவத்தில் நன்றாக இருந்தால், அழகான மனைவி இருப்பாள். பலவீனமான சூரியன் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும்.

சூரியன் 8-ஆம் பாவத்தில் நன்றாக இருந்தால், ராஜயோகம் உண்டாகும். சூரியன் பலவீனமாக இருந்தால், வயிற்று வ- இருக்கும்.பண பற்றாக்குறை இருக்கும்.

சூரியன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.

சூரியன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசு பதவியில் இருப்பார்கள். நல்ல படிப்பு இருக்கும். சிலருக்கு அரசிய-ல் பெயர், புகழ் இருக்கும்.

சூரியன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், பண வசதி இருக்கும். பெயர், புகழ் இருக்கும்.

சூரியன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் வெளியூரில் வாழ்வார்கள். தீடீர் செலவுகள் உண்டாகும். சிலருக்கு விபத்து நடக்கலாம். 

சூரிய தசையில் சூரியன் அந்தரம் நடக்கும்போது, அரசாங்கத்தால் பெயர், புகழ் கிடைக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். வயிற்றில் பித்தம் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

சூரிய தசையில் சந்திரன் அந்தரம் நடக்கும்போது, சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். பண வரவு இருக்கும். வெளிநாட்டு பயணம் இருக்கும். பகைவர்களுடன் சமரசம் உண்டாகும். 

சூரிய தசையில் செவ்வாய் அந்தரம் நடக்கும் போது, தங்கம், வெள்ளி, மாணிக்கம், ரத்தினம் ஆகியவற்றை வாங்குவார்கள். பண வரவு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். புதிய வாகனம் வாங்குவார்கள்.

சூரிய தசையில் புதன் அந்தரம் நடக்கும்போது, பல பிரச்சினைகள் உண்டாகும். நமைச்சல் இருக்கும். இதயத்தில் நோய் இருக்கும்.

சூரிய தசையில் குரு அந்தரம் நடக்கும் போது, தர்மச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். 

பணவரவு இருக்கும். நோய் குறையும். புதிய பதவி கிடைக்கும்.

சூரிய தசையில் ராகு அந்தரம் நடக்கும் போது, நோய் வரும். பெயர் கெடும். பயம் வரும். வீண் செலவு இருக்கும்.

சூரிய தசையில் சனி அந்தரம் நடக்கும் போது, அரசாங்கத்தால் பிரச்சினை உண்டாகும். வழக்கு உண்டாகும். பதவி இழப்பு ஏற்படும். சகோதரர்களுடன் சரியான உறவு இருக்காது. உட-ல் காயம் உண்டாகும்.

சூரிய தசையில் சுக்கிரன் அந்தரம் நடக்கும் போது, தலைவ- இருக்கும். ஜுரம் வரும். பேதி உண்டாகும்.

சூரிய தசையில் கேது அந்தரம் நடக்கும் போது, வெளியூரில் வாழ வேண்டியதிருக்கும். வீண்செலவுகள் இருக்கும். அதிக பயணங்கள் இருக்கும்.                   

செல்: 98401 11534