ரு மனிதரின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால், அவர் அரசரைப் போல வாழ்வார். அழகாக இருப்பார். ஆடம்பரமாக செலவழிப்பார். தன் பேச்சால் அனைவரையும் கவர்வார். பல பெண்களுடன் அவருக்கு உறவு இருக்கும். சுக்கிரன் உச்சமாக இருந்தால், அனைத்து சந்தோஷங்களும் இருக்கும். வீட்டில் பல விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்கும்.

Advertisment

நவரத்தினங்கள் இருக்கும். விலை மதிப்புள்ள கார் இருக்கும்.

சுக்கிரன் குருவுடன் இருந்தால், ஜாதகர் நல்ல பேச்சாளராக இருப்பார். அறிவாளியாக இருப்பார்.

Advertisment

சுக்கிரன் நீசமாக இருந்தால், குடும்பத்தில் பெண்ணின் சாபம் இருக்கும். அதனால், பலருக்கு திருமணம் நடக்காது. திருமணம் நடந்தால், அதில் சந்தோஷம் இருக்காது.

சுக்கிரன் நீசமாக இருந்து, அஸ்தமாக இருந்தால், குடும்பத் தில் யாராவது ஒரு பெண்ணுக்கு இளம் வயதில் மரணம் நடந்திருக்கும். சிலருக்கு உடலில் உயிரணுக்களின் அளவு குறைவாக இருக்கும்.

Advertisment

சுக்கிரன் சனியுடன் இருந்தால், ஜாதகர் நல்ல பண வசதியுடன் இருப்பார். நோய்கள் வரும்.

சுக்கிரன் சந்திரனுடன் இருந்தால், காதல் திருமணம் நடக்கும். எனினும், எப்போதும் சண்டை இருக்கும்.

சுக்கிரன் செவ்வாயுடன் இருந்தால், பெண் மோகம் இருக்கும். சுக்கிரன், செவ்வாயை பாவ கிரகம் பார்த்தால், உடலுறவு நடக்கும்போது, சீக்கிரமே விந்து வெளியே வந்துவிடும்.

சுக்கிரன் புதனுடன் இருந்தால், இளம் வயதிலேயே பெண் மோகம் இருக்கும்.

சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். பிறரை ஈர்க்கக்கூடிய தோற்றம் இருக்கும். அழகான மனைவி இருப்பாள்.

சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். சூழலுக்கு ஏற்றபடி பேசுவார். மனைவியை மதிப்பார்.

சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பல பிரச்சினைகள் இருக்கும். சகோதரி களுடன் நல்ல உறவு இருக்கும்.

சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், மாளவ்ய யோகம் உண்டாகும். 

அதனால், பல வாகனங்கள் இருக்கும். பெரிய வீடு இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும்.

சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் சிறந்த பேச்சாளராக இருப்பார். பெண் வாரிசுகள் அதிகமாக இருப்பார்கள்.

சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், பெண் மோகம் இருக்கும். கள்ளத் தொடர்பு இருக்கும்.

சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல மனைவி இருப்பாள். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சுக்கிரன் சரியில்லையெனில், சிலருக்கு திருமணம் நடக்காது.

சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் நோய் இருக்கும். ஆழமான சிந்தனை இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். மது பழக்கம் இருக்கும். அதனால், ஈரலில் பாதிப்பு இருக்கும்.

சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் கலைத்துறையில் இருப்பார்கள். சிலர் துணி வர்த்தகத்தில் இருப்பார்கள். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பார்கள்.

சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான மனைவி இருப்பாள். பெண் மோகம் இருக்கும். நல்ல பணவரவு இருக்கும்.

சுக்கிரன் 12 -ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். நல்ல சம்பாத்தியம் இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். ஆடம்பரமாக செலவழிப்பார். நல்ல மனைவி அமைவாள்.

சுக்கிர தசையில் சுக்கிரன் அந்தரம் நடந்தால், பணவரவு இருக்கும். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். பெயர், புகழ் இருக்கும்.

சுக்கிர தசையில் சூரியன் அந்தரம் நடந்தால், வயிற்றில் நோய் இருக்கும். அரசியல்வாதிகளால் பிரச்சினைகள் உண்டாகும்.

விதவையால் பிரச்சினை ஏற்படும். ஜாதகரைப் பலரும் ஏமாற்றுவார்கள்.

சுக்கிர தசையில் சந்திரன் அந்தரம் நடந் தால், வயிற்றில் நோய் இருக்கும். தலைவலி வரும். நகத்தில் பிரச்சினை ஏற்படும். மூட்டுவலி வரும். சீதளம் பிடிக்கும். திருமணம் பல தடங்கல்களுக்குப் பிறகு நடக்கும்.

சுக்கிர தசையில் செவ்வாய் அந்தரம் நடந்தால், பித்தம் இருக்கும். நல்ல பதவி கிடைக்கும். மனதில் சந்தோஷம் இருக்கும். வீடு, வாகனம் இருக்கும்.

சுக்கிர தசையில் ராகு அந்தரம் நடந்தால், தேவையற்ற விவாதம் இருக்கும். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. மனதில் பயம் இருக்கும். மனைவியுடன் சண்டை நடக்கும்.

சுக்கிர தசையில் குரு அந்தரம் நடந்தால், பண வரவு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பூமி, வீடு இருக்கும். நகைகளை வாங்குவார்கள். மகன் பிறப்பான். 

அவனுக்குத் திருமணம் நடக்கும். செல்வச் செழிப்புடன் நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள்.

சுக்கிர தசையில் சனி அந்தரம் நடந்தால், வயதான பெண்களுடன் ஜாதகருக்குத் தொடர்பு இருக்கும். பகைவர்கள் குறைவார்கள். பல சிக்கல்களில் மாட்டி, வெற்றிகரமாக ஜாதகர் வெளியே வருவார்.

சுக்கிர தசையில் புதன் அந்தரம் நடந்தால், பண வரவு இருக்கும். உயர்ந்த விருதுகள் கிடைக்கும். பெயர், புகழ் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். நினைத்ததைச் சாதிப்பார்கள்.

சுக்கிர தசையில் கேது அந்தரம் நடந்தால், சகோதரர்களுடன் விவாதம் இருக்கும். ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். மனைவியுடன் விவாதம் இருக்கும். சந்தோஷமும் இருக்கும். கவலையும் இருக்கும்.

செல்: 98401 11534