ந்திர தசை பத்து வருடங்கள் நடக்கும்.

ஒரு மனிதருக்கு சந்திர தசை நடக்கும்போது, அவர் மனதில் தைரியத்துடன் இருப்பார். பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல பண வரவு இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். ஜாதகர் நல்ல உணவைச் சாப்பிடுவார்.

Advertisment

இனிப்பின்மீது விருப்பம் அதிகமாக இருக்கும். சுகமாக தூங்குவார். ஜாதகர் தங்கத்தை வாங்குவார். பல காரியங் களிலும் வெற்றி கிடைக்கும்.

 ஆனால், சந்திரன் பலவீனமாகவோ, பாவ கிரகத்துடனோ இருந்தால், பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால், வயிற்றில் நோய் இருக்கும். தூக்கம் சரியாக வராது. சிலருக்கு மன நோய் இருக்கும்.சீதளம் வரும். சிலருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். பண கஷ்டம் இருக்கும்.

சந்திரன், சனியுடன் இருந்தால், பல சிக்கல்கள் இருக்கும். நோய்கள் இருக்கும். மன கவலைகள் இருக்கும். சந்திரன், குருவால் பார்க்கப்பட்டால் அல்லது குருவுடன் சந்திரன் இருந்தால் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தால் (1, 4, 7, 10-ஆம் பாவத்தில்), ராஜயோகம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்‌. பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசியலில் பெரிய பதவியில் இருப்பார்கள்.

Advertisment

சந்திரன் லக்னத்தில் இருந்தால், சுய வீட்டில் இருந்தால் அல்லது உச்சமாக இருந்தால் ராஜயோகம் இருக்கும். 

32 வயதிற்குப்பிறகு, பெயர், புகழ் இருக்கும். நல்ல மனைவி இருப்பாள். 

பிறரை ஈர்க்கும் சக்தி இருக்கும்.

சந்திரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பேச்சாற்றல் இருக்கும். ஜாதகர் குடும்பத்தின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வாழ்வார். மாமியார் வீட்டில் சிறிய சிக்கல்கள் இருக்கும்.

சந்திரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், சுய சம்பாத்தியத்தில் வாரிசுகள் சந்தோஷமாக வாழ்வார்கள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைத்து சம்பாதிப்பார். சில நேரங்களில் பயம் இருக்கும்.

Advertisment

சந்திரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், தாயால் சந்தோஷம் கிடைக்கும். வீடு, வாகனம் இருக்கும்.

சந்திரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், பிறரை ஈர்க்கும் சக்தி இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பெண் வாரிசுகள் அதிகமாக இருப்பார்கள்.

சந்திரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், சக்திக்குமேல் கடன் வாங்கி மாட்டிக்கொள்ளும் நிலை உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். அடிக்கடி தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கும்.

சந்திரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், மனம் நிலையாக இருக்காது.பெண் மோகம் இருக்கும். அழகான மனைவி இருப்பாள். நல்ல பண வரவு இருக்கும்.

சந்திரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் 8 வயதுவரை நோய் இருக்கும். மன தைரியம் குறைவாக இருக்கும். 14 வயதிற்குப் பிறகு, படிப்பு நன்றாக இருக்கும். ஆழமான சிந்தனை இருக்கும். கூச்ச சுபாவம் இருக்கும். கோபம் வரும்.

சந்திரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். ஜாதகர்  ஆராய்ச்சியாளராக இருப்பார்.

சந்திரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், பல தொழில்கள் இருக்கும். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள்.

சந்திரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். முதுகுத்தண்டில் நோய் இருக்கும். மன நோய் இருக்கும். ஆழமான சிந்தனை இருக்கும். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் ஆசிரியராக இருப்பார்கள். சிலர் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள்.

சந்திரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் இருக்கும். சிலர் அதிகமாக பேசுவார்கள். அதிகமாக சாப்பிடுவார்கள். அதிகமாக தூங்குவார்கள். சிலர் வெளியூரில் வாழ்வார்கள்.

சந்திர தசையில் சந்திர அந்தரம் நடந்தால், நல்ல ஆடைகளை அணிவார்கள். திருமணம் நடக்கும். வாரிசு பிறக்கும்.நன்கு தூக்கம் வரும். மனபலம் இருக்கும். கடவுளின் அருள் இருக்கும். நல்ல பண வரவு இருக்கும்.

சந்திர தசையில் செவ்வாய் அந்தரம் நடந்தால், பித்தம் இருக்கும்.நெருப்பு பயம் இருக்கும். விபத்து நடக்கலாம். பதவி உயர்வு கிடைக்காது.

சந்திர தசையில் ராகு 

அந்தரம் நடந்தால், விரோதிகள் அதிகமாக இருப்பார்கள். நோய்கள் இருக்கும். பண இழப்பு உண்டாகும்.சகோதரர்களுடன் பிரச்சினை இருக்கும்.

சந்திர தசையில் குரு அந்தரம் நடந்தால், பெயர், புகழ் இருக்கும்.வாகனம் இருக்கும். பண வசதி இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். ஜாதகர் தர்ம காரியங்களுக்குச் செலவழிப்பார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

சந்திர தசையில் சனி அந்தரம் நடந்தால், சகோதரர்களுடன் பிரச்சினை இருக்கும். பண இழப்பு உண்டாகும். பயம் இருக்கும்.ஏதாவது சோகச்செய்தி வரும். போதை பழக்கம் இருக்கும்‌. பல தோஷங்கள் உண்டாகும்.

சந்திர தசையில் புதன் அந்தரம் நடந்தால், வாகனம் வாங்கலாம்.பணவரவு இருக்கும். பல பொருட்கள் வந்துசேரும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திர தசையில் கேது அந்தரம் நடந்தால், மனநோய் இருக்கும்.பண இழப்பு ஏற்படும். ஏதாவது கெட்ட செய்தி வரும்.

சந்திர தசையில் சுக்கிரன் அந்தரம் நடந்தால், பெண் வாரிசு இருக்கும். முத்து, வைரம் வாங்கப்படும். ஜாதகருக்கு பிற பெண்களின் தொடர்பு இருக்கும்.

சந்திர தசையில் சூரியன் அந்தரம் நடந்தால், பகைவர்கள் குறைவார்கள். நோய் குறையும். தைரியம் கூடும். பெயர், புகழ் இருக்கும்.வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

செல்: 98401 11534