Advertisment

குரு தசையில் என்ன நடக்கும்?

guru


ரு மனிதருக்கு குரு தசை நடக்கும்போது, குரு நல்ல நிலைமையில் இருந்தால், அவருக்கு நல்ல படிப்பு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். நல்ல பதவி இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும்.

Advertisment

குரு கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், பல தோஷங்கள் குறையும். பல சந்தோஷங்கள் கிடைக்கும்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் இருந்தால், அரசாங்கத்தில் பெரிய பதவி கிடைக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் ஆசிரியராகவோ- பேராசிரியராகவோ இருப்பார்கள்.

குரு தசை நடக்கும்போது குரு நல்ல நிலைமையில் இருந்தால், திருமணம் நடக்கும். ஆண் வாரிசு பிறக்கும்.

ஒரு ஜாதகத்தில் குரு நீசமாக இருந்தால், பல கஷ்டங்கள் உண்டாகும். குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால் அல்லது நீசமாக இருந்து 5-ஆம் பாவத்தைப் பார்த்தால், எத்தனை வாரிசுகள் இர


ரு மனிதருக்கு குரு தசை நடக்கும்போது, குரு நல்ல நிலைமையில் இருந்தால், அவருக்கு நல்ல படிப்பு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். நல்ல பதவி இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும்.

Advertisment

குரு கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், பல தோஷங்கள் குறையும். பல சந்தோஷங்கள் கிடைக்கும்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் இருந்தால், அரசாங்கத்தில் பெரிய பதவி கிடைக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் ஆசிரியராகவோ- பேராசிரியராகவோ இருப்பார்கள்.

குரு தசை நடக்கும்போது குரு நல்ல நிலைமையில் இருந்தால், திருமணம் நடக்கும். ஆண் வாரிசு பிறக்கும்.

ஒரு ஜாதகத்தில் குரு நீசமாக இருந்தால், பல கஷ்டங்கள் உண்டாகும். குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால் அல்லது நீசமாக இருந்து 5-ஆம் பாவத்தைப் பார்த்தால், எத்தனை வாரிசுகள் இருந்தாலும், அவர்களால் ஜாதகருக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது. பெயர் கெடும். குரு பலவீனமாக இருந்தால், முதுகுத் தண்டில் பிரச்சினை ஏற்படும். காலில் அடிப்படும்.

குரு ராகுவுடன் இருந்தால், குரு சாண்டாள யோகம் உண்டாகும். அதனால் பல கஷ்டங்கள் ஏற்படும்.

ஒரு ஜாதகத்தில் குரு உச்சமாக இருந்தால், கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், ஹம்சயோகம் உண்டாகும். அதனால் ஜாதகர் பல நல்ல காரியங்களைச் செய்வார். அரசரைப்போல வாழ்வார்.

குரு, சந்திரன் சேர்க்கை கடக ராசியில் இருந்தால், கஜகேசரி யோகம் உண்டாகும்.

குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் இருந்தால், ராஜயோகம் இருக்கும்.

குரு லக்னத்தில் இருந்தால், பல தோஷங்கள் நீங்கும். ஜாதகர் குடும்பத்தில் மூத்தவராக இருப்பார். பல நல்ல காரியங்களைச் செய்வார்.

 குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பம் நன்றாக இருக்கும். 

35 வயதிற்குப்பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும்.

குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், சகோதரர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். ஜாதகர் பயணம் செய்து பணம் சம்பாதிப்பார்.தலைமுடி உதிரும். மனைவி அழகாக இருப்பாள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

குரு 4-ஆம் பாவத்தில் நல்லமுறையில் இருந்தால், அனைத்து வசதிகளும் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். குரு நீசமாக இருந்தால், தாயால் சந்தோஷம் குறைவாக இருக்கும். பல கஷ்டங்களைத் தாண்டி பணம் சம்பாதிக்க வேண்டியதிருக்கும்.

குரு 5-ஆம் பாவத்தில் நல்ல நிலைமையில் இருந்தால், பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். அரசாங்க பதவி இருக்கும். கேது அல்லது ராகுவுடன் குரு இருந்தால், வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு வாரிசு இருக்காது.

குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் குறைவார்கள்.ஒரு காலில் பிரச்சினை இருக்கும். குரு பாவ கிரகத்திலோ அல்லது நீசமாகவோ இருந்தால், பல கஷ்டங்கள் இருக்கும்.

குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கும். பண வரவு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், சகோதரர்களுடன் உள்ள உறவில் பிரச்சினை இருக்கும். பணத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். சிலருக்கு மூலநோய் இருக்கும். 40 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பிரச்சினை  இருக்கும்.

 குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும்.சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். பெயர், புகழ் இருக்கும். குரு பலவீனமாக இருந்தால், ஜாதகர் சொத்துகளை அழிப்பார். கடவுள் நம்பிக்கை இருக்காது. பல கஷ்டங்கள் இருக்கும்.

குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் நல்ல ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் சிறந்த ஆசிரியர்களாக இருப்பார்கள். சிலர் குடும்பத்தில் துறவியைப் போல இருப்பார்கள். நல்ல வாரிசு அமையும். வெளியே பெயர், புகழ் இருக்கும். வீட்டில் யாரும் மதிக்க மாட்டார்கள்.

குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் பேச்சு இருக்கும். பண வரவு இருக்கும்‌. ஜாதகர் தன் தந்தையின் சொத்தை அழிப்பார். சிலர் குடும்பத்திற்கு துரோகம் செய்வார்கள்.

குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலர் அவசியமற்ற அறிவுரைகளைக் கூறுவார்கள். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவார்கள். பண வசதி படைத்த குடும்பத்திலிருந்து மனைவி கிடைப்பாள். சிலருக்கு ராஜயோகம் இருக்கும்.

செல்: 98401 11534

bala111025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe