Advertisment

சனி தசையில் என்ன நடக்கும்?

saturn


ரு மனிதரின் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலைமையில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். சனி, கர்மகாரக கிரகம். 

Advertisment

ஜாதகத்தில் சனி உச்சமாக கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், பல கஷ்டங்களைக் கடந்து, சந்தோஷத்தைப் பார்ப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் பெரிய விவசாயியாக இருப்பார்கள். பல வீடுகள் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

Advertisment

சனி சுய வீட்டில் இருந்து, சுய ராசியில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் நிதானமாக வாழ்க்கையில் முன்னேறுவார்.

சனி சுக்கிரனுடன் நல்ல நிலைமையில் இருந்தால், லட்சுமி யோகம் உண்டாகும். அதனால் நல்ல பணவரவு இருக்கும்.

சனி புதனுடன் இருந்தால், நரம்புத் தளர்ச்சி உண்டாகும். நல்ல படிப்பு இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார்.

சனி சூரியனுடன் இருந்தால், தந்தையுடன் விவாதம் இருக்கும். சிலர் எஞ்சீனியர்களாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

சனி குருவுடன் நல்ல நிலை


ரு மனிதரின் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலைமையில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். சனி, கர்மகாரக கிரகம். 

Advertisment

ஜாதகத்தில் சனி உச்சமாக கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், பல கஷ்டங்களைக் கடந்து, சந்தோஷத்தைப் பார்ப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் பெரிய விவசாயியாக இருப்பார்கள். பல வீடுகள் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

Advertisment

சனி சுய வீட்டில் இருந்து, சுய ராசியில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் நிதானமாக வாழ்க்கையில் முன்னேறுவார்.

சனி சுக்கிரனுடன் நல்ல நிலைமையில் இருந்தால், லட்சுமி யோகம் உண்டாகும். அதனால் நல்ல பணவரவு இருக்கும்.

சனி புதனுடன் இருந்தால், நரம்புத் தளர்ச்சி உண்டாகும். நல்ல படிப்பு இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார்.

சனி சூரியனுடன் இருந்தால், தந்தையுடன் விவாதம் இருக்கும். சிலர் எஞ்சீனியர்களாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

சனி குருவுடன் நல்ல நிலைமையில் இருந்தால், நல்ல பேச்சாற்றல் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். சனி 6, 8, 12-ல் இருந்தால் மறுமணம் நடக்கும்.

சனி சந்திரனுடன் இருந்தால், தசா காலங்கள் சரியில்லையெனில், மனநோய் இருக்கும்.

சனி செவ்வாயுடன் நல்ல இடத்தில் இருந்தால், சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். அறிவாளிகளாக இருப்பார் கள். சனி லக்னத்தில், 4-ஆம் பாவத்தில், 7-ஆம் பாவத்தில், 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும்.

சனி ராகுவுடன் இருந்தால், வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும். சில நேரங்களில் ஏமாற்றம் உண்டாகும். 

சனி கேதுவுடன் இருந்தால், பொய் பேசுவார்கள். நோய்கள் இருக்கும். சிலர் துறவியாக இருப்பார்கள். சனி லக்னத்தில் உச்சமாக இருந்தால், ராஜயோகம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், சுய வீட்டில் அல்லது உச்சமாக இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டங்கள் இருக்கும். பிற்பகுதி நன்றாக இருக்கும்.

சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பண வசதி இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.

சனி 4-ஆம் பாவத்தில் சுய வீட்டிலோ உச்சமாக இருந்தால், பெரிய அளவில் சொத்து வாங்கலாம். சந்தோஷ வாழ்க்கை இருக்கும்.

சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், பெண் குழந்தைகள் அதிகமாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் குறைவார்கள். ஜாதகர் விரோதிகளை வெல்வார். வாய்வு தொல்லை, பித்தம் இருக்கும்.

சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும்.

சனி 8-ஆம் பாவத்தில் சுய வீட்டில் இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும்.

சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டங்கள் இருக்கும். பிற்பகுதியில் சந்தோஷம் இருக்கும்.

சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், பல சிக்கல்கள் இருக்கும்.வாழ்க்கை கடுமையாக இருக்கும். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.

சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் இருக்கும். 60 வயதிற்குப்பிறகு, ஒரு கா-ல் நோய் இருக்கும்.

சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் இருக்கும். சிலருக்கு போதை பழக்கம் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும்.

சனி தசையில் சனி அந்தரம் நடந்தால், நோய் இருக்கும். மகனுடன் விவாதம் நடக்கும். பெண்களால் புக்தி கெடும். வெளிநாட்டு பயணத்தால் பிரச்சினை ஏற்படும்.

சனி தசையில் புதன் அந்தரம் நடந்தால், பெயர், புகழ் இருக்கும்.வெற்றி கிடைக்கும். வசதியான வாழ்க்கை இருக்கும். நல்ல நண்பர்கள் இருப்பார்கள். பூமி வாங்கலாம். பண வரவு இருக்கும்.

சனி தசையில் கேது அந்தரம் நடந்தால், பித்தம் இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். சகோதரர்களுடன் விவாதம் இருக்கும். கெட்ட கனவுகள் வரும். அதிக சிந்தனைகள் உண்டாகும். கஷ்டங்கள் இருக்கும்.

சனி தசையில் சுக்கிரன் அந்தரம் நடந்தால், சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்கும். நண்பர்களுடன் நல்ல உறவு இருக்கும். 

ஜாதகர் மனைவியிடம் அன்பாக இருப்பார். வாரிசு இருக்கும். பண வசதி இருக்கும்.

சனி தசையில் சூரியன் அந்தரம் நடந்தால், மனைவிக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். மகனின் உடல்நலம் கெடும். வீண் செலவுகள் ஏற்படும்.

சனி தசையில் சந்திரன் அந்தரம் நடந்தால், மனகஷ்டங்கள் இருக்கும். நோய்கள் வரும். கணவர் தன் மனைவியிடமிருந்து பிரிய வேண்டியதிருக்கும். சகோதரர்களுடன் விவாதம் இருக்கும். கோபம் வரும். வாய்வு தொல்லை இருக்கும். வீண் சிந்தனைகள் இருக்கும்.

சனி தசையில் செவ்வாய் அந்தரம் நடந்தால், சிலர் வெளியூரில் வாழ்வார்கள். பல நோய்கள் இருக்கும். மன கஷ்டங்கள் இருக்கும்.தொழி-ல் தடங்கல்கள் இருக்கும்.

சனி தசையில் ராகு அந்தரம் நடந்தால், ஜுரம் வரும். வாய்வு தொல்லை இருக்கும். பேதியாகும். ஜாதகர் தன் எதிரிகளிடம் தோற்பார். பண இழப்பு ஏற்படும்.

சனி தசையில் குரு அந்தரம் நடந்தால், ஜாதகர் பிறரை மதிப்பார். கடவுளை வழிபடுவார். பணவரவு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும்.     

செல்: 98401 11534

bala181025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe