ரு மனிதருக்கு ராகு தசை நடக்கும்போது, அறிவு கெடும். சிலருக்கு ஞாபக மறதி உண்டாகும். கோபம் வரும். விபத்து நடக்கும்.கஷ்டங்கள் இருக்கும். பல நோய்கள் இருக்கும். பண இழப்பு உண்டாகும். பாசமாக இருப்பவர்கள் பிரிந்து செல்வார்கள்.

Advertisment

ராகு தசை நடக்கும்போது, ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ஆகிய ராசிகளில் ராகு இருந்தால், நல்லவை நடக்கும். கஷ்டங்கள் இருக்காது.

Advertisment

ராகு பாவ கிரகத்துடன் இருந்தால், பல சிக்கல்கள் உண்டாகும்.ராகு, செவ்வாயுடன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் அடிக்கடி விபத்து நடக்கும். அங்காரக தோஷமிருக்கும். ராகு, சனியுடன் லக்னத்தில், 4-ஆம் பாவத்தில், 6-ஆம் பாவத்தில், 8-ஆம் பாவத்தில், 12-ஆம் பாவத்தி-ருந்தால், இவர்களைப் பலரும் ஏமாற்றுவார்கள். பல இழப்புகள் உண்டாகும். ராகு, சூரியனுடன் இருந்தால், கிரகண தோஷம் உண்டாகும். அதனால், செய்ய வேண்டிய காரியங்களை அரைகுறையுடன் நிறுத்தி விடுவார்கள்.

தந்தையின் உடல்நலம் கெடும். ராகு, சந்திரனுடன் இருந்தால், கிரக தோஷம் உண்டாகும். பித்ரு தோஷம் இருக்கும். தாயின் உடல் நலம் கெடும். சிலர் தேவையற்றதைப் பேசுவார்கள்.

Advertisment

ராகு லக்னத்தில் இருந்தால், அனைத்து காரியங்களையும் ரகசியமாகச் செய்வார்கள். தாங்கள் நினைத்ததையே செய்வார்கள்.

ராகு 2-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் வக்கீல்களாக அல்லது நீதிபதிகளாக இருப்பார்கள். குடும்பத்தில் விவாதம் இருக்கும்.

ராகு 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சகோதரர்களுடன் சரியான உறவு இருக்காது. சகோதரர்கள் அரக்க குணத்துடன் இருப்பார்கள்.

ராகு 4-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும்.பல கஷ்டங்கள் இருக்கும்.

ராகு 5-ஆம் பாவத்தில் இருந்தால், பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயிற்றில் நோய் இருக்கும். படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.

ராகு 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்களை வெற்றி காணுவார்கள். தைரியசாலிகளாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.

ராகு 7-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். அதிகமாக நீர் பருக வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரில் நோய் இருக்கும். மனைவிக்கு பல நோய்கள் இருக்கும்.

ராகு 8-ஆம் பாவத்தில் இருந்தால், பல நோய்கள் இருக்கும். சிலர் தேவையற்றதைப் பேசுவார்கள். அதனால், சண்டை உண்டாகும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சிலருக்கு மன நோய் இருக்கும். வாய்வு தொல்லை இருக்கும். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும்.

ராகு 9-ஆம் பாவத்தில் இருந்தால், பித்ரு தோஷம் இருக்கும். தந்தையுடன் விவாதம் இருக்கும். சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள். 36 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ரிஷபம் அல்லது மிதுனத்தில் ராகு இருந்தால், தைரிய குணம் இருக்கும்.

ராகு 10-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். தாயின் உடல்நலம் கெடும். பல தொழில்களில் வெற்றி கிடைக்கும். மகரம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிகளில் ராகு இருந்தால், அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.

ராகு 11-ஆம் பாவத்தில் இருந்தால், பணக்காரர்களாக இருப்பார்கள்.தைரியசாலியாக இருப்பார்கள். ஒரு காலில் நோய் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களே ஏமாற்றுவார்கள். பிள்ளைகள் பிரிந்து சென்று விடுவார்கள்.

ராகு 12-ஆம் பாவத்தில் இருந்தால், தூக்கம் சரியாக வராது. வீண் செலவுகள் உண்டாகும். சனியுடன் ராகு இருந்தால் அல்லது சனியால் பார்க்கப்பட்டால், சூனியத்தால், பேய், பிசாசால் பாதிப்பு இருக்கும். கோபம் வரும். 

கடன் இருக்கும். சேமிப்பு இருக்காது.

ராகு தசையில் ராகு அந்தரம் நடந்தால், சகோதரர் களுடன் விவாதம் இருக்கும். வீட்டில் பெரிய அளவில் உடல்நல பாதிப்பு உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் இருக்கும். பெயர் கெடும். பல கஷ்டங்கள் இருக்கும்.

ராகு தசையில் குரு அந்தரம் நடந்தால், கடவுள் வழிபாடு இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். பணவரவு இருக்கும். நோய்கள் குணமாகும்.

ராகு தசையில் சனி அந்தரம் நடந்தால், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். கைகளிலும் கால்களிலும். நோய் இருக்கும். குடும்பத்தில் விவாதம் இருக்கும். வீண் சண்டை போடக்கூடாது.

ராகு தசையில் புதன் அந்தரம் நடந்தால், குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும்.பண வரவு இருக்கும்.

ராகு தசையில் கேது அந்தரம் நடந்தால், ஜுரம் வரும். நெருப்பு பயம் இருக்கும். 

ஆயுதத்தால் பாதிப்பு இருக்கும். பகைவர்களால் உயிர் பயம் இருக்கும்.

ராகு தசையில் சுக்கிரன் அந்தரம் நடந்தால், நண்பர்களுடன், சகோதரர்களுடன், குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் சண்டை நடக்கும். நல்ல பணவரவு இருக்கும்.

ராகு தசையில் சூரியன் அந்தரம் நடந்தால், வீட்டில் திருட்டு நடக்கும். நெருப்பு பயம் இருக்கும். தலைவலி வரும். அரசாங்கத்தால் பிரச்சினை இருக்கும். பண இழப்பு ஏற்படும். 

ராகு தசையில் சந்திரன் அந்தரம் நடந்தால், பண இழப்பு ஏற்படும்.சண்டை நடக்கும். பல பிரச்சினைகள் இருக்கும். சகோதரர்களுடன் விரோதம் உண்டாகும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும்.

ராகு தசையில் செவ்வாய் அந்தரம் நடந்தால், ஆயுத பயம் இருக்கும். நெருப்பு பயம் இருக்கும். திருட்டு பயம் இருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

செல்: 98401 11534