Advertisment

புதன் தசையில் என்ன நடக்கும்?

puthan

ரு மனிதரின் ஜாதகத்தில் புதன் தசை நடக்கும்போது, புதன் உச்சமாக கன்னி ராசியிலிருந்தால் அல்லது மிதுன ராசியில் இருந்தால், அறிவாளியாக இருப்பார்கள். ஆழமான சிந்தனையாளராக இருப்பார்கள். 

Advertisment

சிறந்த வியாபாரியாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

Advertisment

சிலர் ஓவியர்களாக இருப்பார்கள். சிலர் கலைஞர்களாக இருப்பார்கள். சிலர் சிற்பியாக இருப்பார்கள். 

புதன் நல்ல நிலைமையிலிருந்தால், பெயர், புகழ் இருக்கும். புதன் பலவீனமாக இருந்தால், மனநோய் இருக்கும். பயம் இருக்கும். தோல் நோய் இருக்கும். குடும்பத்திலுள்ள பெண்களால் பல சிக்கல்கள் உண்டாகும்.

புதன் சூரியனுடன் லக்னத்திலிருந்தால், புதாத்ய யோகம் உண்டாகும். அதனால் பல வெற்றிகள் கிடைக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். ஆழமான சிந்தனை இருக்கும். அறிவாளிகளாக இருப்பார்கள்.

புதன் சந்திரனுடன் இருந்தால், சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் அக்கவுண்டன்டாக இருப்பார்கள்.

புத

புதன் செவ்வாயுடன் இருந்தால், மெக்கானிக்காக இருப்பார்கள். சிலர் எஞ்சினியர்களாக இருப்பார்கள்.

புதன் ராகுவுடன் இருந்தால், பொய் பேசுவார்கள். பல தொழில்கள் இருக்கும்.

புதன் குருவுடன் இருந்தால், நிறைய படித்தவர்களாக இருப்பார்கள்.நல்ல பேச்சாற்றல் இருக்கும். நல்ல பதவியில் இருப்பார்கள்.

புதன் சனியுடன் இருந்தால், பேச்சாற்றல் இருக்கும். சிலர் திருநங்கைகளாக இருப்பார்கள். சிலர் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் எஞ்சினியர்களாக இருப்பார்கள்.

புதன் சுக்கிரனுடன் இருந்தால், லட்சுமி யோகம் உண்டாகும். புதன் சரியில்லையெனில், பெண் மோகத்தால் வீழ்ச்சி உண்டாகும்.

புதன் கேதுவுடன் இருந்தால், பல நோய்கள் இருக்கும். நிறைய பொய் பேசுவார்கள்.

புதன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் எச்சரிக்கை உணர்வு உள்ளவராக இருப்பார். 31 வயதிற்குப்பிறகு, நல்ல பணவரவு இருக்கும்.

புதன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பேச்சாற்றல் இருக்கும். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள்.

புதன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், படிப்பின்மூலம் பணம் வரும்.சந்தோஷ வாழ்க்கை இருக்கும்.

புதன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், கலைத்துறையில் பெயர், புகழ் இருக்கும். பண வரவு இருக்கும்.

புதன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல படிப்பு இருக்கும். பெயர், புகழ் இருக்கும்.

புதன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், பேச்சாற்றல் குறைவாக இருக்கும். துணிச்சல் குறைவாக இருக்கும். காலில் நோய் இருக்கும்.

புதன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். வியாபாரியாக இருப்பார்.

புதன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், மனநோய் இருக்கும். சீதளம் இருக்கும்.

புதன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், கடவுள் நம்பிக்கை இருக்கும்.

தந்தையுடன் விவாதம் இருக்கும்.

புதன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல வியாபாரியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார்.

புதன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும்.ஆழமான சிந்தனை இருக்கும். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள்.

புதன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், எதிர்பாராத பொக்கிஷம் கிடைக்கும். வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டங்கள் இருக்கும்.

புதன் தசையில் புதன் அந்தரம் நடந்தால், அறிவாளியாக இருப்பார்கள். சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்கும். நண்பர்களுடன் உறவு நன்றாக இருக்கும். தர்மச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். உடல்நலத்தில் சிறிய பாதிப்பு இருக்கும்.

புதன் தசையில் கேது அந்தரம் நடந்தால், பல கஷ்டங்கள் இருக்கும். 

மனக்கவலை இருக்கும். விவாதம் இருக்கும். உடலில் நோய் இருக்கும்.

புதன் தசையில் சுக்கிரன்
 
அந்தரம் நடந்தால், நல்ல ஆடைகளை அணிவார்கள். அணிகலன்களை அணிவார்கள். தர்மச் செயல்களைச் செய்வார்கள். பணவசதி இருக்கும். சுக்கிரன் சரியில்லையெனில், பெண் மோகம் இருக்கும். 

பெயர் கெடும்.

புதன் தசையில் சூரியன் அந்தரம் நடந்தால், ஆடம்பர வாழ்க்கை இருக்கும். நல்ல ஆடைகளை அணிவார்கள். தங்கத்தை வாங்குவார்கள். பெண்களால் மனகஷ்டம் இருக்கும். சூரியன் சரியில்லையெனில், இதயத்தில் பாதிப்பிருக்கும்.

புதன் தசையில் சந்திரன் அந்தரம் நடந்தால், தோல்நோய் இருக்கும். சீதளம் வரும். மூலநோய் இருக்கும். தவறி கீழே விழுந்து, அடிபடும்.

புதன் தசையில் செவ்வாய் 

அந்தரம் நடந்தால், தலை வலி வரும்.கழுத்தில் நோய் வரும். சீதளம் பிடிக்கும். திருடர்களால் பயம் இருக்கும். வீண் விவாதம் இருக்கும்.

புதன் தசையில் ராகு அந்தரம் நடந்தால், பகைவர்களால் பிரச்சினை உண்டாகும். நெருப்பு பயம் இருக்கும். பண இழப்பு ஏற்படும்.

புதன் தசையில் குரு அந்தரம் நடந்தால், நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். எதிரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். உயர்ந்த இடத்திலிருந்து பரிசோ, விருதோ கிடைக்கும். தர்மச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். நல்ல குணம் இருக்கும்.

புதன் தசையில் சனி அந்தரம் நடந்தால், தர்ம காரியங்களைச் செய்வார்கள். நண்பர்களால் பணவரவு இருக்கும். ஜாதகர் கம்பீரமாக பேசுவார். நன்கு பணத்தைச் செலவழிப்பார். உற்சாகமாக இருப்பார். சிலர் திருநங்கைகளாக இருப்பார்கள்.      

செல்: 98401 11534

bala251025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe