ரு மனிதருக்கு கேது தசை நடக்கும்போது, கேது நல்ல நிலை யில் இருந்தால், அவர் அறிவாளியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். சிலர் துறவியாக இருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். எந்த காரியத்தையும் துணிச்சலாகச் செய்வார்கள்.

Advertisment

கேது நீசமாக அல்லது பலவீனமாக இருந்தால், பல கஷ்டங்கள் இருக்கும். சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள்.

Advertisment

உட-ல் தெம்பு இருக்காது. சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். 

சுப கிரகத்துடன் கேது இருந்தால், அந்த தசை நன்றாக இருக்கும்.

கேதுவிற்கு குருவின் பார்வை இருந்தால், அந்த தசை நன்றாக இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

கேது குருவுடன் இருந்தால், குரு சண்டாள யோகம் உண்டாகும். பணவரவு இருக்கும். புகழ் இருக்கும். ஆனால், பல கஷ்டங்களைத் தாண்ட வேண்டியதிருக்கும்.

Advertisment

கேது ராகுவுடன் இருந்தால், யோக ப்ரஷ்ட யோகம் உண்டாகும். பல தகிடுதத்த காரியங்களில் ஈடுபடுவார்கள்.

கேது லக்னத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் சில சிக்கல்கள் இருக்கும். பண வரவு இருக்கும். சந்தோஷ வாழ்க்கை இருக்கும்.

கேது 2-ஆம் பாவத்தில் இருந்தால், மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். பிறரின் வாழ்க்கையைப் பற்றி கிண்டலாக பேசுவார்கள்.

கேது 3-ஆம் பாவத்தில் இருந்தால், சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். ஜாதகர் சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். துணிச்சல் குணம் இருக்கும்.

கேது 4-ஆம் பாவத் தில் இருந்தால், தாயாரின் உடல்நலம் கெடும்.

கேது 5-ஆம் பாவத்தில் இருந்தால், அதை பாவ கிரகம் பார்த்தால், வாரிசு இருக்காது. ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.

கேது 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் குறைவார்கள். தலைவ- இருக்கும். பிறர் சூனியம் வைப்பார்கள்.

கேது 7-ஆம் பாவத்தில் இருந்தால், இல் வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் கடுமையாக பேசுவார்.

கேது 8-ஆம் பாவத்தில் இருந்தால், அடிக்கடி நோய் வரும். 

சீதளம் பிடிக்கும். மூல நோய் வரும். சிலருக்கு ஏதாவது ஆப்ரேஷன் நடக்கும்.

கேது 9-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் பல கஷ்டங்கள் இருக்கும். 

பயணங்கள் இருக்கும். 29 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கேது 10-ஆம் பாவத்தில் இருந்தால், பல கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் இளம் வயதிலேயே பணம் சம்பாதிப்பார். தந்தையுடன் பிரச்சினை இருக்கும்.

கேது 11-ஆம் பாவத்தில் இருந்தால், படிப்பிற்கேற்ற வேலை இருக்காது. கடுமையாக உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டியதிருக்கும்.

கேது 12-ஆம் பாவத்தில் இருந்தால், பல கஷ்டங்கள் இருக்கும்.கடவுள் நம்பிக்கை இருக்கும். வீண் செலவுகள் இருக்கும்.

கேது தசையில் கேது அந்தரம் நடந்தால், மனைவிக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். மகனுக்கு உடல்நலக்கேடு உண்டாகும். நெருப்பு பயம் இருக்கும். பணச் செலவு இருக்கும். பகைவர்களுடன் விவாதம் நடக்கும். மோசமான பெண் களால் பிரச்சினை உண்டாகும்.

கேது தசையில் சுக்கிரன் அந்தரம் நடந்தால், நெருப்பு பயம் இருக்கும். தீவிரமான ஜுரம் வரும். மனைவியுடன் விவாதம் இருக்கும். சிலர் மனைவியைப் பிரிந்து வாழ்வார்கள். பெண் குழந்தை பிறக்கும்.

கேது தசையில் சூரியன் அந்தரம் நடந்தால், அரசியல்வாதிகளால் பிரச்சினை உண்டாகும். வசதி படைத்தவர்களுடன் விவாதம் இருக்கும். தீவிர ஜுரம் வரும். பயணத்தில் கஷ்டங்கள் இருக்கும்.

கேது தசையில் சந்திரன் அந்தரம் நடந்தால், பண இழப்பு ஏற்படும். சந்தோஷமும் இருக்கும். கவலையும் இருக்கும். பண விரையம் இருக்கும். மனைவியால் மகிழ்ச்சி இருக்கும்.

கேது தசையில் செவ்வாய் அந்தரம் நடந்தால், பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடன் சண்டை நடக்கும். உட-ல் நோய் இருக்கும். திருட்டு பயம் இருக்கும்.

கேது தசையில் ராகு அந்தரம் நடந்தால், திருட்டு பயம் இருக்கும். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். பல கஷ்டங்கள் இருக்கும். ஏதாவது விபத்து நடக்கும். கை- கா-ல் பிரச்சினை இருக்கும்.

கேது தசையில் குரு அந்தரம் நடந்தால், பல பெரிய மனிதர்களுடன் சந்திப்பு நடக்கும். ஆண் வாரிசு இருக்கும். 

பூமி, வீடு, மனை வாங்கலாம்.

கேது தசையில் சனி அந்தரம் நடந்தால், பகைவர்களுடன் சண்டை நடக்கும். வாதம் இருக்கும். பித்தம் இருக்கும்.வெளிநாட்டு பயணம் இருக்கும்.

கேது தசையில் புதன் அந்தரம் நடந்தால், சகோதரர்கள் உதவுவார்கள். பணவரவு இருக்கும். சந்தோஷம் இருக்கும்.

செல்: 98401 11534