சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் புகழ்பெற்ற மனிதராக இருப்பார். தானம் செய்யும் குணம் இருக்கும். பணக்காரராக இருப்பார். பலருக்கும் உதவுவார். பல தொழில்கள் இருக்கும். இளம் வயதிலேயே நல்ல வசதி இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல மனைவி இருப்பாள். நல்ல வாரிசு இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். சிலர் தந்தையிடமிருந்து பிரிந்து வாழ்வார்கள். ஜாதகர் பல விஷயங்களை அறிந்தவராக இருப்பார். குடும்பத்திற்காக கடுமையாக உழைப்பார். நல்ல மனைவி அமைவாள். நல்ல வாரிசு இருக்கும். கண்ணில் நோய் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய சா-யாக இருப்பார். பல விஷயங்கள் தெரிந்தவராக இருப்பார். குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். தர்ம காரியங்களுக்காக செலவழிப்பார். குலதெய்வ வழிபாடு இருக்கும். சிலர் கோவில் கட்டுவார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். பெயர், புகழ், பணவசதி இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் அரசாங்க பதவியில் இருப்பார்கள். வீடு, வாகனம் இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு கர்ப்பச் சிதைவு உண்டாகும். குலதெய்வ வழிபாடு நடக்கும். சூரியனை வழிபட்டபிறகு, வயிற்றில் குழந்தை தங்கும். நல்ல பண வசதி இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பல விஷயங்களைத் தெரிந்தவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். சிலர் வெளிநாட்டில் வியாபாரம் செய்வார்கள். சிலருக்கு அதிக பகைவர்கள் இருப்பார்கள். ஜீரணக் கோளாறு இருக்கும். எனினும், சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். 

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் பல பிரச்சினைகள் இருக்கும். திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பல தொழில்கள் இருக்கும். அவற்றில் வெற்றி கிடைக்கும். நல்ல வாரிசு இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும். சிலருக்கு விபத்து நடக்கும். எனினும், நீண்ட ஆயுள் இருக்கும். சிலர் துறவிகளாக இருப்பார்கள். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். சிலர் பிறந்த ஊரி-ருந்து தெற்கு திசைக்குச் சென்று, நன்றாக வாழ்வார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். பல விஷயங்களை அறிந்தவராக இருப்பார். கடவுள் நம்பிக்கை இருக்கும். சம்பாதித்த பணத்தை ஜாதகர் நல்ல காரியங்களுக்குச் செலவழிப்பார். நல்ல மனைவி இருப்பாள். நல்ல வாரிசு இருக்கும். கா-ல் அல்லது முதுகுத்தண்டில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார். தானம் செய்வார். பெயர், புகழ் இருக்கும். தைரியசா-யாக இருப்பார். பலசா-யாக இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். வீடு, வாகனம் இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரிய குணம் இருக்கும். பல விஷயங்களை அறிந்தவராக இருப்பார். சிலர் கலைஞர்களாக இருப்பார்கள். சிலர் ஓவியர்களாக இருப்பார்கள். சிலர் சிற்பியாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மன நோய் இருக்கும். பல சிக்கல்கள் இருக்கும். 

வீட்டில் பிரச்சினைகள் இருக்கும். சிலர் வெளியூரில் சந்தோஷமாக வாழ்வார்கள். சிலருக்கு கண்ணில் நோய் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும்.

செல்: 98401 11534