ரு செயலை துவங்கும் முன்பு நேரம் காலம் பார்ப்பது அவசியமாகும்.

ஒரு நாளின் சிறப்பினை உணர்த்துவதில் திதி, வாரம், யோகம் நட்சத்திரம், கரணம் என்ற பஞ்ச அங்கங்களில் பங்களிப்பு அளப்பரியது. இதில் நட்சத்திரங்கள் மிகமிக முக்கிய மானது. ஏனெனில் நவகிரகங்களும் 27 நட்சத்திரங்கள் வழியாகவே தனது பலனை வழங்குகிறது. அதனால் சுப காரியங்கள் மற்றும் வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்விற்கும் தாரா பலம் பார்க்கப்படுகிறது.

Advertisment

தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். தாராபலன் என்றால் சுப மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு தேர்வு செய்யும் நாள் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறதா என்பதை நிர்ணயம் செய்வதாகும்.

Advertisment

அதாவது- அன்றாட முக்கிய நிகழ்வுகளுக்கு பொருத்தமான நட்சத்திரத்தை ஜாதகரின் ஜென்ம அடிப்படையில் கணக்கிடுவதாகும்.

ஜாதகரின்  ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து சுப விசேஷம் நடத்த விரும்பும் தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண் 0, 2, 4, 6, 8 என வந்தால் தாரா பலமுடைய நட்சத்திரமாகும். அன்றைய தின நட்சத்திரம் 9-க்குமேல் வந்தால் 9-ல் வகுக்க மீதி 0, 2, 4, 6, 8 வரை தாராபலம் உண்டு என்று பொருள். அதேபோல, 1, 3, 5, 7-ஆக வரும் நட்சத்திரம் மற்றும் 9-க்குமேல் உள்ள நட்சத்திரங்கள் வந்தால் 9-ல் வகுக்க 1, 3, 5, 7 என வந்தால் தாரா பலம் இல்லையென்று பொருள். 27 நட்சத்திரத்திற்கும் தாராபலம் தரக்கூடிய நட்சத்திரம் என்ற தலைப்பில் நமது "பாலஜோதிட'த்தில் விரிவான கட்டுரை கொடுத்திருக் கிறேன். 

Advertisment

இப்போது நாம் வைநாசிக நட்சத்திரம் என்ன பலன் தருமென்று பார்க்கலாம்.

வைநாசிகம் என்றால் ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 22-ஆவது நட்சத்திரமாகும். பல்வேறு புதிர்களை சூட்சமங்களை தன்னுள் அடக்கியது ஜோதிட சாஸ்திரமாகும். ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிப்பதில் நட்சத்திரங்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் வைநாசிக நட்சத்திரம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவிவருகிறது. ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து நான்காவது நட்சத்திரம் சேமதாரை ஆகும். நான்காவது நட்சத்திரம் சேமதாரை என்றால் ஒருவருக்கு 4, 13, 22 நட்சத்திரங்கள்  நன்மைகளைக் கொடுக்க வேண்டும் என்றுதானே பொருள். ஆனால் 4, 13 ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் நன்மை தரும். 22-ஆவது நட்சத்திரமாக வருவது வைநாசிகம் என்பதால் ஜாதகருக்கு நன்மையை தராது கெடுதலை அதிகப்படுத்தும். உடலையும் மனதையும் வதைப்பது வைநாசிக நட்சத்திரமாகும். ஒருவர் உடலாலும் மனதாலும் வதைபட்டால் வெளியில் சொல்லமுடியாத பிரச்சினைகளால் அவதிப்பட்டால் அவரின் ஜாதகத்தில் வைநாசிக நட்சத்திரம் செயல்படுகிறது என்று உணர்ந்து கொள்ளவேண்டும். அதேபோல் ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந் திருந்தாலும் அந்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் அவர் பிறந் திருந்தால் மட்டுமே 22-ஆவது நட்சத்திரம் வைநாசிமாக செயல் படும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு 23-ஆவது நட்சத் திரம் வைநாசிகமாக செயல்படும். அதாவது- ஒருவர் எந்த நட்சத்திர பாதத்தில் பிறந்திருக்கிறாரோ அதி-ருந்து 88-ஆவது நட்சத்திர பாதம் ஜாதகருக்கு முழு அசுபமாக வைநாசிகமாக செயல்படும். உதாரணமாக ஒருவர் மேஷ ராசி அஸ்வினி நட்சத் திரம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தால் அதற்கு 22-ஆவது நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தின் 4-ஆம் பாதம் 88-ஆவது நட்சத்திர பாதம் வைநாசிக நட்சத்திரமாக பலன் தரும். ஒருவர் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்திருந்தால் அதற்கு 23-ஆம் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தின் 1-ஆம் பாதம் 88-ஆவது நட்சத்திர பாதம் வைநாசிக நட்சத்திரமாக பலன் தரும்.

ஒரு ஜாதகத்தில் வைநாசிக நட்சத்திர பாதத்தில் ஏதேனும் கிரகம் இல்லை என்றால் ஜாதகர் புண்ணிய வான் என்றே கூறவேண்டும். வைநாசிக நட்சத்திரத்தி-ருந்து ஏதேனும் ஒரு கிரகம் தசை நடத்தினால் ஜாதகர் அந்த தசையினால் அசு பலன்களை மிகுதியாக அனுபவிப்பார். தம்பதிகள் யாரேனும் ஒருவர் வைநாசிக நட்சத்திரத்தில் இருந்தால் நிச்சயம் அவர்களால் நிம்மதியான திருமண வாழ்க்கையை வாழ முடியாது. பலர் இந்த வைநாசிக நட்சத்திர பாதம் பற்றி அறிந்திருப்பதில்லை. சிலர் 22-ஆவது நட்சத்திரப் பாதம் சேம தாரை என்று திருமணம் முகூர்த்தம் குறிக்கப்பட்டு பிரிவினையை சந்திருக்கிறார்கள். சொத்துகள் வாங்கி அவதிப் படுகிறார்கள்.

இந்த நட்சத்திரப் பாதத்தில் வியாதிக்கு வைத்தியத்தை துவங்கக்கூடாது. கொடுக்கல்- வாங்கல் ஜாமின் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். எந்த காரியம் செய்தாலும் அதில் தடை உண்டாகும். இதில் திருமணம் செய்தால் கணவன்- மனைவியிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழில் தொடங்கினால் தொழில் முடக்கம்  நஷ்டம் உண்டாகும். பணம் கொடுத்தால் திரும்பி வராது.  இதில் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் தடைப்பட்டு தள்ளிப்போகும். வியாதிகள் உண்டாகும். துக்க சம்பவங்கள் நடக்கும். ஆகவே வைநாசிக நட்சத்திர பாத நாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

வைநாசிக நட்சத்திர பாதம் ஒருவர் வேதனைகளை, துன்பங்களை அனுபவிப் பதற்குக் காரணமாக அமைகிறது. ஏதாவது ஒரு சிக்க-ல் ஒருவர் மன நிம்மதியை இழந்தாலும் எதிர்பாராத துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலும் அந்த சம்பவம் எப்போது நடந்தது என்று ஆய்வு செய்தால் அது வைநாசிக நட்சத்திர பாதமாக இருக்கும். எந்த பிரச்சினையிலும் மாட்டக்கூடாது. அடுத்தவர் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று கதவைப் பூட்டி வீட்டுக்குள் உட்கார்ந்தாலும் வைநாசிக நட்சத்திர பாதத்திலுள்ள ஒருவர் உங்களை சிக்க-ல் மாட்டிவிட தயாராக இருப்பார்.

ஒருவருக்கு சுய ஜாதகத்தில் வைநாசிக நட்சத்திர பாதத்தில் ஏதேனும் கிரகம் இல்லை என்றால் கோட்ச்சார கிரகங்கள் வைநாசிக நட்சத்திர பாதத்தை கடக்கும் போது அசுபத்தை அதிகமாக உமிழும். கோட்சார சந்திரன் வைநாசிக நட்சத்திரப் பாதத்தை கடக்கும் ஆறு மணி நேரம் ஜாதகர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த நட்சத்திர பாதத்தில் ஏதேனும் கிரகம் இருந்து தசை நடத்தினால் அதற்கு உரிய வழிபாட்டு முறைகள் பரிகாரங்களை கடைபிடிக்க வேண்டும். இந்த நட்சத்திரப் பாதத்தில் அமர்ந்த கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் பலமாக இருந்தால் வைநாசிக பாதத்தில் நின்ற கிரகத்தின் தசாபுக்தி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. வைநாசிக நட்சத்திர பாதத்தில் நின்ற கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் பலம் குறைந்தால் வைநாசிக நட்சத்திர பாதத்தில் நின்ற கிரகத்தின் தசாபுக்தி மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற பல்வேறு சூட்சும ரகசியங்கள் ஜோதிடத்தில் பொதிந்துள்ளது. மேலும் சந்தர்ப்பம் அமையும் போது வதை வைநாசிகம் பற்றியும் பார்க்கலாம். 

செல்: 98652 20406