சத்ர யோகம்
ஒரு ஜாதகத்தில் 7-ஆம் பாவத்திலிருந்து ஆரம்பித்து, லக்னம் வரை 7 கிரகங்களும் இருந்தால், அது சத்ர யோகம்.
இதில் பிறப்பவர்கள் அரசாங்க வேலையில் இருப்பார்கள். இளமையிலும், வயதான காலத்திலும் சந்தோஷமாக வாழ்வார்கள். மத்திய வயதில் கஷ்டங்களுடன் கடுமையாக போராடுவார்கள்.
சாப யோகம்- 2
ஒரு ஜாதகத்தில் 10-ஆம் பாவத்திலிருந்து ஆரம்பித்து, 4-ஆம் பாவம் வரை 7 கிரகங்களும் இருந்தால், அதற்குப் பெயர் சாப யோகம்- 2.
இதில் பிறப்பவர்கள் கடுமையான மனிதர்களாக இருப்பார்கள். கெட்ட குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள். பிறரை மதிக்கமாட்டார்கள். ஆணவம் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
அர்த சந்திர யோகம்
ஒரு ஜாதகத்தில் கேந்திர ஸ்தானத்தைத் தவிர்த்து, 2 அல்லது 3-ஆம் பாவத்திலிருந்து ஆரம்பித்து, 7 பாவங்களில் 7 கிரகங்களும் இருந்தால், அர்த சந்திர யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் பல நகைகளை அணிவார்கள். பார்ப்பதற்கு பிரகாசமாக இருப்பார்கள். அமைதியான மனிதர்களாக இருப்பார்கள். தைரியசாலிகளாக இருப்பார்கள்.
சக்கர யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஆரம்பித்து. ஒரு கிரகத்தை விட்டு இன்னொரு கிரகம் என்ற கணக்கில் (ஆல்டர்னேட்டிவ்) 7 கிரகங்களும் இருந்தால், அதற்குப் பெயர் சக்கர யோகம்.
இதில் பிறப்பவர்கள் அரசரின் வீட்டில் இருப்பார்கள். இல்லாவிட்டால்... அரச வாழ்க்கையை வாழ்வார்கள். அனைத்து ஐஸ்வர்யங்களும் இருக்கும். பலருக்கும் நல்லவற்றைச் செய்வார்கள்.
சமுத்ர யோகம்
ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவத்திலிருந்து ஆரம்பித்து, ஒரு கிரகத்தை விட்டு இன்னொரு கிரகம் என்ற கணக்கில் (ஆல்டர்னேட்டிவ்) 7 கிரகங்களும் இருந்தால், அதற்குப் பெயர் சமுத்ர யோகம்.
இதில் பிறப்பவர்கள் மன்னரைப்போல புகழுடன் இருப்பார்கள். தன் குலத்தைக் காப்பாற்றுவார்கள். பலருக்கும் நன்மைகள் செய்வார்கள்.
கோல யோகம்
ஒரு ஜாதகத்தில் ஒரே பாவத்தில் 7 கிரகங்களும் இருந்தால், ராகு- கேது தனியாக இருந்தால், அதற்குப் பெயர் கோல யோகம்.
இந்த யோகத்தில் பிறந்தவர்களின் முற்பகுதி வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும். நல்ல மனிதர்களாக இருப்பார்கள். நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் நன்றாக பழகுவார்கள். நன்கு உழைப்பார்கள்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/yogam-2025-12-04-16-57-12.jpg)