டல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு வரின் வாழ்விலும் உயிர் போன்றது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. சுத்தமான நீரை குடிக்கவும் முடியவில்லை. உடல் நிலையில் நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று ஆயிரத்தில் ஒருவர்தான் சொல்லமுடியும். பிறக்கும் குழந்தைகள்கூட கருவிலேயே நோய்களை சுமக்க ஆரம்பித்து விடுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பதும் குறைந்து கொண்டேதான் வருகிறது. தினமும் டயட் என்ற பெயரில் உண்ணும் உணவிற்கு கூட பட்டிய-ட வேண்டியது இருக்கிறது. ஆனால், ஜோதிடரீதியாக ஜெனன ஜாதகத்தில் ஒருவருக்கு கிரகங்கள் பலமாக அமைந்துவிட்டால் நோய் வந்தாலும் அவை உடனே சரியாகி விடக்கூடிய அமைப்பு ஏற்படுகிறது.

Advertisment

பொதுவாக ஜெனன ஜாதகம் சிறப்பாக அமைந்துவிட்டால் ஆரோக்கியமான வாழ்வு உண்டாகிறது. கிரக நிலைகள் மட்டுமின்றி பிறந்த நட்சத்திரரீதியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 27 நட்சத்திரக்காரர்களுக்கும் எந்த எந்த வயதில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியமானதாகும்.

Advertisment

அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் மனக் குழப்பவாதியாக இருப்பார்கள். 8, 16 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், 10 வயதில் விரோதிகளால் கண்டமும், 13 வயதில் கண்களில் பாதிப்பும், 21 வயதில் உண்ணும் உணவே விஷமாகக்கூடிய சூழ்நிலையும், 37 வயதில் தேவையற்ற பெண்களின் சகவாசத்தால் கண்டமும், 40 வயதில் வண்டி, வாகனங் களால் ஆபத்தும், 45 வயதில் அரசுவழியில் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் ஜுரமும், 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 19 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 25 வயதில் நாய்க்கடியால் பாதிப்பும், 27 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும், 30 வயதில் பால்வினை நோய்களும், 50 வயதில் சர்க்கரை நோயும், 53 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும், 59 வயதில் மூல வியாதியும், 64 வயதில் இதய சம்மந்தப்பட்ட பாதிப்பு உண்டாகும்.

Advertisment

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு 5 வயதில் நீரால் கண்டமும், 7 வயதில் நெருப்பாலும் 10 வயதில் உயரமான இடத்தி-ருந்து தவறி விழுவதால் கண்டமும் உண்டாகும். 11 வயதில் வண்டி, வாகனங்களால் விபத்துக்களும், 21 வயதில் பால்வினை நோய்களும், 50, 55 வயதில் குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், 60 வயதில் மூல வியாதியால் பாதிப்பும் உண்டாகும்.

-அடுத்தடுத்த நட்சத்திரங்களை தொடர்ந்து பார்ப்போம்.