Advertisment

புதன் தசாபுக்தி பலன்கள்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

puthan


றிவிற்கும், ஆழ்ந்த ஞானத்திற்கும், சிந்தனை உதயத்திற்கும் உரித்தான புதன் 17 வருடங்களை தன்னகத்தை வைத்துள்ளார். குரு அறிவு என்றால் அவரின் புத்திரனான புதன் நுண்ணறிவு. தீர்க்கதரிசனங்களை கைசேர்க்கும் ஆற்றல்பெற்ற பசுமை நிறத்திற்கு சொந்தக்கார மரகத கிரகம் புதனாகும். மனித உடலில் மூளையின் செயல்பாடு, செயல்திறன் ஆகியவற்றை நிர்ணயம் செய்தும் நரம்பு, குரல், நுரையீரல், மூச்சு போன்றவற்றோடு மூளையில் அமைந்த பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளையும் ஆளுமை செய்து வழி நடத்துகின்றது. கணிதம், காகிதம், இசை போன்ற நுண் திறன்கொண்ட செயல்பாடுகளுக்கு புதன் காரகம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடலில் அமையப்பட்டுள்ள கணிதம் அதாவது- இதயத்துடிப்பு, சர்க்கரை அளவு, உடல் சூட்டின் அளவு, கருமுட்டையின் செயல்திறன், உயிர் அணுக்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து உடல் சார்ந்த கணக்குகளையும் ஆளுமை செய்வது பிட்யூட்டரி என்கின்ற சுரப்பியாகும். வெளியுலக கணிதம் ஆனாலும் உடல் கூறாகிய உள்வுலக கணிதம


றிவிற்கும், ஆழ்ந்த ஞானத்திற்கும், சிந்தனை உதயத்திற்கும் உரித்தான புதன் 17 வருடங்களை தன்னகத்தை வைத்துள்ளார். குரு அறிவு என்றால் அவரின் புத்திரனான புதன் நுண்ணறிவு. தீர்க்கதரிசனங்களை கைசேர்க்கும் ஆற்றல்பெற்ற பசுமை நிறத்திற்கு சொந்தக்கார மரகத கிரகம் புதனாகும். மனித உடலில் மூளையின் செயல்பாடு, செயல்திறன் ஆகியவற்றை நிர்ணயம் செய்தும் நரம்பு, குரல், நுரையீரல், மூச்சு போன்றவற்றோடு மூளையில் அமைந்த பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளையும் ஆளுமை செய்து வழி நடத்துகின்றது. கணிதம், காகிதம், இசை போன்ற நுண் திறன்கொண்ட செயல்பாடுகளுக்கு புதன் காரகம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடலில் அமையப்பட்டுள்ள கணிதம் அதாவது- இதயத்துடிப்பு, சர்க்கரை அளவு, உடல் சூட்டின் அளவு, கருமுட்டையின் செயல்திறன், உயிர் அணுக்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து உடல் சார்ந்த கணக்குகளையும் ஆளுமை செய்வது பிட்யூட்டரி என்கின்ற சுரப்பியாகும். வெளியுலக கணிதம் ஆனாலும் உடல் கூறாகிய உள்வுலக கணிதம் ஆனாலும் கணிதத்திற்கு காரகம் என்றாலே புதன்தான். அதனால்தான் புதனின் தன்மை இழந்த ஜாதகங்கள் முடிவெடுக்கும் திறனில் மூச்சு திணறுகின்றது. புதன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் போன்ற பலமாக நிற்கின்ற ஜாதகங்களை அணுகும்பொழுது அவர்களின் பேச்சும், வீச்சும், மிகச் சிறப்பாக அமைந்துள்ளதை கணிக்க முடிகின்றது. இது புதனும் பிட்யூட்டரி என்கின்ற சுரபியும் இணைந்து இயக்குகின்ற தன்மையாகும். வானியலில் சூரியனோடு மிக நெருங்கிய கிரகம் என்றால் அது புதன்தான். நிலவுக்கு இருப்பதுபோலவே குழிப்பாறைகளும், அடுக்குகளும் இந்த புதனின் மேற்பரப்பில் காணப்படுகின்றது. மட்டுமல்லாமல் இரும்பு, நிக்கல்,  ஒலிவைன், பைராக்ஸின், சல்பர், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், அலுமினியம், சிலிக்கான் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் புதனுள் இருப்பதாக வானியல் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றது.  மேலே கூறப்பட்ட கனிமங்களால் ஏற்படும் சத்துக்கள் அனைத்தும் புதன் நமது உடலில் அளித்து கொண்டி ருக்கின்றது. இதனால்தான் அழற்சிஎன்கின்ற தன்மை புதன் கெடும் பொழுது ஜாதகர் அனுபவிக்க நேரிடுகின்றது.குறிப்பாக புதனின் தசா புக்தி காலங்களில் மேல்கூறிய இந்த கனிமங்களில் இருந்து வெளிப்படும் சத்துக்களின் குறைபாடு ஒரு ஜாதகருக்கு ஏற்படுகின்றது. கிரகங்களுடன் இணைகின்ற புதன் என்ன பலன் தருவார் என்று பார்க்கலாம். 

Advertisment

புதன்+சூரியன்

இந்த இணைவு புதன் ஆதித்ய யோகமாகக் கருதப்படுகின்றது. என்றாலும் இரண்டு கிரகங்களுக்குமான இடைவெளியும் கணக்கிடப்பட வேண்டும். சூரியனிடம் புதன் அஸ்தங்கமாகாத நிலையில் இருந்தால் இந்த யோகம் செயல்படும். இந்த யோகத்தில் அதீத பேச்சாற்றல், ஆழ்ந்த அறிவு, வணிகம் போன்றவற்றின்மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படும் தன்மையை அடையலாம். 

Advertisment

புதன்+ சந்திரன்

புதன் சூரியன்போலவே புதன் சந்திரனும் ஒரு யோகம்தான் சந்திரன் மனம், உணர்ச்சி, தாய்மை, புதன் அறிவு, விவேகம், மனம், புத்தி இவை இரண்டும் ஒன்றிணியும்பொழுது உணர்ச்சியும் விவேகமும் சம நிலையில் இருந்து ஒரு காரியத்தை சாதிக்கும் தன்மையை இவர்களுக்கு வழங்கும். 

புதன்+செவ்வாய் 

விவேகமும் வீரமும் இணையும் தருணமாக இந்த இணைவு கருதப்படுகின்றது. ஒரு சிந்தனையை, எண்ணத்தை, ஆளுமையுடன் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு கிரக இணைவாகும். 

புதன்+ராகு 

இந்த இணைவு ஆராயப்படவேண்டிய ஒரு இணைவாகும். இது தோல் நோய் மற்றும் அழற்சி ஆகியவற்றை அளிக்கவல்லது. மேலும் மாயை, கபடம், ஆர்வம், ஆசை, வேகம் போன்றவற்றை தன்னகத்தே கொன்ற ராகு, புக்திகாரகனுடன் இணையும்பொழுது மற்றவர்களை எளிதில் ஏமாற்றக்கூடிய தந்திரங்கள் அறிந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். 

புதன்+குரு 

ஞானமும், நுண்ணறிவும், இணையும் தருணமாக இதை கணக்கிட வேண்டும். சிறந்த பேச்சு, ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஆலோசனை அளிப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த இணைவு இருக்கும். பொருள் மற்றும் ஆன்மிகம் இரண்டிலும் சமநிலையாக பயணிக்கும் திறன் பெற்றவர்கள் இவர்கள். 

புதன்+சனி 

இந்த இணைவு புதன் ராகுவிற்கு கூறிய பலனோடு சற்று ஒத்துவரும் இவர்கள் கூறும் உறுதிமொழிகளை நம்பி பயணித்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். கணிதம், ஆராய்ச்சி, கட்டுமானம், மேலாண்மை திறன், சட்ட ஆலோசகர் போன்றோரின் ஜாதகங்களில் இந்த இணைவு மிகச் சிறப்பாக அமைந் துள்ளது. இதை விவேக சாந்தி யோகம் என்றும் சிலர் கூறுவார்கள். 

புதன்+கேது 

புதன் காதல், கேது வலை, நிச்சயமாக காதல் வலையில் விழுகின்ற மனோநிலை இவர்களுக்கு இருக்கும்.  இந்த இணைவுபெற்ற ஜாதகங்கள் 70 சதவிதத்திற்கும்மேல் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றனர்.  சாஸ்திர ஞானம், சமயோகித ஞானம் ஆகிய இரண்டு பாதைகளிலும் பயணிக்கும் தன்மை இவர்களுக்கு வழங்கப்படும். 

புதன்+சுக்கிரன் 

தன்னை தனது திறமையின்மூலம் மிக அழகாக வெளிப்படுத்தும் திறன் இந்த இணைவு உள்ளவர்கள் கையாளுகின்றனர். இசை, கலை, இலக்கியம், பேஷன் டிசைன், மீடியா போன்றவற்றில் சாதித்தவர்களின் ஜாதகங்களில் இந்த இணைவு பெரும்பான்மை யாக காணப்படுகின்றது.

தசாபுக்தி பலன்களும் பரிகாரங்களும் 

வரும் இதழில் தொடர்கிறது. 
செல்: 80563 79988

bala221125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe