ஜோலார் பேட்டை அருகே திருப்பத்தூர் நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் சிறப்பாக இயங்கிவரும் 3 ஸ்டார் ஹோட்டல் ராஜா ராணி ரெசிடென்சி மற்றும், "ஆரியாஸ் சைவ உணவகம்' 2014- ஆம் ஆண்டில் துவங்கி அமர்க்களமாக நல்ல பெயர், புகழுடன் திருப்பத்தூர் மக்கள் அனைவருக்கும் திருப்தி தந்து, ஹோட்டல், உணவகம் இரண்டையும் சிறப்பாக நடத்திவரும் அதன் நிறுவனர் பெ. தாமோதரன் அவர்களை அவர் துணைவியார் மாலதி உடனிருக்க சந்தித்து பேசினோம்.
காவல்துறை உயர் அதிகாரிபோல் கம்பீரமாக, அழகாக தோற்றமளித்த தாமோதரன் தமது பக்தி ஈடுபாடுகள் பற்றி தடங்கல் இல்லாமல் சரளமாக நம்மிடம் பேசினார்.
"எனக்கு சொந்த ஊர் இந்த திருப்பத் தூர்தான். நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருவது எல்லாமே இங்குதான். திருப்பத்தூர்தான் என் வாழ்வில் திருப்புமுனை தந்து உயர்த்திய நகரம். பள்ளிப்படிப்பு மட்டுமே நான் படித்தேன். திருப்பத்தூரில் எனது தாய்மாமன் ஆர்.ஜி. வெங்கடாஜலம் அவர்கள் இப்போதும் நடத்தி வரும் ஆர்.ஜி. வெங்கடாஜலம் அரிசி மண்டியில் வேலைபார்த்து அரிசி வியாபார தொழில் நுட்பங்களை முழுவதுமாக கற்றுத் தேர்ந்தேன். அதன்பின்னர் எங்கள் குடும்ப குலதெய்வம் நீர்பத்துரை சென்னம்மாள், இஷ்ட தெய்வம் பழநி தண
ஜோலார் பேட்டை அருகே திருப்பத்தூர் நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் சிறப்பாக இயங்கிவரும் 3 ஸ்டார் ஹோட்டல் ராஜா ராணி ரெசிடென்சி மற்றும், "ஆரியாஸ் சைவ உணவகம்' 2014- ஆம் ஆண்டில் துவங்கி அமர்க்களமாக நல்ல பெயர், புகழுடன் திருப்பத்தூர் மக்கள் அனைவருக்கும் திருப்தி தந்து, ஹோட்டல், உணவகம் இரண்டையும் சிறப்பாக நடத்திவரும் அதன் நிறுவனர் பெ. தாமோதரன் அவர்களை அவர் துணைவியார் மாலதி உடனிருக்க சந்தித்து பேசினோம்.
காவல்துறை உயர் அதிகாரிபோல் கம்பீரமாக, அழகாக தோற்றமளித்த தாமோதரன் தமது பக்தி ஈடுபாடுகள் பற்றி தடங்கல் இல்லாமல் சரளமாக நம்மிடம் பேசினார்.
"எனக்கு சொந்த ஊர் இந்த திருப்பத் தூர்தான். நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருவது எல்லாமே இங்குதான். திருப்பத்தூர்தான் என் வாழ்வில் திருப்புமுனை தந்து உயர்த்திய நகரம். பள்ளிப்படிப்பு மட்டுமே நான் படித்தேன். திருப்பத்தூரில் எனது தாய்மாமன் ஆர்.ஜி. வெங்கடாஜலம் அவர்கள் இப்போதும் நடத்தி வரும் ஆர்.ஜி. வெங்கடாஜலம் அரிசி மண்டியில் வேலைபார்த்து அரிசி வியாபார தொழில் நுட்பங்களை முழுவதுமாக கற்றுத் தேர்ந்தேன். அதன்பின்னர் எங்கள் குடும்ப குலதெய்வம் நீர்பத்துரை சென்னம்மாள், இஷ்ட தெய்வம் பழநி தண்டாயுத பாணி முருகப் பெருமானை மனதார வணங்கி தாய்மாமன் ஆசியுடன், ராஜாராணி அரிசி மண்டியை பத்து வருடங்களுக்குமுன்பு துவங்கி, திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்கள், வெளியூர்களுக்கு தரமான அரிசியை ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், தமிழ்நாடு என கொள்முதல் செய்து விற்பனைசெய் கிறோம். நாங்கள் பல வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பரிபூரணமாக பெற்றிருப்பதற்கு எங்கள் குலதெய்வம் மற்றும் பழநி முருகனுக்கு மறவாமல் தினமும் நானும், என் மனைவியும் வணங்கி நன்றி சொல்லிவருகிறோம்.
என் தந்தை பெரிய தம்பி. தாய் ராஜா ராணி. எனது சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். ஏழ்மையான விவசாய குடும்பம். அம்மா ராஜா ராணியும், பாட்டியும்தான் என்னையும் என் உடன்பிறந்த அக்காமார்கள் இருவரையும் ஆளாக்கினார்கள். கடின உழைப்புடன், நேர்மை, உண்மை, தர்ம சிந்தனை, மனித நேயம், தீவிர தெய்வ நம்பிக்கைதான் எங்களை இன்று பலரும் வியக்கும்படி வாழ்வில் உயர்த்தி உள்ளது.
என் தாய் ராஜா ராணி தீவிர முருக பக்தர். அவர் முருகனுக்கு காவடி எடுத்தால் அவரைத் தொடர்ந்து ஆயிரம் பேர் காவடி எடுப்பார்கள். இது என்னை மெய்சிலிர்க்க வைக்கும் விஷயம்.
என் மனைவி தினமும் துர்க்கையம்மன் ஸ்தோத்திரங்களை கூறி வழிபடுவார். நானும் அவருடன் சேர்ந்து வழிபடுவேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/dhan1-2025-11-04-16-34-12.jpg)
பழநி முருகப் பெருமானுக்கு வேண்டுதல் செய்து நிறைவேறியவுடன் பிரார்த்தனையை நல்லபடியாக செய்ய பழநி முருகன் கோவிலுக்கு நண்பர்களுடன் தொடர்ந்து "நாற்பது ஞாயிறுகள்' சென்று வழிபட்டுவந்தது உண்டு.
2011 ஆண்டில் என் தாய் ராஜாராணி, பாட்டி, அக்கா இருவர், உறவினர் கள் என்று மொத்தம் பத்துபேர்கள் காரில் ஓர் துக்க வீட்டிற்கு சென்று திரும்பியபோது பஸ் மோதி விபத்திற்கு உள்ளாகி என் பாட்டி, அம்மா, கார் டிரைவர் இறந்து போனார்கள்.
என்னை ஆளாக்கிய பாட்டியும், அம்மாவும் இறந்த செய்தி என்னை இடிபோல தாக்கி குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது.
இது தெய்வங்கள் எங்களுக்கு தந்த மிகப்பெரிய சோதனை என்றுதான் சொல்வோம். இந்த மீளமுடியாத சோகத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குவர எங்களுக்கு பல மாதங்கள் ஆனது.
எனது தெய்வத்தாய் ராஜாராணி பெயரில் அவரது நினைவாக 2014 ஆண்டில் திருப்பத்தூரில் முதன்முதலாக த்ரீ ஸ்டார் ராஜாராணி ரெசிடென்சி ஹோட்டல் மற்றும் ஆரியாஸ் சைவ உணவகத்தை தமிழக கவர்னரை சிறப்பு விருந்தினராக வைத்து திறந்தோம்.
"ராஜா ராணி ரெசிடென்சி'யில் 34 ஏசி அறைகள் மூன்று தளத்தில் உள்ளது. அண்டர் கிரவுண்டில் ஆரியாஸ் சைவ உணவகம் இருக்கிறது.
திருப்பத்தூரில் ஒரு லேண்ட் மார்க்காக குலதெய்வ அருளோடு எங்கள் ராஜாராணி ரெசிடென்சி திகழ்ந்துவருகிறது.
பழநி தண்டாயுதபாணி பேரருளால் தனக்கு கிடைத்த நல்ல குடும்பம், பிற வெற்றிகரமான தொழில்துறை ஈடுபாடுகள், பெற்ற விருதுகள் பற்றி பெருமையுடன் நம்மிடம் தொடர்ந்து கூறினார் தாமோதரன்.
"என் தாய்மாமன் மகளையே திருமணம் செய்துகொண்டேன். என் மனைவி மாலதி எனது வெற்றிகளுக்கு உறுதுணையாக அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருந்து செயல்பட்டு வருகிறார். எங்களுக்கு இரண்டு பெண்கள். ஒரு மகன். மகள்கள் தன்வந்தி, ஜனவர்ஷினி, மகன் சஷ்வின் ஆதித்யா. மகள்கள். மகன் மூவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். எங்கள் மொத்த குடும்பமும் தெய்வ பக்திமிகுந்த குடும்பம். நாங்கள் எல்லோருமே தினசரி சாமி கும்பிட தவறுவதே இல்லை.
எங்கள் இரு மகள்கள் பெயரை எங்கள் ராஜா ராணி ரெசிடென்சி கான்பரன்ஸ் ஹாலுக்கு "தன்வந்தி ஜனவர்ஷினி ஹால்' என்று வைத்துள்ளோம்.
குலதெய்வ அருளோடு ரியல் எஸ்டேட் பிசினஸ் துவங்கி பில்டிங் டெவலப்பர்ஸ் ஆக வீடுகளை கட்டி குறிப்பாக நடுத்தர மக்களுக்கு வழங்கிவருகிறோம்.
ராஜாராணி மரச்செக்கு கடலை எண்ணெய், எள் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் தயாரிக்கும் ஆலை நடத்திவருகிறோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/dhan2-2025-11-04-16-34-26.jpg)
கவர்மெண்ட் ப்ராஜெக்ட் பெற்று சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதி செய்துவருகிறோம்.
நியாயவிலை ரேஷன் கடைகள், அரசு பள்ளிகள் கட்டிதந்து வருகிறோம்.
வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்தித்து இருக்கிறேன். ஆனால் பழநி தண்டாயுத பாணியை நான் சோதனை காலங்களில் பரிபூரண சரணாகதி அடைந்து வேண்டிய தால், பிரார்த்தனை மனமுருக செய்ததால் மலைபோல் வந்த சோதனை யாவும் பனிபோல் பழநி முருகன் பேரருளால் நீங்கியதை என்றும் நன்றியோடு நினைத் திருப்போம்.
சில வருடங்களுக்குமுன்பு பெங்களூருக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி என் இடுப்பில் ஆபரேஷன் நடந்து அது குலதெய்வம் அருளால் குணமானது.
நம் முயற்சி மட்டும் போதாது. தெய்வங் களின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்வில் உயர்வுகளை காணமுடியும்.'
செய்யும் தொழிலே தெய்வம் என்று எளிமையாகவும் எல்லோரிடமும் ஆத்மார்த்தமான அன்புடன் வாழ்ந்துவரும் தாமோதரன், அவர் துணைவியார் மாலதி மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவரும் மென்மேலும் பல வெற்றி சிகரங்களை தொட்டு புகழ் பெற்று மனநிம்மதியுடன், சந்தோஷத்துடன் வாழ மனமார வாழ்த்துகளை வழங்கினோம்.
பழநி தண்டாயுதபாணி அருளால், அவரின் எதிர்கால லட்சியங்கள் நிறைவேறி மகிழ்வோடு வாழ வாழ்த்தி விடை பெற்றோம்.
தொடர்புக்கு கைபேசி எண்கள்:
94432 70445, 86820 00002
-பேட்டி படங்கள்: கோதைலட்சுமி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us