ந்தப் படத்தை முதல்ல என்னோட நண்பரும் எடிட்டருமான மார்ட்டின் டைட்டஸ்கிட்ட பேசுனேன். அவர், எனக்கு திரைத்துறைல வாய்ப்புத் தேடுற நவீன் குமார் என்னும் உதவி இயக்குநரா இருக்கும் நண்பரை பரிந்துரை செய்தார். அவர்கிட்ட இந்தக் கதைசார்ந்து பேசிக்கிட்டிருக்கும்போது கிடைச்சது தான் என்னோட கேமராமேன் அமல்வல்சன். படம் ரியலிஸ்டிக்கா, வியந்துபார்க்க வைக்கிறதா, எப்படி வரணும்னு சொன்னேன். ஒரு கூட்டத்துக்கு நடுவுல ஆர்ட்டிஸ்ட்டுகளைவிட்டு எடுக்கிற கொரில்லா மேக்கிங் டெக்னிக் பற்றி அவர்தான் சொன்னார்.

Advertisment

நான் எடுக்க நினைச்ச கதைப்படி, நாயகன், பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர். ஒரு செய்தியாளருக்கு அவரோட வேலைக்குச் சிக்கல் வரும்போது, தன்னோட வேலையை நிலைநிறுத்த ஒரு ப்ரேக்கிங் நியூஸ் கொடுக்கவேண்டிய சூழல். அப்ப ஐ.பி.எல். நடந்துக்கிட்டிருக்கும். ஏன் இதையே வெச்சு ப்ரேக்கிங் நியூஸ் கொடுக்கலாம்னு போய் பார்க்கும்போது, அதைச்சுத்தி இயங்குற ப்ளாக் டிக்கெட் சந்தை பத்தி தெரியவரும். முதல்ல கதை இப்படி நேர்கோட்டுலதான் இருந்துச்சு. பிறகு டிஸ்கஷன்ல டாக்குமெண்ட்ரியா பண்ணாம, டாக்கு ட்ராமாவா எடுக்கிற யோசனைக்கு வந்தோம். 

Advertisment

படத்தை எல்லாம் எடுத்துமுடிச்ச பிறகு ஒரு இடத்துல தடுமாறிநின்னேன். இதை கரெக்டான வடிவத்துல கொண்டுவரலைன்னா படத்தோட கதையே குழப்பமாயிடும். அப்பதான் உருவகமா சொல்லலாம்கிற யோசனை வந்துச்சு. இது பாரின்னு ஒரு நண்பர் சொன்ன யோசனைதான். 

நானும் என்னோட எடிட்டரும் எடிட்டிங்குக்கு உட்காரும்போது படத்தை சீரியஸான டோனோட காட்டினாத்தான் கவனிப்பாங்கன்னு முடிவு பண்ணினோம். "நக்கீரன் 25' டாக்குமெண்ட்ரி பண்ணின இசையமைப்பாளர் சுந்தர் சிவராமகிருஷ்ணன். அவரிடம் நாங்கள் கேட்டுக் கேட்டு இந்த இசையைக் கொண்டுவந்தோம்.

Advertisment

படத்துக்கு எஸ்.எப்.எக்ஸ் முக்கியம். காந்தி கதை, காந்தாரா உட்பட பல படங்கள் சவுண்ட் என்ஜினியரா பண்ணினவர் பாலாஜி. அவரும் இந்தக் குறும்படத்துக்கு பெரிய பங்களிப்பு தந்திருக்கார். போஸ்டர் உள்ளிட்ட டிசைன்களை, என்னுடைய க்ளாஸ்மேட் டிபோர் நல்ல தரத்துக்கு வெரைட்டியா பண்ணிக்கொடுத்தார். 

blackforest1

விளம்பரம் தந்து, 200 பேர் எனக்கு ரெஸ்யூம் அனுப்பி ஒரு ஸ்க்ரீனிங் பண்ணி 3 பேரைத் தேர்ந்தெடுத்தேன். இது ஒரு கூட்டுமுயற்சி. நடிச்சவங்கள்ல இரண்டு பேர் என் ஆபிஸ்ல உள்ளவங்க. ஒருத்தரை பாண்டிச்சேரியில பிடிச்சோம். 

இதை படமாக்குறது சிரமமா இருக்கும் ரிஸ்குன்னு தெளிவா தெரிஞ்சுதான் பண்ணினோம். பொதுவா குறும்படம் ஒரு வரம்புக்குட்பட்ட, சின்ன இடத்துல எடுப்பாங்க. அதுக்கு மாறாக, திரைத்துறைக்குப் போறோம் அதுக்கான பயிற்சியா இருக்கணும்னு நினைச்சோம். ஒரு அறுபதாயிரம் பேர் கூடுற இடத்துல குறும்படம் எடுக்கிற முடிவெடுத்தோம். ஒரு கட்டத்துல பட்ஜெட் ரொம்ப அதிகமாச்சு. ஒரு பயம் வந்து, படத்தை ட்ராப் பண்ணிடலாம்னுகூட யோசிச்சோம். அப்புறம், என்ன ஆனாலும் பரவாயில்லை ஷூட்டிங் போயிரலாம்னு தைரியமா ஷூட்டிங் கிளம்பிட்டோம். 

எங்களுக்கு சவாலா இருந்தது, கூட்டம். சேப்பாக்கம் மைதானம் ரொம்ப பிஸியான இடம், போலீஸ் இருப்பாங்க. அங்க ஒரு முக்கியமான ஒயின் ஷாப் இருக்கு, அங்கிருந்து நிறைய பேர் குடிச்சுட்டு வருவாங்க. ஐ.பி.எல் நடக்கிற அன்னைக்கு அங்க ஒரு அறுபதாயிரம் பேர் வருவாங்க. இங்கே எப்படி ஷூட் பண்ணப் போறோம்னு கேள்வி வந்துச்சுமுந்தின நாளே ஆர்ட்டிஸ்டுகளை கூப்பிட்டுப் போய் எந்தெந்த இடத்துல என்னென்ன ஷூட் பண்ணப்போறோம்னு விளக்கி அந்த இடத்தைப் பழக்கப்படுத்திட்டோம். யார் என்ன டிஸ்டர்ப் பண்ணினாலும் நீங்க உங்க ரோலைப் பண்ணிடனும் சொல்லியிருந்தோம். நானும் கேமராமேனும், எங்கெங்க ப்ரேமை வைக்கலாம், எப்படி ஷூட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டோம்.

கேமராவைப் பார்த்ததும் முகத்தைக் காண்பிக்கணும், பேசனும்னு நிறைய பேர் வருவாங்க. போலீஸுக்கு நாங்க படம் எடுக்கிறது தெரியக்கூடாதுன்னு நினைச்சோம். படம் எடுத்ததை போலீஸ் கண்டுபிடிச்சாலும், யாரையும் நாங்க டிஸ்டர்ப் பண்ணததால விட்டுட்டாங்க. கேமராவைப் பார்த்ததும் குடிச்சிருந்த சில பேர் வந்து டோனியைப் பத்தி, கபில்தேவைப் பத்தி பேசனும்னு சொன்னாங்க. அதையெல்லாம் தாண்டிதான் படப்பிடிப்பை நடத்தினோம். அந்த ரிஸ்குக்கு படம் வெளியானதும் பாராட்டு கிடைச்சிருக்கு.

படத்தலைப்பு இன்னும் கேட்சிங்கா இருக்கலாம்னு சிலர் சொன்னாங்க. 

ஆனா இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பு பொருத்தமானதுங்கிறதனாலதான் வெச்சோம். இப்ப "பிளாக்ஃபாரஸ்ட்'னா கிரிக்கெட் டிக்கெட் கறுப்புச் சந்தையைப் பற்றி பேசுற படம்னு நிறைய பேர் மனசுல பதிவாயிடுச்சு. அதுவே சக்சஸ்தான்.