நம்முடைய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் நம்ம இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள் எல்லாம் விஞ்ஞானபூர்வமா நிரூபிக்கப்படவில்லை என்று சொல்கிறார். அப்படின்னா ராமரும், கிருஷ்ணரும் கற்பனையா? நம்ம இந்து மதம்தான் உருவ வழிபாட்டை பெருசா எடுத்து சொல்லுது...! அப்படின்னா எண்ணற்ற தெய்வங்கள நாம வணங்கிட்டு இருக்கோமே இதெல்லாம் சரியா, தவறா எப்படி பார்க்கிறது?சார் உங்க உடம்புக்கு நியூட்ரிசியன் வேணும்னு சொன்னா, நீங்க எந்த பார்முலா வேணாலும் எடுக்கலாம். இப்போ பாஸ்பேட் வேணும், எனக்கு கால்சியம் வேணும், மெக்னீசியம் வேணும்னு சொல்லி நான் அப்படியே மாத்திரையா போட முடியாது. வாழைப்பழம் சாப்பிட்டா மெக்னீசியம் கிடைக்கும், வெற்றிலை பாக்குல கொஞ்சம் சுண்ணாம்பு கலந்து, அல்லது பால் சாப்பிட்டா கால்சியம் கிடைக்கும். அப்படித்தானே நான் எடுக்கணும் இந்த ராமர், கிருஷ்ணன் எல்லாம் அந்த மாதிரி பால்ல கிடைக்குற கால்சியம், மெக்னீசியம் மாதிரி...
அவங்க லைஃப் நல்ல நோபல் லைஃப் ராமருடைய லைஃப் வந்து ஒரு சிறந்த வாழ்க்கை. அந்த சிறந்த வாழ்க்கையை பார்க்கும்போது ஏன் "நான் கூட இந்த மாதிரி ஒழுக்கமா இருக்கலாமே நானும் ஒரு ஒரே மனைவியோடு வாழ்ந்தால் என்ன' அப்படிங்கற எண்ணத்தை இந்த ஸ்டோரி ஏற்படுத்தும். அதனால் தான் கருத்துக்கள் பல... அந்த பாட்டு ரொம்ப அருமையானபாட்டு. பாரதியாருடைய பாட்டு மக்களுக்கு நீதி சொல்வதற்கு அவைகள் பயன்படும். இப்ப நான் வந்து 50 ஆண்டுக்கு முன்பு ராமாயணம் சொல்றதுக்கு தொடங்குறேன். நான் கல்லூரி முடிச்சுட்டு வந்த உடனே தொடங்குறேன். எனக்கு வந்து ராமபக்தியையோ, முருகன் பக்தியையோ, சிவன் பக்தியையோ ஏற்படுத்துவதற்காக நான் அந்த சமய மேடைக்கு வரல. என் பேச்ச இப்ப ரீ ப்ளே பண்ணி கேட்டவங்களுக்குத் தெரியும்நூற்றுக்கணக்கான நல்ல விஷயங்கள் மக்களுக்கு ஷேர் பண்ணனும். அதுக்கு எனக்கு ஒரு அருமையான களம் எதுன்னு கேட்டா, அரசியல் மேடைக்கு போக முடியாது. பொது மேடைக்கு போய் நான் மக்களைக் கூட்ட முடியாது. அந்த ரிலிஜியன் என்கிற பிளாட்பார்ம் அருமையான பிளாட்பார்ம். அதுல நல்லதை சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு.. அப்படித்தான் நம்ம ராமாயணம் மற்ற கதைகளை எல்லாம் எடுத்துக்கணும்.
நீங்க ஆராய்ச்சி பூர்வமா யோசிங்கன்னா இன்னொரு பெரிய வேடிக்கை இருக்கு. ராமன் வந்து சத்ரியன். கிருஷ்ணன் அரச பரம்பரை. இது வந்து ஒரு வரலாற்றுப் போர். பலபேருக்குத் தெரியாது.
எப்படின்னு கேட்டீங்கன்னா இந்தியாவில் நான்கு வர்ணங்கள்ல பிராமணர், சத்திரிய வர்ணத்துக்கிடையில் போர் நடந்துகிட்டே இருக்கும் சூப்பர்மெய்சிய யார் மெயின்டெய்ன் பண்றது அப்படீன்னு... வைசியர்கள் பெரும்பாலும் அந்த இடத்துக்கு வர மாட்டாங்க அவங்களுக்கு வியாபாரம் நடந்தா சரி... பொருள் வந்தா சரி...முதலிடம் யாருக்க
நம்முடைய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் நம்ம இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள் எல்லாம் விஞ்ஞானபூர்வமா நிரூபிக்கப்படவில்லை என்று சொல்கிறார். அப்படின்னா ராமரும், கிருஷ்ணரும் கற்பனையா? நம்ம இந்து மதம்தான் உருவ வழிபாட்டை பெருசா எடுத்து சொல்லுது...! அப்படின்னா எண்ணற்ற தெய்வங்கள நாம வணங்கிட்டு இருக்கோமே இதெல்லாம் சரியா, தவறா எப்படி பார்க்கிறது?சார் உங்க உடம்புக்கு நியூட்ரிசியன் வேணும்னு சொன்னா, நீங்க எந்த பார்முலா வேணாலும் எடுக்கலாம். இப்போ பாஸ்பேட் வேணும், எனக்கு கால்சியம் வேணும், மெக்னீசியம் வேணும்னு சொல்லி நான் அப்படியே மாத்திரையா போட முடியாது. வாழைப்பழம் சாப்பிட்டா மெக்னீசியம் கிடைக்கும், வெற்றிலை பாக்குல கொஞ்சம் சுண்ணாம்பு கலந்து, அல்லது பால் சாப்பிட்டா கால்சியம் கிடைக்கும். அப்படித்தானே நான் எடுக்கணும் இந்த ராமர், கிருஷ்ணன் எல்லாம் அந்த மாதிரி பால்ல கிடைக்குற கால்சியம், மெக்னீசியம் மாதிரி...
அவங்க லைஃப் நல்ல நோபல் லைஃப் ராமருடைய லைஃப் வந்து ஒரு சிறந்த வாழ்க்கை. அந்த சிறந்த வாழ்க்கையை பார்க்கும்போது ஏன் "நான் கூட இந்த மாதிரி ஒழுக்கமா இருக்கலாமே நானும் ஒரு ஒரே மனைவியோடு வாழ்ந்தால் என்ன' அப்படிங்கற எண்ணத்தை இந்த ஸ்டோரி ஏற்படுத்தும். அதனால் தான் கருத்துக்கள் பல... அந்த பாட்டு ரொம்ப அருமையானபாட்டு. பாரதியாருடைய பாட்டு மக்களுக்கு நீதி சொல்வதற்கு அவைகள் பயன்படும். இப்ப நான் வந்து 50 ஆண்டுக்கு முன்பு ராமாயணம் சொல்றதுக்கு தொடங்குறேன். நான் கல்லூரி முடிச்சுட்டு வந்த உடனே தொடங்குறேன். எனக்கு வந்து ராமபக்தியையோ, முருகன் பக்தியையோ, சிவன் பக்தியையோ ஏற்படுத்துவதற்காக நான் அந்த சமய மேடைக்கு வரல. என் பேச்ச இப்ப ரீ ப்ளே பண்ணி கேட்டவங்களுக்குத் தெரியும்நூற்றுக்கணக்கான நல்ல விஷயங்கள் மக்களுக்கு ஷேர் பண்ணனும். அதுக்கு எனக்கு ஒரு அருமையான களம் எதுன்னு கேட்டா, அரசியல் மேடைக்கு போக முடியாது. பொது மேடைக்கு போய் நான் மக்களைக் கூட்ட முடியாது. அந்த ரிலிஜியன் என்கிற பிளாட்பார்ம் அருமையான பிளாட்பார்ம். அதுல நல்லதை சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு.. அப்படித்தான் நம்ம ராமாயணம் மற்ற கதைகளை எல்லாம் எடுத்துக்கணும்.
நீங்க ஆராய்ச்சி பூர்வமா யோசிங்கன்னா இன்னொரு பெரிய வேடிக்கை இருக்கு. ராமன் வந்து சத்ரியன். கிருஷ்ணன் அரச பரம்பரை. இது வந்து ஒரு வரலாற்றுப் போர். பலபேருக்குத் தெரியாது.
எப்படின்னு கேட்டீங்கன்னா இந்தியாவில் நான்கு வர்ணங்கள்ல பிராமணர், சத்திரிய வர்ணத்துக்கிடையில் போர் நடந்துகிட்டே இருக்கும் சூப்பர்மெய்சிய யார் மெயின்டெய்ன் பண்றது அப்படீன்னு... வைசியர்கள் பெரும்பாலும் அந்த இடத்துக்கு வர மாட்டாங்க அவங்களுக்கு வியாபாரம் நடந்தா சரி... பொருள் வந்தா சரி...முதலிடம் யாருக்குங்கிற பிரச்சினைக்கே வரமாட்டாங்க. இந்த இரண்டு வர்ணத்துக்கு மட்டும் போர் நடக்கும்.
இதுல என்ன நடந்ததுன்னு கேட்டீங்கன்னா ரொம்ப கிளவரா சத்திரிய வம்சத்துல யாரெல்லாம் புகழ் பெறுகிறார்களோ, அவர்கள அப்சர்வ் பண்ற கெப்பாசிட்டி அந்த பிராமண வர்ணத்துக்கு உண்டு.
அவங்க என்ன பண்ணுவாங்க, இப்ப கண்ணன் வந்து புகழ் அடையிறான் அப்படீன்னா இந்த பிராண்டுல சேர்த்து டுறது... ராமர் புகழ் அடைகிறார் அப்படின்னா இந்த பிராண்டுல சேர்த்துடுறது... எதிர்க் கட்சில நல்ல கட்சி நடத்தக்கூடியவர நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டா இப்ப என்ன கெட்டுப்போச்சு நம்ம கட்சி ஸ்டிராங் ஆயி டும்ல. இந்த அரசியல் ஸ்ட்டாடிக்டிக்ஸ் சொசைட்டில நடந்துகிட்டே இருந்தது.
இங்க ராமர் கையில் இருந்தது வில்லு. கிருஷ்ணர் கையில இருந்தது புல்லாங்குழல். பரசுராமர் கையில் இருந்தது கலப்பை. இதெல்லாம் யாரு கையில் இருக்கிறது... உழைக்கிற வர்க்கத்து கையில தான் கலப்பை இருக்கும். பலராமனுடைய கையில கலப்பை, பரசுராமனுடய கையில கோடாரி.
இங்க உழைக்கும் வர்க்கத்தினுடைய கருவிகள், பலராமனுடைய கலப்பை, பரசுராமனுடய கோடரி, ராமருடைய வில்லு, வேட்டையாடுகிற சமூகத்தில் இருந்தபோது கண்ணனுடைய மாடு மேய்க்கிற குச்சி, புல்லாங் குழல் இவைகள் அனைத்தும் உழைக்கும் வர்க்கத்தினுடைய மேலாண்மையாகவே உருவாயின.
பிறகு அதை ரிலீஜன்ல அப்சர்வ் பண்ணிக்கிறாங்க... அதையும் கடவுளாக்கி... அதுக் கும் ஒரு... பூஜிக்கிற மாதிரி... அந்த பூஜிக்கிற உரிமை என்னோடது அப்படின்னு கொண்டு வந்து நிறுத்தி ஒரு ஃபார்முக்குள்ள ரிலீஜியன கொண்டு வந்துகிட்டே இருந்தாங்க. ஆகையால் இவர்களெல்லாம் பிற்காலத்தில் கடவுளாக ஆக்கப்பட்டவர்கள்.
ஏன்னா வால்மீகி இராமாயாணத்துல யார் சிறந்த மனிதன்னு கேட்கிறான். இந்த மாதிரி சிறந்த குணங்களுடைய மனிதன் ராமன் என்கிற ஸ்டேட்மென்ட் இருக்கிறது.
யாரும் ஒரே நாள்ல கடவுள் ஆக்கல... சொசைட்டியே ஆக்கிடுச்சு.
நாம என்ன சொல்லுவோம் ஒரு நல்ல மனுஷன் இருந்தா... கடவுள் மாதிரிய்யா... அப்படி சாப்படு போடுவாரு. எல்லாருக்கும் கடவுள் மாதிரிய்யா... அள்üக் குடுப்பாருய்யா... ஒரு கஷ்டம்ன்னா ஓடி வந்து உதவுவாருய்யா... வந்து நிப்பாருய்யா அந்த இடத்துல...
ஆகையால் கடவுள பத்தி சில அபிப்ராயங்கள் வச்சுருப்போம். அந்த அபிப்ராயங்களெல்லாம் இவங்களுக்கு பொருந்துறபோது இவங்க கடவுள் ஆயிடு றாங்க. சொசைட்டி ஆக்குது.
அதனால அத வந்து நடந்தது என்று சீரியஸாக எடுத்துக்கவும் வேண்டாம்.
அல்லது நடக்கலன்னு சண்ட போடவும் வேண்டாம். ஓரளவு நடந்து, பிறகு கற்பனைகளால் மிகைப்படுத்தப்பட்டு பிறகு அவரவர் வர்ணத்திற்கேற்ப பெரிதுபடுத்தப்பட்டு இந்த கடவுள் வடிவங்கள், உருவங்கள் எல்லாமே இன்றைக்கு நிலவுகின்றன.
அப்படித்தான் இருக்கும்.
அதாவது நீங்க சொல்றத பார்த்தா இந்த இதிகாசங்கள், புராணங்கள்ல சொல்லப்படுகிற அந்த சம்பவங்கள் அதுக்கு பின்னாடி இருக்கின்ற தத்துவத் தையும், இலட்சியத்தையும் விட்டுட்டு, உருவத்துக்கு முக்கியத்துவம் தந்து, அந்த வழில நாம போயிட்டுருக்கிறா தோன்றுகிறதா?
நா இப்போ ஒரு உதாரணம் சொல்றேன் பாருங்க. நடந்ததா இருந்தா வரலாறு எப்படி மாறமுடியும். நடந்ததுன்னு சொன்னா அது ஃபேக்ட் தான... ரிஜிஸ்டர் பண்ணணும்.
நடந்ததுன்னு சொன்னா பௌத்த ராமாயணக் கதை வேற... சமண ராமாயணக் கதை வேற... அதாவது சமணர்களுடைய ராமாயணத்தின்படி இராவணக் கொன்னது லட்சுமணன். ஏன்னா யார் கொலை பண்ணாங்களோ அவங்க நரகத்துக்கு போகணும். ராமனைநரகத்துக்கு அனுப்ப முடியாது. அதனால சமணர்கள் கதை எழுதும்போது என்ன பண்ணாங்க... லட்சுமணன் தான் ராவணனைக் கொன்னுட்டு நரகத்துக்குப் போயிட்டாரு அப்படின்னு சமண ராமாயணக் கதையில இருக்கு. பௌத்த இராமாயண கதைப்படி பாத்தீங்கன்னா சீதா இராவணனுடைய பொண்ணு. அவன் தனக்கு அவளால கேடு வரும்னு விட்டுடறான். அவ தான் அங்க ஜனகனால் வளர்க்கப்படுகிறாள். அவளாலேயே ராவணனுக்கு கேடு வந்தது அப்படின்னு அந்தக் கதையை கொண்டுபோறாங்க. அப்போ பௌத்தர்கள் எழுதின ராமாயணக்கதை வேறயாயிருக்கு, சமணர்கள் எழுதினது வேறயாயிருக்கு, வைஷ்ணவர்கள் எழுதினது வேறயாயிருக்கு வெவ்வேறு ராமாயணங்கள். ஏன் சில இன்சிடன்ஸ் வால்மீகிலயும் கம்பன்லயும் வேரியாகுது. துளசிலயும் வால்மீகிலயும் வேரியாகுது. எழுத்தச்சன் ராமாயாணத்திலயும் வேரியாகுது. ஆகையால் எப்போ வேரியாகுதோ, அது வரலாறு இல்லை. நடந்த சின்ன வரலாறு மிகைப்படுத்தப்பட்டு, கற்பனைகள் சேர்க்கப்பட்டு, புலவர்கள் கையில் புகுந்து வருகிற போது நிறைய புனை கதைகள் சேர்க்கப்பட்டு இன்னைக்கு பெரிய அளவுல இருக்கு.
ஆழ்வார்கள் காலத்தில நீங்க பாத்தீங்கன்னா ராமர் முழு கடவுளாயிட்டார். அதனால அவங்க கடவுள வழிபடுகிற பழக்கம் ஏற்பட்டிருச்சி.
நம்மள பொருத்தவரைக்கும் கேட்டீங் கன்னா எது நல்லதோ அதை எடுத்துக்கலாம். எது நமக்கு ஒத்து வரலையோ அத தூக்கி தள்ü வச்சிடலாம். அவ்வளவுதான்.
மதம் என்றால் என்ன? ஆன்மிகம் என்றால் என்ன? இரண்டையும் புரிந்துகொள்வதில் ஏன் அவ்வளவு குழப்பம் ஏற்படுகிறது? இதில் எதைக் கொண்டு நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என நீங்க நினைக்கிறீங்க?
மதம்ங்கிறது ரோடு, ஆன்மிகம்ங்கிறது ஊரு. நான் அடிக்கடி சொல்லுவேன் எங்க வீட்டுக்கு வரணும்னு சொன்னா ஒரு ரோட்ல தான் நீங்க வரணும். ரோடு எங்க வீடாகாது. எங்க ரோடு முடியுதோ, அங்க தான் எங்க வீடு தொடங்க ஆரம்பிக்குது. நான் ரோட்ல போய் என் வீட்டை கட்ட முடியாது. என் வீட்டுக்குள்ளயும் ரோடு போக முடியாது இல்லையா... அதேமாதிரி ஆன்மிகம்ங்கிறது டெஸ்டினேஷன் அடைகிற இடம். மதம்ங்கிறது அதுக்கான ரோடு. ரோடு வேற, வீடு வேற. மதம்கிறது பாதை. ஆன்மிகம்கிறது அடையவேண்டிய நிலை. எல்லாமே கடைசில ஒன்னுதான்.
மதவாதிக்கு மதக் கொள்கைகளும் கோட்பாடுகளும் முக்கியம். ஆன்மிகவாதிக்கு அந்த கோட்பாடுகளை எல்லாம் தாண்டிய பொது உண்மை முக்கியம். தன் மதம் பற்றி மட்டுமே கவலைப்படுகிறவன் மதவாதியாகி விடுகிறான். எல்லா மதங்களையும் புரிந்து கொண்டு மதிக்கத் தெரிந்தவன் ஆன்மிகவாதியாக ஆகிவிடுகிறான். என்னுடைய அபிப்ராயம் மதவாதி ஒருபோதும் ஞானமடைய முடியாது. மதவாதி மதவாதியாகவே இருக்கலாம். மறுபடியும் பிறக்கக்கூடும். மறுபடி மறுபடி பிறக்கக்கூடும். அவர்கள் ஞானமடைதல் என்பது சத்தியமில்லை. முக்தி என்பது மதவாதிக்கு கிடையாது. ஆன்மிகவாதிக்கு முக்தி என்பது உண்டு.
அப்படின்னா சாமானிய மனுஷங்க வந்து இந்த மதத்தை பிடிச்சுகிட்டு பிடிவாதமா இருக்கிறதை விட ஆன்மிக லட்சியம் தான் முக்கியம் என்கிற மாதிரி நீங்க சொல்றீங்க...?
அது அƒவர்னஸ். அவங்களுக்கு வந்தாதான் தெரியும். வர்ற வரைக்கும் அவங்களால அப்படி இருக்க முடியாது. வரணும்.இப்போ சாமானிய மனிதன் வாழ்க்கையில ஆன்மிகம், ஆன்மிகத்தின் அவசியம் என்ன? அது எங்கிருந்து எப்படி தொடங்குகிறது?
அது அவசியம்னு நா சொல்லமாட்டேன். அவங்களுக்கு அவசியம்னு அவங்களுக்கு தெரிஞ்சாதான் கண்டுபிடிப்பாங்க அது வரைக்கும் மதவாதியா இருப்பாங்க...
இப்போ எனக்கு புள்ள வேணும். இந்தக் கோவிலுக்கு போயிட்டு வந்தா கிடைக்கும். எனக்குக் கல்யாணம் ஆகணும், இந்தக் கோவிலுக்கு போயிட்டு வந்தா நடக்கும். அதுதானே மனித இலட்சியம். ஏய் கல்யாணம் பண்ணி, புள்ள பெத்து என்னடா பண்ணப்போறன்ற கேள்வி யாருக்கு வரப்போகிறது.
பெத்தவனெல்லாம் என்ன பண்ணிட்டான். பெத்தவனெல்லாம் பிள்ளைய பெத்து தெருவில விட்டுருக்கிறான். இல்ல அவன் அப்பன தெருவிலே விட்டுருக்கான்.
ஏன்டா நாமளும் இதே முட்டாள்தனத்த பண்ணனுமா, தனக்கு பிள்ளை இல்லைனு ஏழு வருஷமா கோவிலுக்கு போறவன்லாம் இருக்கிறான்.
பெத்தவன், பிள்ளைய பெத்துட்டு 700 கோவில் போயிட்டிருக்கிறான், என் பிள்ளை என்ன காப்பாத்தமாட்ƒடங்கறான் அப்படின்னு.
அந்த ரியலைஷேஷன் வரும்போது தான் அவனுக்குள்ள அந்த ஞானம் உருவாகும். ஆகையால் மதவாதி ஆன்மிகவாதி ஆவதென்பது அவனுக்குள்ள ஏற்படக்கூடிய ஒரு மலர்ச்சி. அது தானா தான் ஏற்படும். வெüயிலிருந்து யாரும் ஏற்படுத்த முடியாது.
இந்த ஆன்மீக வாழ்க்கைக்கு ஒரு குரு அவசியமா?
அந்த குரு மூலமாக பெற வேண்டிய மந்திர உபதேசம் அவசியமா? பிரபல தத்துவமேதை ஜெ. கிருஷ்ண மூர்த்தி மனிதர்களுக்குள்ளே உறையும் ஆன்மாதான் குரு. வெüயே ஒரு குரு அவசியம் இல்லை என்று சொல்கிறாரே இத நீங்க எப்படி பார்க்கிறீங்க?
அதாவது ஜே. கே. ஒரு பெரிய இன்டெலி ஜென்ட். உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர். ஆனா ஓஷோ அவரை கிண்டலடிப்பார். குரு தேவையில்லை என்பதையே எப்போதும் கூட்டத்தை கூட்டி சொல்லி குருவாகவே வாழ்ந்து கொண்டிருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு ஒரு உதாரணம் கூட சொல்வாரு இந்த உலகத்துல எல்ƒலாரும் தற்கொலை பண்ணிக்ƒகாங்கப்பா, தற்கொலை பண்றது தான் பெருமைன்னு ஒரு குரு பிரச்சாரம் பண்ணிக்கிட்டே இருந்தாராம்.
ஒருத்தன் எழுந்து கேட்டானாம் நீ பண்ணாம அத எங்களுக்கு ஏன் சொல்லிட்டு இருக்கன்னு. இல்ல எல்லாரையும் அனுப்பிச்சுட்டு கடைசியாகத் தான் நான் போகணும். அதனால தான் நான் இன்னும் உயிரோட இருக்கிறேன். என் வேலை இன்னும் முடியல. அதனால தற்கொலை பண்ணலனு ஓஷோ கிண்டலடிப்பார். இந்த ஜே. கே. எப்படின்னு கேட்டிங்கன்னா அவரு ரியலைஸ்டு ஷோ. அவரு சில விஷயங்களை ஷேர் பண்ணினார். அவரு குருவாக நடந்துக்கல அவர் சீடர்கள் அவரை குருவாக நடத்திக்கிட்டாங்க. அதுதான் வித்தியாசம். அவர் தன்னை குரு என்று நடைமுறைப்படுத்தவில்லை.
சில குரு சொல்வார்கள் நீ கல்யாணம் பண்ணிக்காத, நீ கல்யாணம் பண்ணிக்கோ, நீ இந்த ஊர்ல இருக்காத, அந்த ஊருக்கு போயிட்டுவா. நீ இந்த மருந்த சாப்பிடாத, அத சாப்பிடு. அதாவது இந்த குருவாக இருப்பவன் அத்தாரிட்டிங்கிறமாதிரி ஏதாச்சும் பண்ணிக்கிட்ருப்பான். அதுமாதிரி ஜே.கே. ஒருபோதும் செய்ததில்லை. அவரு நிறைய விஷயங்களை பொதுவா பேசுவாரு தனிப்பட்ட விஷயங்கüல் தலையிட மாட்டார். ஆகையால் ஜே,கே குருவாக நடந்துக்கல.
சிஷ்யர்கள் அவர குருவா எடுத்துக் கிட்டாங்க.
மந்திரோபதேசம் என்பது ஒரு சின்ன விஷயம். ஒரு சில லெவல்ல நமக்கு மேல போறதுக்கு ஒரு சில மந்திரங்கள் உபதேசங்கள் தேவைப்படலாம். அது கட்டாயம்ன்னு நான் சொல்லல. சில பேருக்கு அது வேணும். மந்திரத்த ஜெபம் பண்ணிங்கன்னா ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒரு பலன் இருக்கு. அந்த பலனைத்தான் அடைய முடியும். மந்திரத்தை ஜெபிக்கிறவன் அந்த பலனுக்கு மேல் ஒரு துரும்பு கூட அடைய முடியாது. இதை இத்தனை தடவை ஜெபம்பண்ணா இந்த பலன்னு ஒரு கணக்கு இருக்குன்னா சம்பளம் நிர்ணயம் பண்ணினமாதிரி. உனக்கு ஒரு லட்சம் ரூபா... அப்டின்னு சொல்லி சம்பளம் குடுத்த மாதிரி ஒரு ஐஏஎஸ் ஆபீசருக்கு சம்பளம் கொடுத்தால் அது மட்டும் தான் அவருக்கு. ஆனால் ஒரு மினிஸ்டருக்கு சம்பளமா முக்கியம்? அப்போ மந்திரத்தை வைத்து ஆன்மிகம், மதம் பின்பற்றுபவனெல்லாம் லிமிடெட் ஸ்கோப்ல தான் இருப்பான். மந்திரத்தை கடந்து மேல போகிறவன் அதுக்கு மேலான ஒரு நிலைக்கு போகமுடியும். மந்திரஉபதேசம் கட்டாயம்னு நான் சொல்லமாட்டேன். சில பேருக்கு பயன்படும். விவேகானந்தரே சொல்றாரே "நான் வந்து வெüல பார்க்கிறதுக்கு அத்வைதி பெரிய பிரம்ம ஞானிங்கிறாங்க, ஆனா நான் வெüநாடு போகும் போது, எனக்கு சிக்கல் வரும்போது நான் என் குருநாதர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை பயன்படுத்துகிறேன் அது எனக்கு பலனüக்கிறது' என்று சொல்கிறார். இப்ப நாம போறோம், அங்க உதவிக்கு யாருமே இல்ல அப்டிங்கிறப்ப சில மந்திரத்தை சொன்னால் சரியாக ஒருவன் அங்க உதவிக்கு ஓடி வருவான்.
எனவே சில குறிப்பிட்ட விஷயங்களுக்குத்தான் மந்திரம், ஜெபம் எல்லாமே. நோய் போகணும்னா அதற்கு ஒரு மந்திரம் உள்ளது. அதற்கு பலன் உள்ளது.
பொன் வசியம், பொருள் வசியம், பெண் வசியம் இப்படி எல்லாத்துக்குமே மந்திரம் உள்ளது. அதை கூறினால் அது நடக்கும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us