டந்த 2003-ஆம் ஆண்டு முதல் இதுவரை உலகில் 88 போர்கள் நடந்துள்ளன. இதில் 20 போர்கள் இந்த 2023-2025 காலகட்டங்களில் நடந்துள்ளது! இதில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த போரும் அடங்கும். 

இதேபோல் இந்தியாவில் 39 விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 2 விமான விபத்துகள் அபாயகரமான பாதகத்தினை உருவாக்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்தும் அடங்கும். 

இந்த விபத்துகளில் முதலாவது 12 நவம்பர் 1996-ல் மும்பையில் 349 உயிர்களும், 12 ஜுன் 2025-ல் அகமதாபாத்தில் 275 உயிர்களும் பறிபோயிருக்கிறது. 

Advertisment

ஏன் இந்த குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் அதிகமான போர்களும், பாதகங்களும்? 

இதுபோன்ற பாதகங்கள் இன்னும் தொடருமா? 

ஜோதிடத்தின் கணிப்பு எதனைக் காட்டுகிறது? 

Advertisment

கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் உலகில் அபாயகரமான பாதகங்கள் தற்போது நடைபெறுகின்றன. 

கால புருஷத்திற்கான உயிராக (லக்னம்) குறிப்பிடப்படுவது மேஷம். இந்த மேஷம் என்பது சர ராசிகளில் விளங்கும் முதன்மை யான ராசி. அனைத்து சர ராசிகளுக்கும் 11-ஆவது ராசியாக விளங்கும் ராசி பாதகத்தினை உருவாக்கும். இதன் அடிப்படையில் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாவ கிரகங்கள் 11-ஆம் ராசியான கும்பத்தில் பலம் பெறும் நேரம் பாதகத்தினை உரு வாக்கும் என்பது ஜோதிட விதி.

இதே போல் கடக ராசியினை உயிராகக் (லக்னம்) கொண்டு பிறப்பெடுத்தவர்களுக்கு கடகத்திற்கு 11-ஆம் ராசியான ரிஷப ராசியில் பாவ கிரகங்கள் பலம் பெறும் போது பாதகங்களை உருவாக்கும். துலா ராசியினை உயிராகக் கொண்டு பிறப்பெடுத்தவர்களுக்கு துலாத்திற்கு 11-ஆம் ராசியான சிம்ம ராசியில் பாவ கிரகங்கள் பலம் பெறும் போது பாதகங்களை உருவாக்கும். மகர ராசியினை உயிராகக் கொண்டு பிறப்பெடுத்தவர்களுக்கு மகரத்திற்கு 11-ஆம் ராசியான விருச்சிக ராசியில் பாவ கிரகங்கள் பலம் பெறும் போது பாதகங்களை உருவாக்கும். 

இதே போல் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பத்திற்கு 9-ஆம் பாவமும், உப ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனத்திற்கு 7-ஆம் பாவமும் பாதகத்தினை உருவாக்கும். இவை ஜோதிடத்தின் அடிப்படை விதி.
இதன் அடிப்படையில் ஆராயும் போது, கால புருஷன் உதித்த மேஷ லக்னத்திற்கு பாதகத்தினை உருவாக்கும் ராசியான கும்பத்தில் சனி என்ற பாவ கிரகம் ஆட்சி பலம் பெற்று அமர்ந்துள்ளது. இதனால் தான் இது போன்ற போர்களும் விபத்துகளும் நடந்து வருகிறது. 

திசையினை அடிப்படையாக வைத்து ஆராயும் போது, இந்த கும்ப ராசியானது மேற்கு திசைக்கு உரிய ராசி. 

உலக வரைபடத்தில் ஈரான், இஸ்ரேல், உக்ரைன், ரஷ்யா போன்ற போர் புரிந்த நாடுகள் உள்ள பகுதி மேற்கு திசையில் அமைந்துள்ள நாடுகள். 

இந்திய வரைபடத்தில் விபத்து நிகழ்ந்த மும்பையும், அகமதாபாத்தும் மேற்கு திசையில் அமைந்துள்ள நகரங்கள். எனவே, உலக வரைபடத்தில் மற்றும் இந்திய வரை படத்தில் மேற்கு திசையிலேயே இதுபோன்ற பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

இனி இதுபோன்ற பாதகங்கள் தொடருமா?

தற்போதய கோட்சாரங்களின் அடிப்படையில் கால புருஷனுக்கு 11-ஆம் ராசியான கும்பத்தில் சனி என்ற கிரகம் ஆட்சி பலம் பெற்றும் கடந்த ஏப்ரல் 26 முதல் ராகுவுடன் இணைந்து  சஞ்சாரம் செய்கிறது. ராகு வான்வழி தாக்குதலுக்கான காரக கிரகம். அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்திற்கும் இவையே காரணமாகிறது. 

இதே நிலை வரும் மார்ச் 6, 2026 வரை தொடர்வதாக நமது பாரம்பரிய முறையில் கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் இந்த கிரகக் கூட்டணி புதுப்புதுக் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும். கண்ணுக்கு புலனாகாத பணப்புழக்கத்தை யும் அதிகப்படுத்தும்.

தொடர்புக்கு:  90251 61336