ஸ்ரீ ரங்க விமானத்தின் மகிமைகள்!

பிரம்மதேவன் திருமாலின் கோலத்தைக் கண்டு கüத்து அருள்பெற வேண்டினான். பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணன்,  பிரம்ம தேவனுக்கு "பிரணவ மந்திரத்தையும். அஷ்டாட்சர மந்திரமாகிய "ஓம் ஸ்ரீ நாராயணாய' என்பதையும் விடாமல் உச்சரித்துக் கொண்டிருந் தால் அனைத்து பாவங்களும் நீங்கும், சகல வல்லமையும் கூடும். சகல வேதாந்த ரகசியமும் வெüப்படும்" என்று உபதேசித்தார்.  

Advertisment

அஷ்டாட்சர மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித் தால், என்னை விட்டு நீங்காமல் அடியவர்கள் வாழலாம். இதுதான் மூல மந்திரம் என்றார் ஸ்ரீ நாராயணமூர்த்தி. "ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிப் போர்,  மண்ணுலகில் இருந்தாலும் எல்லா வகை நிலைத்த செல்வத்தையும் பெறுவர். எனவே பிரம்ம தேவனே நீரும் இடைவிடாமல் என் அஷ்டாட்சர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இரு" என்று வைகுண்டத்தில் கட்டளையிட்டாராம் திருமால்.

பிரம்மாவும் இதனை ஏற்று திருமாலைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்திற்கு திருஉள்ளம் இறங்கிய ஸ்ரீமந் நாராயணமூர்த்தி, தன் அருளை ஒன்றிணைத்து , ஒரு விமானத்தை உருவாக்கினார் என்று வைணவ நூல்கள் உரைக்கின்றன. அந்த விமானம்தான் ஸ்ரீரங்க விமானம். இந்த ஸ்ரீரங்க விமானம், தகதகவென ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன், அந்தரத்தில் எழுந்தருü வந்தது. அதைக் கண்ட பிரம்மதேவன்,  தன் தவநிலை விட்டு எழுந்தார். ஆச்சரியமடைந்தார். கைகூப்பி வணங்கினார். விமானத்தை உற்று நோக்கினார். 

அதில் வைகுண்ட வாசிகள் தென்பட்டனர். அனந்தர்,  ஜனகாதி முனிவர்கள், தேவர் கூட்டங்கள்,  யட்சரக்கின்னரர்கள், கிம்புரு காந்தர்வர்கள், சித்த வித்யாதரக் கூட்டங்கள், சகல ரிஷி கூட்டங்கள்,  நாரதர் என கோடான கோடி பேர் காட்சியüத்தனர். அந்த ஸ்ரீ ரங்க விமானத்தை பெரிய திருவடி" என்று வைணவ உலகம் போற்றும் கருடாழ்வார் தன் முதுகில் தாங்கி வந்தார். அந்த விமானம் முத்துச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  வெண்பட்டு குடை தாழ்ந்து அந்த விமானத்தை கவிந்து காத்தது. அவ்விமானத்தின் வருகையை முன்கூட்டி உரைக்க, விஷ்வக்ஸேனர், பொன் பிறம்பினால் சந்தடியை விலக்கிக் கொண்டு கட்டியம் கூறி வந்தார்.  சந்திரனும், சூரியனும் விமானத்திற்கு சாமரம் வீசினர்.  

Advertisment

நாரதரும்,  தும்புருவரும், கந்தர்வர்களும் கீர்த்தனைகளை பாடி வந்தனர். மற்றும் இருந்த தேவர்கள் கைகளை தலைக்கு மேல் கூப்பி நின்றனர்.  

தேவேந்திரன் பூமாரி பொழிந்தான். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகர், ஆதி மத்தியானந்த ரஹிதர் ஸ்ரீ ரங்கநாதர் வந்தார் என்று திருச்சின்னங்கள் ஊதின.  18 வகையான மேள வாத்தியங்கள்,  தேவ துந்துபி என அனைத்தும் அகில உலகமும் கேட்கும்படி அதிர்ந்தன. அனைவரும் 'ஜெயம் ஜெயம்' எனும் முழங்கிக்கொண்டு இப்பூவுலகிற்கு, அவ்விமானத்தை இறக்கினர்.

இக்காணக் கிடைக்காத காட்சியைக் கண்ட பிரம்மதேவர்,  நிலத்தில் விழுந்து விமானத்தை வணங்கினார். தன் நான்கு முகங்கüன் வழியாகவும், நான்கு வேதங்களை ஓதினார்.  ஸ்ரீரங்க விமானத்துடன் வந்த சுனந்தர் என்பவர்,  பிரம்ம தேவனைப் பார்த்து  "இவ்விமானம் பிரணவ மந்திரம், அந்த மந்திரத்தின் விளக்கமாக திகழும் பராபர வஸ்துவாகத் திகழ்பவர் ஸ்ரீரங்கநாயகர் என்று எடுத்துரைத்தார். பிரம்மதேவனின் பெரும் முயற்சியால், இம்மண்ணுலகில் வாழும் திருமால் அடியார்கள் அனைவரும் இவ்விமானத்தை சேவிக்கும் பேறு பெற்றனர். அவ்விமானத்தின் மையத்தில் பிரணவத்தின் சொரூபமான நாராயண மூர்த்தி,  பாம்புப் படுக்கையில், கோலாகல மாக, அடியார்களை காக்கும் பொருட்டு, யோக நித்திரையில் காட்சியüக்கிறார்.  

Advertisment

எனவே ஸ்ரீ ரங்க விமானத்திலேயே அரங்கநாதனை சேவிக்க முடியும். பூஜை செய்ய முடியும்.  அவ்வாறு செய்தவர்கள் பிரம்ம பட்டத்தையும் பெற்றிருக்கிறார்கள்.  

இந்திரன், அக்னி, எமன்,  நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் என்று சொல்லப்படும் அஷ்டதிக் பாலர்கள் ஸ்ரீ ரங்க விமானத்தை சேவித்து தலைமைப் பொறுப்புகளை வகித்தனர்.

ஸ்ரீரங்க விமானத்தை அலங்கரிப்பவர்கள்

பிரம்ம தேவனால் இம்மண்ணுலகிற்கு வந்த ஸ்ரீரங்க விமானத்தில், முப்பத்து முக்கோடி தேவர்கள், சப்த ரிஷிகள், அஷ்டவசுக்கள், நவகிரகங்கள் என பலரும் நிறைந்துள்ளனர். ஒருமுறை இக்கோவில் திருச்சுற்றை வலம்வந்தால், இவ்வுலகத்தையும்,  அவ்வுலகத்தையும் சுற்றிவந்த பலன் கிடைக்கும். ஸ்ரீரங்க விமானத்தின் நடுவில் அரங்கன் அரிதுயிலும் வடிவழகைக் கண்ட பிரம்மன், திருமாலிடம், அனுதினமும் பூசை செய்வதற்காக இந்த விமானத்திலேயே எப்போதும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டு மென்று வேண்டினார். இத்தகைய விமானத்தை தரிசிப்பதே போதும் என்ற இவருடைய வேண்டுகோள் "இச்சுவை தவிர யான் போய், இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'' என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் சிந்தனையில் கலக்கிறது.  இத்தலத்தில் இருந்துகொண்டு, அரங்கனை பூசித்துக் கொண்டு வாழும் நற்பெயர் வேண்டுமென வேண்டினார் பிரம்மன். தான் மட்டுமல்லாது, இந்த தெய்வீக விமானத்தை சேவித்துக்கொண்டு இத் திருத்தலத்தில் வாழ்பவர்கள் அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டும், மரண வேதனை இல்லாமல் பெருமாளின் திருவடியை வந்தடைய வேண்டும் என்று எல்லா உயிர்களுக்காகவும் பிரம்மன் வேண்டினார். மனம் குளிர்ந்த மாதவன் வாய் மலர்ந்தார். இப்பூவுலகில், ஆறு வேளையும் என்னை அர்ச்சித்து, நம்பிக்கை குறையாமல் தொழுதுவந்தால், மேலுலகில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்தியசூரிகளுடன் இணைந்து என் திவ்ய மங்களத்தோற்றத்தைக் காணலாம் என்றார். 

திருமாலின் ஐந்து நிலைகள்: பரம், வியூகம், விபவம், அர்ச்சாவதாரம், அந்த யாமி என்பன.  இவற்றுள் பரம் என்பது முக்தி அடைந்தவர்களுக்கான நிலை. இந்நிலையில் திருமால் பரவாசுதேவர் என்று  அழைக்கப்படுவார். இது வைகுண்டத் தில் காட்சிதரும் நிலையைக் குறிக்கும். வியூகம் என்பது தேவர்களுக்கு அருள்புரியும் நிலை. பாற்கடலில் அரிதுயில் கொண்டிருக்கும் நாராயண னைக் குறிப்பதாகும். இந் நிலையில் உலகைக்காக்கும் பொறுப்பை திருமால் ஏற்றுள்ளார். வாசுதேவன், சங்கர்சனன், பிரத்தியும்னன், அனிருத்தன் என்ற பெயர் களுடன் திருமால் திசைக்கு ஒருவராக விளங்கி அருள்புரிகிறார். விபவம் என்பது திருமால் எடுத்த அவதாரங் களைக் குறிக்கும். அவதாரம் என்பது இறங்கிவருதல் என்று பொருள்படும். மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், இராமன், பரசுராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி ஆகிய அவதாரங்களாக இம்மண்ணுலகில் எழுந்தருளி, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டும் நிலையை குறிப்பதாக விபவம் அமைந்துள்ளது. திருமாலின் இத்தகைய விபவ நிலை காலகட்டங்களில் இம்மண்ணுலகில் தோன்றிய நாம், என்னென்ன பிறவி எடுத்து எந்த நிலையில் இருந்தோம் என்று  உறுதியாகக் கூறமுடியாது.  அவற்றை புராணங்களிலும், இலக்கியங்களிலும், வாய்மொழி மரபிலும், கல்வெட்டுகளிலும் மட்டுமே கற்று, கேட்டு, உணர இயலும். அந்தர்யாமி: இந்நிலை எங்கும் பிரகாசமாய், உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்த்தும் நிலை ஆகும். 

அர்ச்சாவதாரம்: திருக்கோவில்களிலும், இல்லங்களிலும் சிலைவடிவில் இறைவன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது அச்சாவதார நிலை எனப்படும். இது எல்லையற்ற கருணை நிலையென்று அழைக்கப்படுகிறது. 

இந்நிலையிலுள்ள திருமாலை நான்கு வகைகளாகப் பிரித்துக் கூறுவர். 

1. ஸ்வயம் வியத்தம்: (தானாக சுயம்புவாக தோன்றிய நிலை.)  

2. தெய்வீகம்: பிரம்மா, இந்திரன், சூரியன் போன்ற தேவர்கள் இறைவனை ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்வது. 

3. ஆர்ஷம்: முனிவர்கள், ரிஷிகள் ஆகியோரால் திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுவது. வியாசர், மரிஷி, பதஞ்சலி ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். 

4. மானுஷம்: அரசர், அடியவர் எனப்படும் மனிதர்களால் தோன்றிய கோவில்களில் இறைவன் எழுந்தருளியிருப்பது. இத்தகைய நான்கு வகைகளுள் ஸ்வயம் வியக்தம் எனப் படும் சுயம்பு நிலையில் தோன்றியவை எட்டு திருக்கோவில்கள் ஆகும். திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், நாங்குநேரி, முக்திநாத் என்று அழைக்கப்படும் சாளக்கிராம மலை, புஷ்கரம், பத்ரிநாத் நைமி சாரண்யம் என்பவற்றுள் தலையாயதாக விளங்குவது ஸ்ரீரங்கம் ஆகும்.

-அமுது படைப்போம்...