ர்ச்சாவதார மூர்த்தியாக திருமால் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்க விமானத்தை பிரம்மன், தன் தலையில் தாங்கினார். சத்தியலோகத்திற்கு எடுத்துச்சென்றார். அங்கிருந்த விரஜை என்னும் ஆற்றின் கரையில் அதனை வைத்து, பிரதிஷ்டை செய்தார். அந்த ஆற்றில் அன்றாடம் குளித்து, இறை சிந்தனைகளுடன் ஆண்டவனை வலம்வந்தார். பாஞ்சராத்திர முறையில் பெருமாளை வணங்கினார். இவ்வாறு ஸ்ரீரங்க விமானத்தை பிரம்மன் வழிபடுவதைக் கண்ட சத்தியலோக முனிவர்கள் பிரம்ம னுடன் சேர்ந்து வழிபட்டனர். சுவயம்பு மனு, தட்சப் பிரஜாபதி ஆகியோரை அங்கு அழைத்த பிரம்மன், அங்குள்ள விரஜா நதியில் அவர்களை நீராடச் செய்தார். பின்னர் வைணவத்திற்கு சிறப்பான பன்னிரு எழுத்துக்களைக் கொண்ட "ஓம் நமோ நாராயணாய நமஹ' என்ற மந்திரத்தை உபதேசித்தார்.

Advertisment

ஸ்ரீரங்க விமானம் 


சத்தியலோகத்திற்கு வந்தடைந்த வரலாற்றைக் கூறினார்.  திருமால் ஸ்ரீவைகுண்டத்தில் தனக்கு இவ்விமானத்தின் சிறப்புகளை எடுத்துரைத்ததையும் விளக்கினார்.  இவற்றை கேட்டவர்களுள் சூரிய பகவானும் ஒருவர். உலகிற்கு ஒளியூட்டும் பணி செய்யும் சூரியன், பிரம்மதேவன் கூறிய முறைகளைப் பின்பற்றி ஸ்ரீ ரங்க விமானத்தை வழிபாடு செய்துவந்தார். பின்னர் சூரியன் தன் மகனான வைவஸ்த்த மனுவை அழைத்து, அரங்கனின் பூஜை இடைவிடாமல் நிகழும்படி கண்காணிக்குமாறு பணித்தார்.  வைவஸ்த்த மனு,  பல காலம் இந்த விமானத்தை வழிபாடு செய்துவந்தார். அவர் தன் மகனான இட்சு வாகுவை அழைத்து, ஸ்ரீரங்க விமானம் குறித்த தகவல்களை எடுத்துரைத்தார். மிகுந்த பணிவுடன் அவற்றைக் கேட்ட இட்சுவாகு, தந்தை சொல்லே மந்திரம் என ஏற்று, ஸ்ரீரங்க விமானத்தை வணங்கிவந்தார். இட்சுவாகுவிற்கு ஒரு ஐயம் ஏற்பட்டது. இந்த ரங்க விமானத்தை முக்கோடி தேவர்களும், முனிவர்களும் வணங்கி இங்கு அருள் பெறுகின்றனர். என்றாலும் திருமாலின் திருவருளை, மண்ணுலக மக்களும் வழிபட்டு புண்ணியம் பெற "வேண்டுமென அதற்கு ஒரு வழியை தேடினார். தன் எண்ணத்தை தேவர்களிடமும், முனிவர்களிடமும் விவரித்தார். நீண்ட கலந்தாலோசனைக்குப்பிறகு, விமானத்தைப் பூவுலகிற்கு கொண்டுசெல்வது சிறந்தது என அனைவரும் முடிவெடுத்தனர். இதற்காக இட்சுவாகு பிரம்மனை குறித்து கடும் தவம் புரிந்தான். நிலைமை யைப் புரிந்துகொண்ட பிரம்மதேவன், ஸ்ரீரங்க விமானத்தை பிரிய மனம் இல்லாமல் தவித்தார். ஸ்ரீரங்க விமானம்,  மேலுலகை விட்டுச் செல்வதை விரும்பாத தேவர்கள்,  இட்சுவாகுவிற்குப் பல இன்னல்களைத் தந்தனர். முடிவில் திருமால் தோன்றினார்.  இட்சுவாகுவின் எண்ணத்தை ஏற்றார். பூவுலக மக்களும் புண்ணியம் பெறவேண்டியது கடமை என்றார். எனவே பிரம்மனிடம், பூ உலகிற்கு வந்து தன்னை அன்றாடம், உதய காலம் எனப்படும் விடியற்காலை பொழுதில் நீ வழிபடலாம். உன் கையினால் நிகழ்த்தப்படும் அப்பூசையை முதலில் நான் ஏற்பேன் என்றுரைத்தார்.

Advertisment

மேலுலகத்திலிருந்து பூவுலகத்திலுள்ள அயோத்தியில் எழுந்த ருளி, அதன்பின் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணிக்கு அருகில், நான் தங்கி இருப்பேன். உச்சிகால வேளை யில் பிரம்மனின் இடம்தேடி மேலு லகிற்கு வருவேன்.  இவ்வாறு மேலுல கிற்கும் கீழ் உலகிற்குமாக சஞ்சரித்துக் கொண்டே இருப் பேன். இதனால்  மேலுலகிற்கு எந்த குறையும் வராது என்றார் திருமால். தெளிவுபெற்ற பிரம்மதேவன், கருட வாகனத்தின்மீது ஸ்ரீரங்க விமானத்தை ஏற்றிவைத்து, தானும் அன்ன வாகனத்தில் ஏறி பூலோகத்தை வந்தடைந்தார்.  வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்தின் வாயிலில் ஸ்ரீ ரங்க விமானம் வந்து நின்றது.

வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்தில் இட்சுவாகு தவம் செய்து கொண்டிருந்தான். அதனைக்கண்ட பிரம்மதேவர்  அவனை அழைத்தார். ஸ்ரீரங்க விமானத்தைக் கண்ட இட்சுவாகுவிற்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. தவம் கலைந்து எழுந்தான்.  ஸ்ரீரங்கநாதனை வலம்வந்தான். அரங்கனை வழிபடும் முறைகளை பிரம்மனிடமிருந்து தெரிந்துகொண்டான். பிரம்மனும் ரங்க விமானத்தை இட்சுவாகுவிடம் ஒப்படைத்துவிட்டு மேலுலகம் சென்றார். 

Advertisment

இவ்வாறு மண்ணுலகிற்கு வந்த ஸ்ரீரங்க விமானத்தை இட்சுவாகுவும், அவன் குலம் வழிவந்தோறும் பாதுகாத்து வழிபட்டனர். 

இவ்வாறு இந்த ஸ்ரீரங்க விமானம் மண்ணுலகிற்கு வந்ததாக புராணம் குறிப்பிடுகிறது.

பல ஆண்டுகளுக்குப்பிறகு இட்சுவாகு வம்சத்தில் தசரதன் தோன்றினான். நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத தசரதன், புத்திர காமேஷ்டி யாகத்தை செய்யத் தொடங்கினான். இதனைக் காண மண்ணுலக மன்னர்கள் அனைவரும் அயோத்தி வந்திருந்தனர். அவர்களுள் தர்ம வர்மா என்ற சோழ மன்னனும் ஒருவன். வேள்வியைக் காண வந்தவனின் கண்களிலும், மனதிலும் ஸ்ரீ ரங்க விமானம் காட்சியளித்தது.  இதனை சோழ நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தான். தன் நாட்டில் சந்திர புஷ்கரணி என்னும் குளக்கரைக்கு அருகில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினான்.  இவனை  தர்மபிரம்மா என்றும் கூறுவார்கள்.

புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாக தசரதனுக்கு ஸ்ரீ இராமபிரான் தோன்றினார். 

ஸ்ரீரங்க விமானத்தை முறையாக வழிபட்டார்.  இராவணன், சீதை பிராட்டியைக் கவர்ந்து சென்றதற்காக, ஸ்ரீராமன் இராவணனுடன் போரிட்டார். விபீடணன் இராமனைச் சரணடைந்தான் இராவணனை வென்று, இராமன், விபீடணனுக்கு இலங்கையை அளித்து பட்டம் சூட்டினார். 

அறம், இலங்கையில் தங்கியிருப்பதற்கு இடமின்றி தவித்ததாம். அப்போது விபீடணின் அரண்மனையே தான் தங்குவதற்கு உரிய இடமென்று அது தேர்ந்தெடுத்ததாம். அத்தகைய சிறப்பிற்கு உரியவன் விபீடணன், இலங்கையிலிருந்து அயோத்தி நகருக்கு திரும்பிய ஸ்ரீ ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.  அதை காண வந்த எல்லோரும் விடைபெற்றுச் செல்லும்போது பரிசுகள் ஏராளமாக வழங்கப்பட்டன. ஜாம்பவான், சுக்ரீவன், அங்கதன், அனுமன் என எல்லோருக்கும் அவரவர்களுடைய திறத்திற்கு ஏற்ப அருள் பரிசு வழங்கப்பட்டது. தனக்கு சீதையை மீட்டுத் தந்து, இராவணனை வெல்வதற்கு பேருதவிபுரிந்த விபீடண னுக்கு, இராமன் விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்க விரும்பினார். தன் குலத் திற்கு பெருந்தவமாய் வந்துசேர்ந்த கோமகளாகிய சீதையை மீண்டும் பெறுவதற்கு வழி வகுத்தவன் விபீடணன். அவனுக்கு தன் குலத்தின் வழிவந்த ஸ்ரீ ரங்க விமானத்தை பரிசாகத் தருவதே மிகப் பொருத்தம் என எண்ணினார் ஸ்ரீராமர். எனவேதான் ஸ்ரீரங்க விமானத்திற்கு இட்சுவாகு குலதனம் என்று பெயர் ஏற்பட்டது. 

மற்றவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் கிடைத்தன.  விபீடனனுக்கு விலைமதிப்பற்ற ஸ்ரீரங்க விமானம் கிடைத்தது.

ஏறத்தாழ 11 ஆயிரம் ஆண்டுகள் இம் மண்ணுலகில் அயோத்தியில் வீற்றிருந்து ஸ்ரீ ராமபிரான் ஆட்சி செய்தார். பின்னர் ஸ்ரீ வைகுண்டத்திற்கு எழுந்தருள விரும்பினார். அதற்கு முன்பாக தன் அவையை அலங்கரித்த ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை இடைவிடாது ஆற்றுமாறு பணித்தார். 

அவ்வகையில், இவ்வுலகில் மக்கள் இருக்கும்வரை,  சூரிய சந்திரர்கள் ஒளிவீசும் வரை, இந்த பூமி வளமாக விளங்கும்வரை, இராமனின் வரலாறு பேசப்படும்வரை, இலங்கையை நீ ஆட்சி புரிந்துவருவாயாக, நீ என் தோழன். ஆகவே இட்சுவாகு வம்சத்தவர்களால் பக்தியுடன் பூசை செய்யப் பட்டு வந்த ஸ்ரீ ரங்க விமானத்தை முறை தவறாமல் வழிபட்டு வருவாயாக  என்று பணித்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்த விபீடனன், பணிந்து  ஸ்ரீரங்க விமானத்தை பெற்றுக் கொண்டான்.