ஜோதிடர்களிடம், செவ்வாய் மற்றும் சாயாகிரக தோஷங்களைப் பற்றிக் கேட்பவர்கள் சுக்கிர தோஷத்தைப் பற்றிக் கேள்வி கேட்பதில்லை.
காரணம், பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் செவ்வாய் தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், இருவரின் ஆயுள் தீர்க்கம் பற்றியதாகவே இருக்கும்.
திருமணப் பொருத்தத்தில் அவசியம் ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய மான ஒன்று "சுக்கிர தோஷம்.' உலக சுகங்களை அனுபவிக்க சுக்கிரனின் தயவு அவசியம்.
பெண்ணிற்கு களத்திரகாரகன் செவ்வாய் தோஷமாகும் எனில், ஆணிற்கு களத்திர காரகனான சுக்கிரன் மட்டும் தோஷம் கிடையாதா என்ற கேள்வி நியாயமானதே. பெண்ணிற்கு செவ்வாய் தோஷத்தை ஆய்வு செய்வதுபோல, ஆணிற்கும் சுக்கிர தோஷத்தை ஆய்வு செய்யத்தான் வேண்டும். பொதுவாக இருபாலருக்கும் செவ்வாய், சுக்கிர தோஷத்தை ஆய்வுசெய்து இணைப்பதே சாலச் சிறந்தது.
தோஷம் என்றாலே ஏதோ கெடுபலன் என நினைக்கத்

தோஷம் என்றாலே ஏதோ கெடுபலன் என நினைக்கத் தேவையில்லை. தனக்கான உரிமை, சுதந்திரத் தன்மை, உடல், மன கருத்து வேறுபாடுகள் தம்பதியருக்குள் ஏற்படுவதற்கும் தோஷம் என்றே பெயர்.
வாழ்வில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால்கூட வாழ்க்கைத் துணையால் எந்த அளவிற்குப் பொறுத்துக்கொள்ள முடியும் என்பதே திருமணப் பொருத்தத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.
இறை ஆற்றலின் கருணையினால், மனிதப் பிறவி எடுக்கும் பொழுது பூர்வஜென்ம நற்கர்மா மற்றும் தீய கர்மாவின் பட்டயமாக அமைவதுதான் ஜாதகம். எந்த ஒரு ஜாதகத்திலும் யோகமும் தோஷமும் இருக்கவே செய்யும். இவற்றின் அளவீடுகளில் மட்டுமே மாறுபாடு இருக்கும் வரன் மற்றும் வதுவை ஜாதகத்தின் யோக தோஷ நிறை குறைகளை அளவிட்டு சமன் செய்வதற்கு மட்டுமே திருமணப் பொருத்தம் பயன்படுமேயல்லாது, நற்கர்ம அல்லது தீயகர்ம பலன்கள் அனுபவிப்பதை மாற்றி அமைத்துவிட முடியாது. கால தேவனின் கணக்கின்படி, கண்டிப்பாக நிகழ்வு' என்பது இருக்கவே செய்யும்.
இனி சுக்கிர தோஷ கிரக அமைவுகளில் சிலவற்றைக் காண்போம்.
ப் சுக்கிரன் கண்டாந்திர நட்சத்திர சாரம் பெறுவது.
ப் சுக்கிரன், சூரியனுடன் மூன்று பாகைக் குள் இணைந்து அஸ்தங்கமாவது.
ப் சுக்கிரன், அஸ்தங்கமாகும்போது அவர் லக்னாதிபதியாகவோ. அல்லது காம திரி கோணாதிபதியாகவோ அமைவது.
ப் காம திரிகோண ஸ்தானங்களில் ஒன்றில் சுக்கிரன் இருந்து. அஷ்டமாதிபதியோ (அ) பாதகாதிபதியோ இணைவது (அ) இத்தகைய சுக்கிரனுடன் மற்ற இரு காம திரிகோணாதிபதிகள் (அ) இருவரில் ஒருவர் இணைவது.
ப் சுக்கிரன் பாதகாதிபதியாகி அஷ்டமாதிபதியுடன் இணைந்து குடும்ப (அ) அஷ்டம ஸ்தானத்தில் இருப்பது. சுக்கிரன் அஷ்டமாதிபதியாகி பாதகாதிபதியுடன் இணைந்து மேற்கூறிய பாவங்களில் இருப்பது.
ப் சுக்கிரன் வேதை நட்சத்திர சாரம் பெற்று, மாந்தியுடன் நெருங்கிய பாகையில் இருப்பது.
ப் சுக்கிரன் குரு இருவரும் மூன்று பாகைக்குள் நெருங்கி இருப்பது (அ) சுக்கிரனும் குருவும் சஷ்டாஷ்டகமாக இருப்பது.
ப் சுக்கிரன் நீசமாகி வக்ரம் அடைவது. (தனித்து உச்சம் பெறுவதுகூட ஒருவகை சுக்கிர தோஷமே) மூத்த சகோதரி அல்லது தந்தைவழியில் அத்தை உறவுள்ளவர்களால் ஏதேனும் மன உளைச்சலுக்குள்ளாவது என்று இருக்க வாய்ப்பு உண்டு. இவர் இத்தகைய உறவினரின் மகளைத் திருமணம் செய்யக் கூடாது.
ப் சர வீட்டில் சுக்கிரன் இருக்கும்போது, சனியோ அல்லது சாயா கிரகமோ எவ்விதத்திலேனும் தொடர்பில் இருப்பது. சுக்கிரனுக் குத் திரிகோணத்தில் சூரியன் (அ) சாயாகிரகம் இருப்பது.
ப் சந்திரனுடன் சுக்கிரன் மூன்று பாகைக் குள் இணைவது.
ப் சூரியனிலிருந்து 43 முதல் 46 பாகை வரை விலகியிருப்பது பொதுவாக சுக்கிரன், சூரியனிலிருந்து அதிக பாகையில் விலகி இருப்பது.
ப் புனர்பூலிவில் சுக்கிரன் இணைவில் இருப்பது.
ப் பாகை முறையில், இரு நெருப்பு கிரகங் களுக்கு இடையில் சுக்கிரன் இருப்பது.
ப் சாயா கிரகத்திற்குச் சஷ்டாஷ்டகமாகச் சுக்கிரன் இருப்பது.
ப் சுக்கிரன் சனியுடன் இணைவது.
ப் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு ஒருபுறம் சனியும், மறுபுறம் சாயா கிரகமும் இருப்பது.
ப் நீசம்பெற்ற கிரகத்தின் சாரத்தில் சுக்கிரன் இருப்பது.
ப் ராசி சந்தியில், இரண்டு பாகைக்குள் சுக்கிரன் இருப்பது.
ப் சுக்கிரன் சாயாகிரக சாரம், பெறுவது (அ) சாயா கிரகத்துடன் இணைவில் இருப்பது (அ) சாயா கிரகத்தை நோக்கிப் பயணிப்பது
ப் சுக்கிரன், 6, 8, 12-ல் பகை, நீசம் பெறுவது.
ப் சுக்கிரன் நின்ற நட்சத்திராதிபதி லக்னத்திற்கு 6, 8, 12-ல் பகை, நீசம் அஸ்தங்கமாவது.
ப் குரு நீசம்பெற்று, சுக்கிரனுடன் இணைந்தாலும் சுக்கிர தோஷமே.
ப் சுக்கிரன், மிருத்யு பாகையில் இருப்பது.
சுக்கிர தோஷத்திற்கு மேற்கண்டவை சில விதிகளாகும். இரண்டு ஜாதகங்களுமே முக்கியமாக, வரன், வதுவை இருவரும் ஒரே பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள் ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்
செல்: 63824 12545
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us