ராசிகளுடைய தன்மையின் அடிப்படை யில் 12 ராசிகளையும் சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேஷம், கடகம் துலாம், மகரம் இவை நான்கும் சரத்துவத்தில் அடங்கும். ரிஷபம். சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை நான்கும்  ஸ்திர தத்துவத்தில் அடங்கும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை நான்கும் உபய தத்துவத்தில் அடங்கும். சரம் என்றால் வெகு சலனமுடையது என்று பொருள். அதாவது எப்பொழுதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் அமைப்புடையதாகும்.ஸ்திரம் என்றால் என்றால் நிலையானது என்று பொருள். உபயம் என்றால் நிலையற்றது என்று பொருள். 

Advertisment

அதாவது உபய ராசியில் முதல் 15 டிகிரி ஸ்திர தத்துவமாகவும் அடுத்த 15 டிகிரி சரத் தத்துவமாக செயல்படும். உபய லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான நன்மைகளைப் பார்க்கலாம்.

உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவற்றின் அதிபதிகளான புதனும், குருவும் சுப கிரகங்கள் என்பதால் ஒரே குணம் கொண்டவர்கள்.

சரம், ஸ்திரம் இரண்டும் சேர்ந்த ராசி என்பதால் உபய லக்னம் நிலையற்ற தன்மையில் செயல்படும்.

Advertisment

லட்சியம், குறிக்கோள் இவற்றை அடைய மிகுந்த சிரமங்களை சந்திப்பார்கள். அதிக தடை தாமதத்திற்கு பிறகு அவர்களுக்கு வெற்றி உண்டு.

சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை அனுசரித்துக் கொண்டு விட்டுக் கொடுத்து செல்கிறவர்கள்.

தமது ஆசையை அடக்கி தன்னைத்தானே வருத்திக் கொண்டு வாழ்பவர்கள் எதார்த்தவாதிகள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள்.

Advertisment

எப்பொழுதும் புத்துணர்வுடன் இருப்பார்கள். நல்ல தோற்றம் நிறைந்தவர்கள். புகழ்ச்சிக்கு மயங்கு வார்கள் தற்பெருமை அதிகம் உண்டு.

ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மனசு மாறிக்கிட்டே இருக்கும். 

யாரையும் பார்த்தவுடன் கணிக்கும் அறிவாளிகளான இவர்கள் பிறரை சார்ந்தே வாழ விரும்புவார்கள்.

பொறுமையும் சாந்தமும் நிறைந்த இவர்கள் கோபப்பட்டால் யாராலும் தாங்க முடியாது. சாதுமிரண்டால் காடு கொள் ளாது என்ற பழமொழி இவர்களுக்கு மிகப் பொருந்தும்.

எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள். 

பெரிய மனிதர்களின் நட்பை விரும்புபவர்கள். 

தங்களை பிரபலங்களாக காட்டிக் கொள்ளவே விரும்புவார்கள். 

ஆதாயம் இல்லாத செயலில் ஈடுபட மாட்டார்கள் அடிக்கடி வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் வந்து கொண்டே இருக்கும்.

மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள் தங்கள் சொந்த பிரச்சனைக்கு அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி தமக்கு தாமே சொந்த செலவில் சூன்யம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். 

தெருவில் ஆரம்பத்தில் அல்லது முடிவில் வசிப்பார்கள் குறிப்பாக கார்னர் பிளாட்டில் வாழ்வார்கள்வீட்டு விலங்குகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இவர்கள் வீட்டில் செடி வளர்ப்பார்கள் எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள்.

மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்க மாட்டார்கள். இரட்டைத் தன்மை நிறைந்தவர்கள்.

நன்மை தீமையை தக்க வைத்துக் கொள்ள முடியாது. நன்மை நடந்தாலும் தீமை நடந்தா லும் அதிலிருந்து விரைவில் மீண்டு விடுவார்கள்.

உபய லக்னத்திற்கு இரண்டாம் இடம் சர ராசி என்பதால் உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்கள்.ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுபவர்கள் அல்லது சாப்பிடாமல் பல மணி நேரம் இருப்பார்கள்.தவறான உணவுப் பழக்கத்தால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.

இரண்டாம் இடம் சரம் என்பதால் நல்ல வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

இரண்டாம் அதிபதியின் நட்சத்திரம் நான்காம் இடத்தில் இருப்பதால் வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் உண்டு. உதாரணமாக மிதுன ராசிக்கு இரண்டாம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரம் இரண்டாம் இடத்தில் ஆயில்யமாக உள்ளது. அதை போல் கன்னி ராசிக்கு இரண்டாம் அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரம் நான்காம் இடமான தனுசில் உள்ளது. தனுசு ராசியின் இரண் டாம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் இடமான மீனத் தில் உள்ளது. மீன ராசியின் இரண்டாம் அதிபதியான செவ்வாய், மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் 4-மிடமான மிதுனத்தில் உள்ளது.

தாய் வழிச் சொத்து மிகைப்படுத்தலாக இருக்கும்.ஒரு வீட்டில் 4 பிள்ளைகள் இருந் தாலும் உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் அன்பும் ஆசிர்வாதமும் ஒரு படி அதிகமாகவே இருக்கும்.

கன்னி மற்றும் மீன லக்னத்திற்கு நான்காம் அதிபதியே ஏழாம் அதிபதியாக இருப்பதால் நண்பர்களுடன் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து சுத்து வாங்கு வார்கள். 

ரியல் எஸ்டேட் துறையின் மூலம் அதிக வருமானம் உண்டு வீட்டிலேயே அலுவலகம் இருக்கும். அல்லது வீட்டிற்கு அருகிலேயே தொழில் நிறுவனம் இருக்கும். அதிக தூரம் சென்று வேலை பார்க்க விரும்ப மாட்டார்கள்.

வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக் கள் உண்டு. பூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு குறைவு. பூர்வீக சொத்தால் ஏமாந்து போவார் கள் குழந்தைகளால் மன உளைச்சல் உண்டு.

வயோதிக காலத்தில் நிச்சயமாக பூர்வீகத் தில் செட்டில் ஆவார்கள். அடிக்கடி தொழில் உத்தியோகத்தை மாற்றுவார்கள் நிலையான தொழில் உத்தியோகம் இருக்காது.

வெகு விரைவில் நோய் தாக்கம் வெளியில் தெரியாது நோய்க்கு மருந்து கிடைப்பது கஷ்டமாக இருக்கும். உப தொழில் செய்வார்கள். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் வாழ்க்கைத் துணை யால் அவஸ்தை உண்டுஉபய லக்னத்திற்கு 7ம் இடமே பாதக, மாரக,கேந்திர ஸ்தானமாக இருப்பதால் சுபத்தை விட அசுபமே மிகுதியாக இருக்கும். சுபமோ, அசுபமோ விருந்தினர் போல் வரும் போகும். மீண்டும் வரும். மீண்டும் போகும். அதன்படி மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு குரு பாதகத்தை செய்வார்.தனுசு மற்றும் மீன லக்னங்களுக்கு புதன் பாதகத்தை செய்வார். 

உபய லக்னத்திற்கு களத்திராதிபதியே பாதகாதிபதியாக வருவதால் வாழ்க்கைத் துணையால், வாழ்க்கைத் துணையின் உறவு களால் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். மனைவி, மனைவி வழி உறவினர்
கள் எளிதில் உடன்பாட மாட்டார்கள். இருதார வாய்ப்பு உண்டு. சிலருக்கு காலம் தாழ்த்திய திருமணம் இருக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. 

நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாடிக்கையாளர்களால் அதிருப்தியே நிலவும். 

இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தை தனக்குள் கொண்டுள்ளதால் சொல்லாலும், செயலாலும் ஒன்றுபட மாட்டார்கள். ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு சரியான வாழ்க்கைத் துணை அமைந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். சரியான துணை அமையாதவர்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் தியாகியாக வாழ்கிறார்கள்.

ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை தீர்மானிப்பதில் லக்னம் மற்றும் லக்னாதிபதியின் பங்கு மிக முக்கியம். அந்த வகையில் லக்னத்திற்கு அடிக்கடி எதிர்பாராத மாற்றங்கள் வந்து கொண்டிருப்பதால் ஏற்ற இறக்கமான பலன்கள் நடக்கும். இவர்கள் கால பைரவரை தொடர்ந்து வழிபட்டு வர இன்னல்கள் குறைந்து நிம்மதி கூடும்.

செல்: 98652 20406