மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 9-வது பட்ஜெட் ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் பட்ஜெட் காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தனி நபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கடந்த பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டபடி ரூ.12.75 லட்சம்வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை.
புதிய வருமான வரி சட்டம், 2025, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எளிமையாக்கப் பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும்.
உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டில்உற்பத்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் ‘பயோ பார்மா சக்தி’ திட்டம் கொண்டுவரப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு திட்டத்தின் மதிப்பு ரூ.40,000 கோடியாக உயர்த்தப்படுகிறது.
எதிர்கால சாதனையாளர்களை உருவாக்க, ரூ.10,000 கோடியில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சி நிதி அமைப்பு உருவாக்கப்படுகிறது.
சவாலான முறையில் பிரம்மாண்ட ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் சீர்திருத்தம் கொண்டுவர மகாத்மா காந்தி கிராம சுவராஜ் திட்டம் அறிமுகம்.
தேங்காய் அதிகம் விளையும் மாநிலங் களில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க ‘தேங்காய் ஊக்குவிப்பு திட்டம்’ கொண்டு வரப்படுகிறது.
முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியை 2030-ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க பிரத்யேகத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றி அமைப்பதற்காக ‘கேலோ இந்தியா’ திட்டம் தொடங்கப் படும்.
நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டில் 20 புதிய உள்நாட்டு நீர்வழித்தடங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இங்கு பயன்படுத்தும் கப்பலை பழுது பார்க்க வாரணாசி, பாட்னாவில் மையங்கள் அமைக்கப்படும்.
கடலோர சரக்கு போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்படும். உள்நாட்டு நீர்வழி மற்றும் கடலோர கப்பல் போக்குவரத்து 6 சதவீதத்தி-லிருந்து 2047-ஆம் ஆண்டுக்குள் 12 சதவீதமாக உயர்த்தப்படும்.
நாடு முழுவதும் மாவட்டம்தோறும் ஒரு பெண்கள் விட

நாடு முழுவதும் மாவட்டம்தோறும் ஒரு பெண்கள் விடுதி அமைக்கப்படுகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, 17 மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரிக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆழ்கடலில் இந்திய மீன்பிடிப் படகால் பிடிக்கப்படும் மீன்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும்.
அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை ஒரு வெளிநாட்டுத் துறைமுகத்தில் இறக்குவது, சரக்குகளின் ஏற்றுமதியாகக் கருதப்படும். மீன்பிடிப்பு, போக்குவரத்து அல்லது இடமாற்றம் செய்யப்படும்போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீரிலும், கிழக்குத் தொடர்ச்சிமலையில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் நிலையான மலைப் பாதைகள் உருவாக்கப்படும்.
கனிம வளங்கள் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சுரங்கம், ஆய்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.
உலகத் தரத்திலான கன்டெய்னர்கள் தயாரிக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்.
மனித வள திறனை மேம்படுத்த மண்டலப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
கடல் விமானப் போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஆயுஷ் துறை மூலம் 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
மத்​திய பொதுத்​துறை நிறு​வனங்​களின் வசமுள்ள நிலம் மற்​றும் சொத்​துகளை விற்று நிதி திரட்​டு​வதை ஊக்​குவிக்​கும் வகை​யில், பிரத்​யேக ரியல் எஸ்​டேட் முதலீட்டு அறக்​கட்​டளை​கள் நிறு​வப்​படும்.
மேலும், உள்​கட்​டமைப்பு திட்​டங்​களுக்கு கடன் வழங்​கும் நிறு​வனங்​களுக்​குப் பாது​காப்​பளிக்​கும் வகை​யில், உள்​கட்​டமைப்பு அபாய உத்​தர​வாத நிதி​யம் உரு​வாக்​கப்​படும்.
தனியார் கால்நடை மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகளை, பரிசோதனை மையங்கள், உற்பத்தி மையங்களுக்கு கடனுதவி மானிய திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (ஆயஏஈ) துறை வளர்ந்து வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தத் துறைக்கு 20 லட்சம் நிபுணர்கள்தேவைப்படுவார்கள் என்று கணிக்கப் பட்டுள்ளது. 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் ஆயஏஈ கன்டென்ட் கிரியேட்டர் ஆய்வகங்களை மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம்அமைக்கும்.
முதியோர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்த பிரத்யேக கட்டமைப்பு உருவாக்கப்படும். இதற்காக 1.50 லட்சம் பேருக்கு பல்திறன் கொண்ட பராமரிப்பாளர்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சுயஉதவி குழுக்களை சேர்ந்த தொழில்முனைவோருக்காக, கிளஸ்டர் அளவில் சமூக பங்களிப்புடன் கூடிய ‘ஷீ மார்ட்’ எனும் சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
‘திவ்யாங்ஜன் கௌஷல் யோஜனா’திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு கவுரமானவாழவாதார வாய்ப்புகள் உருவாக்கப் படும்.
‘திவ்யாங் சஹாரா யோஜனா’ வாயிலாக தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உயர்தரமான உதவி உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான, பிரதமரின்திவ்யாஷா மையங்கள் நவீன வசதி களுடன் கூடிய சில்லரை விற்பனை மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
மனநல சிசிக்கையை மேம்படுத்தும் விதமாக, இரண்டாவது ‘நிம்ஹான்ஸ்’ நிறுவனம் உருவாக்கப்படும். மேலும் ராஞ்சி மற்றும் தேஜ்பூரில் உள்ள தேசிய மனநல கழகங்கள் மேம்படுத்தப்படும்.
சரக்கு போக்குவரத்தை எளிதாக்க சுங்க நடைமுறைகள் எளிமையாக்கப் படுகின்றன.அனைத்துப் பொருட் களுக்கும் சுங்க வரி 20%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்படும்.
ரயில்வே துறைக்கு கடந்த பட்ஜெட்டில் 2.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 2.93 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
2026-27-ஆம் நிதியாண்டில் வரி வருவாய் ரூ.35,33,150 கோடி, மூலதன வருவாய் ரூ.18,14,165 கோடி, மொத்த வருவாய் ரூ.53,47,315 கோடி, மொத்த செலவினம் ரூ.53,47,315 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
2026-27-ஆம் நிதியாண்டில் பொது மூலதனச் செலவு ரூ.12.2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
விலை குறையும் பொருட்கள்:
17 புற்றுநோய் மருந்துகள்
மின்சார வாகன பேட்டரிகள்
விளையாட்டு உபகரணங்கள்
சோலார் பேனல்கள்
ஸ்மார்ட் போன்கள்
தோல் உபகரணங்கள்
மைக்ரோவேவ் ஓவன்கள்
லித்தியம் பேட்டரி பாகங்கள்
சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்
7 உயிர்காக்கும் மருந்துகள்
நீரிழிவு தொடர்பான மருந்துகள்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்
வெளிநாட்டு கல்வி
மதுபான கழிவுகள்
காலணி பாகங்கள் ஏற்றுமதி
மைக்ரோவேவ் ஓவன்
தோல் ஏற்றுமதி
விலை அதிகரிக்கும் பொருட்கள்
ஆல்கஹால்
சிகரெட்
பீடி
பான் மசாலா
குட்கா
காபி
குடைகள்
ஆடம்பர கைக்கடிகாரங்கள்
இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்கள்
இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்
டிசிஎஸ் தொடர்பான அறிவிப்புகள்:
மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தால் ஒரு தனிநபருக்கு வழங்கப்படும் எந்தவொரு வட்டிக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இது தொடர்பான எந்தவொரு டிடிஎஸ் பிடித்தமும் ரத்து செய்யப்படும்.
வெளிநாட்டு சுற்றுலாத் திட்டங்கள் (ர்ஸ்ங்ழ்ள்ங்ஹள் ற்ர்ன்ழ் ல்ழ்ர்ஞ்ழ்ஹம் ல்ஹஸ்ரீந்ஹஞ்ங்) விற்பனை மீதான டிசிஎஸ் வரியை, தற்போதுள்ள 5% மற்றும் 20% என்பதிலிருந்து, எந்தவித தொகை வரம்பும் இல்லாமல் 2% ஆகக் குறைக்கப்படும்.
தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டம் (கதந) எனப்படும் திட்டத்தின் கீழ், கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான டிசிஎஸ் (பஈந) வரியை 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும்.
தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
தமிழகத்தின் நீண்ட கால எதிர்பார்ப்பான அதிவேக ரயில் (ஐண்ஞ்ட்-நல்ங்ங்க் தஹண்ப்) திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 7 அதிவேக ரயில் வழித்தடங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவின் பொருளாதார மையங்களை இணைப்பதோடு, பயண நேரத்தையும் பாதியாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிச்சநல்லூர்: உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மையமாக மாற்றம்தமிழகத்தின் தொன்மை வரலாற்றைப் பறைசாற்றும் ஆதிச்சநல்லூர், இந்தியாவின் 15 முக்கிய தொல்லியல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத்தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்துடன் சேர்த்து, ஒரு ‘‘கலாச்சார மையம்” (ஊஷ்ல்ங்ழ்ண்ங்ய்ற்ண்ஹப் ஈன்ப்ற்ன்ழ்ஹப் ஈங்ய்ற்ங்ழ்) அமைக்கப்படும். அகழ்வாராய்ச்சிப் பகுதிகளை மக்கள் நேரடியாகப் பார்க்கும் வகையில் நடைபாதைகள் மற்றும் நவீன டிஜிட்டல் விளக்க மையங்கள் உருவாக்கப்படும்.
அரிய கனிம வழித்தடம்:
இந்தியாவின் எதிர்காலத் தொழில்நுட்பத் தேவைகளுக்காக, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ‘அரிய கனிம வழித்தடம்’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான முக்கிய கனிமங்களைச் சுத்திகரித்து உற்பத்தி செய்யும் மையமாக தமிழகம் மாறும். இது தவிர, ஒடிசாவின் தால்சேர் முதல் தமிழகத்தின் ஆம்பூர் வரை ஒரு பிரத்யேக உள்நாட்டு நீர்வழிப் பாதை (ஒய்ப்ஹய்க் ரஹற்ங்ழ்ஜ்ஹஹ்) அமைக்கவும் பட்ஜெட் டில் முன்மொழியப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை:
சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த, பழவேற்காடு ஏரியில் மூன்று புதிய பறவை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பொதிகை மலையில் சூழல் நட்பு மலையேற்றத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். வேளாண் துறையைப் பொறுத்தவரை, கடற்கரைப் பகுதிகளில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் பழைய தென்னை மரங்களுக்குப் பதிலாக அதிக மகசூல் தரும் புதிய கன்றுகள் நடப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.
திருப்பூர் பின்னலாடைத் துறை அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் நெருக்கடியில் இருக்கும் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 'ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம்' ஒரு முக்கியமான மீட்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியால், திருப்பூரின் ஒரு ஆடையின் விலை 10 டாலரிலிருந்து 16 டாலராக உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்ட, உற்பத்திச் செலவு குறைக்கப்படுகிறது. நவீன இயந்திரங்கள் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்கள் மூலம் உற்பத்திச் செலவு குறையும் போது, வரி விதிப்பையும் மீறி இந்திய ஆடைகள் உலகச் சந்தையில் போட்டி போட முடியும்.
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கல் சாதனை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ஒன்பதாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
முன்னாள் நிதியமைச்சர்களான மொரார்ஜி தேசாய், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோர் வெவ்வேறு பிரதமர்களின் பதவிக்காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தனர்.
ஆனால் நிர்மலா சீதாராமன் ஒரே பிரதமரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியான ஆண்டுகளில் இந்த பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்பு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையில் சிலமுறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஞாயிற்றுகிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us