பணியில் இருந்த போலீஸ்காரர் சந்தோஷத்துடன் தெருவிற்குள் நுழைந்தார். மகிழ்ச்சியுடன் வேலை செய்வது என்பது எப்போதுமே செய்யக்கூடிய ஒன்றுதான். இருக்கும் சிலரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்ல. நேரம் கிட்டத்தட்ட இரவு பத்து மணி இருக்கும். மழையின் வாசனையைக் கொண்ட குளிர்ந்த காற்று தெரு முழுவதும் வீசிக்கொண்டிருந்தது.
தன் கையை இப்படியும் அப்படியுமாக பல வகைகளில் அழகாக ஆட்டியவாறு கதவுகளைப் பார்த்துக் கொண்டே அவர் நடந்து சென்றார்.
அமைதியாக இருந்த அந்தத் தெருவை அவ்வப்போது கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார். தன்னுடைய மிடுக்கான தோற்றத்துடன் இலேசாக ஆடியவாறு தான் அமைதியை நிலைநாட்டும் ஒரு அதிகாரி என்ற எண்ணத்தை அருமையாக அவர் உண்டாக்கினார். அந்தப் பகுதி இரவின் அமைதியில் மூழ்கியிருந்தது. ஒரு சிகரெட் கடையிலிருந்தோ இரவு முழுவதும் திறந்திருக்கும் உணவகத்தின் முன்னாலிருந்தோ அவ்வப்போது விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ஆனால், பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் கதவுகள் எப்போதோ மூடப்பட்டு விட்டன.
பாதி தூரத்தைக் கடந்திருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்கு முன்னால் வந்ததும் போலீஸ்காரர் தன் நடையின் வேகத்தைக் குறைத்தார். இருளில் மூழ்கியிருந்த ஒரு இரும்புக் கடையின் கதவிற்கு அருகில் ஒரு மனிதர் சாய்ந்தவாறு நின்றிருந்தார். அவருடைய வாயில் பற்ற வைக்கப்படாத ஒரு சிகரெட் இருந்தது. போலீஸ்காரர் அவரை நெருங்க, அந்த மனிதர் வேகமாக பேசினார்.
"நல்லது... அதிகாரியே!''- அவர் உறுதியான குரலில் கூறினார்: "நான் ஒரு நண்பருக்காகக் காத்திருக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்னால் தீர்மானிக்கப்பட்ட சந்திப்பு இது. உங்களுக்கு இது ஒரு வினோதமான விஷயமாகப் படலாம்.
இல்லையா? இருக்கட்டும்... நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தால், நான் விளக்கிக் கூறுகிறேன். பல வருடங்களுக்கு முன்னால்... இந்த கடை இருக்குமிடத்தில் ஒரு ரெஸ்டாரெண்ட் இருந்தது... "பிக் ஜோ' ப்ராடி'ஸ் ரெஸ்டாரெண்ட்'. இதுதான் அதன் பெயர்.''
"ஐந்து வருடங் களுக்கு முன்பு வரை....''- போலீஸ்காரர் கூறினார்: "அதற் குப் பிறகு அது மூடப்பட்டு விட்டது.''
கதவிற்கு அருகில் நின்றிருந்த மனிதர் ஒ

கதவிற்கு அருகில் நின்றிருந்த மனிதர் ஒரு தீக்குச்சியை உரசி தன் சிகரெட்டைப் பற்ற வைத்தார். அதன் வெளிச்சம் ஒரு வெளிறிப் போன... கூர்மையான கண்களைக் கொண்ட... சதுரமாக தாடையைக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் காட்டியது. அவரின் வலது பக்க கண் புருவத்திற்குக் கீழே ஒரு வெண்ணிற தழும்பு இருந்தது. அவரின் கழுத்துப்பட்டையில் ஒரு பெரிய வைரம் வினோதமான வகையில் பதிக்கப்பட்டு காட்சியளித்தது.
"இருபது வருடங்களுக்கு முன்பு இதே இரவில்...''- அந்த மனிதர் கூறினார்:
"நான் இங்கு...'பிக் ஜோ' ப்ராடி'ஸ் ரெஸ்டாரெண்ட்'டில் என் நெருங்கிய நண்பரும் உலகிலேயே சிறந்த மனிதருமான ஜிம்மி வெல்ஸுடன் அமர்ந்து இரவு உணவு அருந்தினேன். நாங்கள் இருவரும் நியூயார்க்கில் இரண்டு சகோதரர்களைப்போல சேர்ந்தே வளர்க்கப்பட்டோம். எனக்கு பதினெட்டு வயது. ஜிம்மிக்கு இருபது வயது. மறுநாள் காலையில் என் அதிர்ஷ்டத்தைத் தேடுவதற்காக நான் வெஸ்ட் பகுதிக்குப் புறப்பட்டேன். ஜிம்மியை நியூயார்க்கிலிருந்து யாராலும் வெளியே கொண்டு வர முடியாது. உலகிலேயே அந்த ஒரு இடம் மட்டுமே இருக்கிறது என்ற எண்ணத்தைக் கொண்டவர் அவர். இருக்கட்டும்.... அந்த நாள், அந்த நேரத்திலிருந்து சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் சந்திப்பது என்று தீர்மானித்தோம். எங்களுடைய நிலைமை எப்படி இருந்தாலும்.... எவ்வளவு தூரத்திலிருந்து நாங்கள் வர வேண்டிய நிலை இருந்தாலும்.... இருபது வருடங்களில் எங்களின் தலைவிதி எப்படி விளையாடுகிறது என்பதையும், எது எப்படி இருந்தா லும், நாங்கள் என்ன சம்பாதித்தோம் என்பதையும் பார்க்க வேண்டுமென நினைத்தோம்.''
"இது கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது''- போலீஸ் காரர் கூறினார்: "இந்த சந்திப்புகளுக்கு இடையே இருக்கும் காலம் மிகவும் அதிகம் என்று எனக்குப் படுகிறது. நீங்கள் பிரிந்து சென்ற பிறகு, உங்களின் நண்பருடன் தொடர்பு கொள்ளவே இல்லையா?''
"ஆமாம்.... சிறிது காலம் நாங்கள் தொடர்பில் இருந்தோம்.''- அந்த மனிதர் கூறினார்:
"ஆனால், ஓரிரண்டு வருடங்களுக்குப் பிறகு, நாங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவில்லை. பாருங்க... வெஸ்ட் மிகவும் அருமையான பகுதி. அங்கு நான் சந்தோஷ மாக வாழ்ந்தேன். தான் உயிருடன் இருந்தால், ஜிம்மி என்னை இங்கு நேரில் வந்து சந்திப்பார் என்று எனக்குத் தெரியும். அவர் எப்போதும் நேர்மையான மனிதராகவும், உலகின் சிறந்த பழமையான மனிதராகவும் இருந்தார். அவர் எந்தக் காலத்திலும் மறக்க மாட்டார். இன்று இரவு இந்த கதவிற்கு அருகில் வந்து நிற்பதற்கு ஆயிரம் மைல்களைக் கடந்து வந்திருக்கிறேன். என் பழைய நண்பர் வந்து சேர்ந்துவிட்டால், அது பொருட்டே அல்ல.''
காத்திருக்கும் அந்த மனிதர் ஒரு அழகான கடிகாரத்தை வெளியே எடுத்தார். அதன் மூடிகள் சிறிய வைரங்கள் பதிக்கப்பட்டு காட்சியளித்தன.
"பத்து மணி ஆவதற்கு இன்னும் மூன்று நிமிடங்கள் இருக்கின்றன.''-
அவர் அறிவித்தார்:
"இங்கு... ரெஸ்டாரெண்டின் கதவிற்கு அருகில் நாங்கள் பிரிந்தபோது, சரியாக பத்து மணி...''
"நீங்கள் வெஸ்ட்டில் நன்றாக இருந்தீர்கள் அல்லவா?''- போலீஸ்காரர் கேட்டார்.
"நீங்கள் பந்தயமே கட்டலாம். ஜிம்மி பாதி அளவிலாவது சம்பாதித்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் நல்ல மனிதர் என்று ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு கடுமையான உழைப்பாளியும் கூட. என் சம்பாத்தியத்தை அடைவதற்காக நான் கூர்மையான அறிவாளிகளுடன் போட்டி போட வேண்டியதிருந்தது. ஒரு மனிதர் நியூயார்க்கில் பள்ளத்தில் இருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/ss1a-2025-11-08-15-04-58.jpg)
அதே மனிதரை வெஸ்ட் கத்தியின் நுனியில் நிற்க வைக்கிறது.''
போலீஸ்காரர் தன் கையைச் சுழற்றியவாறு ஒன்றிரண்டு அடிகளை எடுத்து வைத்தார்.
"நான் என் பாதையில் செல்கிறேன். உங்களின் நண்பர் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார் என்று நினைக்கிறேன். நேர விஷயத்தில் அவர் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?''
"அப்படி நான் கூறுவதற்கில்லை.''- அந்த மனிதர் கூறினார்:
"குறைந்தபட்சம் அவருக்கு நான் அரை மணி நேரம் அளிப்பேன். ஜிம்மி பூமியில் உயிருடன் இருப்பதாக இருந்தால், அவர் சரியான நேரத்திற்கு வந்து சேர்வார். நீண்ட காலம்..... அதிகாரியே!''
"குட் நைட்.... சார்'' -போலீஸ்காரர் கூறினார்.
தன் பணியில் ஈடுபட்டவாறு கதவுகளைப் பார்த்துக்கொண்டே அவர் நடந்தார்.
இப்போது ஒரு அருமையான குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. தன் நிலையற்ற தன்மையுடன் காற்று எழுந்து பலமாக வீசியது. அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தாறுமாறான வேகத்துடனும் அமைதியாகவும் கோட் காலரை உயர்த்தி விட்டுக்கொண்டும் பாக்கெட்டிற்குள் கைகளை நுழைத்துக் கொண்டும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். ஆயிரம் மைல்களைக் கடந்து ஒரு சந்திப்பை நிறைவேற்றுவதற்கு வந்திருக்கும் அந்த மனிதர் தன் இளமைக்கால நண்பரைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையுடனும் அபத்த சிந்தனையுடனும் தன் சிகரெட்டைப் புகைத்தவாறு இரும்புக் கடையின் கதவிற்கு அருகில் காத்து நின்றுகொண்டிருந்தார்.
இருபது நிமிடங்கள் அவர் காத்திருந்த பிறகு, ஒரு நீளமான ஓவர்கோட்டை அணிந்திருந்த ஒரு உயரமான மனிதர் காலரை காதுகள் வரை இழுத்து விட்டவாறு தெருவின் எதிர் பக்கத்திலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்தார். காத்துக் கொண்டிருந்த அந்த மனிதரை நோக்கி நேராக சென்றார்.
"பாப்... நீங்கள்தானா?''- அவர் சந்தேகத்துடன் கேட்டார்.
"நீங்க ஜிம்மி வெல்ஸா?"- கதவிற்கு அருகில் நின்றிருந்த மனிதர் கத்தினார்.
"என் இதயத்திற்கு ஆசீர்வாதம் கிடைக்கட்டும்!''
புதிதாக வந்த மனிதர் ஆச்சரியப்பட்டார். தன் கையால் எதிரே நின்றிருந்தவரின் கைகளைப் பற்றினார். " இது பாப்தான்.... விதிப்படி உண்மை... நீங்கள் உயிருடன் இருந்தால், இங்கு நான் கட்டாயம் உங்களைச் சந்திப்பேன் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நல்லது... நல்லது.... நல்லது.... இருபது வருடங்கள் என்பது நீண்ட காலம். பழைய ரெஸ்டாரெண்ட் இல்லாமற் போனது, பாப். அது இருந்திருந்தால், நாம் இன்னொரு இரவு உணவை இங்கு அருந்தியிருப்போம் என்று நான் நினைக்கிறேன். வெஸ்ட் உங்களுக்கு எப்படி இருந்தது, கிழவா?''
"அது எனக்கு அனைத்தையும் தந்தது. நான் அதைக் கேட்டேன். நீங்கள் எவ்வளவோ மாறிவிட்டீர்கள், ஜிம்மி. இரண்டு அல்லது மூன்று அங்குலங்கள் அதிகமாக நீங்கள் வளர்ந்திருப்பீர்கள் என்பதை நான் எந்தக் காலத்திலும் நினைத்த தில்லை.''
"ஓ.... இருபது வயதிற்குப் பிறகு நான் கொஞ்சம் வளர்ந்துட்டேன்.''
"நியூயார்க் வாழ்க்கை நல்லா இருந்ததா, ஜிம்மி?''
"பரவாயில்லை.... நகரத்தின் ஒரு இடத்தில் எனக்கு ஒரு நல்ல பதவி இருக்கிறது. வாங்க, பாப். எனக்கு நன்கு தெரிந்த அந்த இடத்திற்குச் சென்று, நம் பழைய நாட்களைப் பற்றி நீண்ட நேரம் நாம் பேசிக் கொண்டிருப்போம்.''
அந்த இரண்டு மனிதர்களும் கையும் கையும் சேர்த்தவாறு தெருவில் நடக்க ஆரம்பித்தார்கள். வெற்றியால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஆணவத் துடன் வெஸ்டிலிருந்து வந்திருந்த மனிதர் தன் தொழிலின் வரலாற்றைப் பற்றி பேச ஆரம்பித்தார். இன்னொரு மனிதர் தன் ஓவர்கோட்டிற்குள் தன்னைப் புதைத்தவாறு ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
மூலையில் ஒரு மருந்துக் கடை இருந்தது. அது மின்சார விளக்குகளால் பிரகாசமாக இருந்தது. அந்த வெளிச்சத்திற்கு அருகில் வந்ததும், அவர்கள் இருவரும் திரும்பி ஒரே நேரத்தில் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க ஆரம்பித்தார்கள்.
வெஸ்டிலிருந்து வந்திருந்த மனிதர் திடீரென நின்று, தன் கையை உருவினார்.
"நீங்கள் ஜிம்மி வெல்ஸ் இல்லை.''- அவர் பலமான குரலில் கூறினார்:
"இருபது வருடங்கள் என்பது நீண்ட காலம்.
அதற்காக ஒரு மனிதனின் நாசியை ரோமனிலிருந்து சப்பைக்கு அது மாற்றிவிடாது.''
"சில நேரங்களில் அது ஒரு நல்ல மனிதனைக் கெட்ட மனிதனாக மாற்றும்.'' - உயரமான மனிதர் கூறினார்: "நீங்கள் பத்து நிமிடங்களில் கைது செய்யப் படுகிறீர்கள், "சில்க்கி' பாப்.
நம் பாதையிலிருந்து நீங்கள் விலகிச்சென்று விட்டதாக சிக்காகோ நினைக்கிறது. அதனால், உங்களுடன் அது பேச விரும்புவதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. நீங்கள் அமைதியாக செல்வீர்கள் அல்லவா? அதுதான் சரியானது. இப்போது.. நாம் ஸ்டேஷனை அடைவதற்கு முன்னால், உங்களிடம் கொடுக்கும்படி என்னிடம் ஒரு குறிப்பு தரப்பட்டிருக்கிறது. சாளரத்திற்கு அருகில் நீங்கள் இதை வாசிக்கலாம். இதை எழுதியவர்.... காவல்துறை ரோந்து அதிகாரி வெல்ஸ்.
வெஸ்டிலிருந்து வந்திருந்த மனிதர் தன்னிடம் கொடுக்கப்பட்ட அந்தச் சிறிய தாளைப் பிரித்தார். அதை வாசிக்க ஆரம்பித்தபோது, அவருடைய கை சரியாக இருந்தது. ஆனால், அதை வாசித்து முடித்தபோது, அவருடைய கை நடுங்கியது.
அந்த குறிப்பு சிறியதாகவே இருந்தது.
"பாப்.... நான் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டேன். உங்களின் சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காக நீங்கள் தீக்குச்சியை உரசியபோது, சிக்காகோவில் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதரின் முகம் அது என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஏதோ காரணத்தால், இதை என்னால் செய்ய முடியவில்லை. அதனால், நான் சுற்றி அலைந்து சீருடை அணியாத ஒரு மனிதரை இந்த காரியத்தைச் செய்வதற்காகக் கண்டுபிடித்தேன்.
- ஜிம்மி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us