வீரமும், அதி காரமும் கொண்ட செவ்வாயின் தசா புக்தி மொத்தமாக ஏழு வருடம்தான் என்றாலும், உழைத்தவனின் வியர்வைமீது பட்ட இளம் காற்றுபோல் ஓர் இதத்தை தர வல்லது, ஆயிரம் யோகங்களும், அதிர்ஷ்டங்களும், அமைந்திருந்தாலும், அந்த யோகங்களை எடுத்து ஆளக்கூடிய வல்லமை அங்காரகன் என்னும் செவ்வாயிடம் மட்டுமே பொதிந்துள்ளது.
பணம், பதவி, கூட்டம், அத்தனையும் அமையப்பெற்றாலும் தைரியம் இல்லையென்றால் அனைத்தும் வீண் என்பது தெரிந்த ஒன்றுதான் அந்த தைரியத்தை அளிக்கவல்ல கிரகம் இந்த செவ்வாய்தான்.
பூமிகாரகன் என்றும், மங்களகாரகன் என்றும், அனுஷ்டிக்கப்படும் செவ்வாய் ஒருவருக்கு மண்மனை, சகோதரன், வீரியம், பங்காளிகள், ரத்த உறவுகள் என்று அனைத்தையும் தர கடமைப்பட்டவர்.
பலம் பெற்று செவ்வாய் ஒருவருக்கு உடல் ஆரோக்கியத்தையும், வலுவான உடலையும், உடற் பயிற்சி செய்யும் ஆர்வத்தையும் தருவார். விளை யாட்டு, மருத்துவம் போன்ற துறைகளில் ஒருவருக்கு ஈடுபாடு வர காரணம் செவ்வாய் தான்.
ஆளுமைத் தன்மையும், ஆண் தன்மையும் பெற்ற கிரகமான செவ்வாய் கடகம், சிம்மம், தனுசு, மீன லக்னங்களில் பிறந்தவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்ய பணிக்கப்பட்டவர் ஆவார்.
ருசிக யோகம் எனப்படும் அரசாலும் யோகம் இந்த செவ்வாயின் மூலமே கணக் கிடப்படுகிறது. தயாள குணம், உடல்பலம், பெரும் புகழ் போன்றவற்றை இந்த யோகம் அளிக்கும்.
ஆண் ஜாதகத்தில் செவ்வாயின் பலமானது இல்லற சுகம், குடும்பத்தலைமை போன்றவற்றையும், பெண் ஜாதகத்தில் பூப்படைதல் மாதவிடாய், உடல் சார்ந்த இன்பங்கள் போன்றவற்றை வழங்குகின்றது.
அதோடு அடுத்த தலைமுறையை உருவாக்கும் வம்ச விருத்தியடைய செவ்வாயின் துணை மிக முக்கியம்.
உடலில் உருவாகும் கருமுட்டையின் வலுவையும், உயிர் அணுவின் வலுவையும் நிர்ணயிப்பதே இந்தச் செவ்வாய்தான்.
அரசு அதிகாரங்களையும், சீருடை அணியும் யோகத்தையும் தன்னகத்தே வைத்திருப்பவர் இவரே.
திருமணத்தைப் பொறுத்தவரை அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் கிரகம் செவ்வாய். அதிலும் 7 மற்றும் 8-ஆமிட செவ்வாய் சில தொ

திருமணத்தைப் பொறுத்தவரை அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் கிரகம் செவ்வாய். அதிலும் 7 மற்றும் 8-ஆமிட செவ்வாய் சில தொந்தரவுகளை இயல்பிலேயே தரவல்லது. 8-ஆமிடத்தில் செவ்வாய் அமர்வது மாங்கல்ய தோஷமாக எடுத்துக்கொள்ளப்பட்டு திருமணத்தில் சில இடர்பாடுகளை அளிக்கின்றது.
செவ்வாய் தோஷம் உண்மையான நிலை என்னவென்றால், ஓர் உடலில் அமைந்துள்ள ரத்தத்தின் தன்மையினை எடுத்துரைப்பது தான்.
இந்த தன்மை இணக்கமாக அமையப்பெற்ற இரு உடலிலும் தாம்பத்தியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாதவண்ணம் இருப்பதற்காக பார்க்கப்படுவதுதான்.
குறிப்பாக, இரு உடல்சார் சுரபிகளின் இயக்கத்தை கருத்தில் கொண்டுதான் இந்த செவ்வாயின் தோஷமானது ஜோதிடவியலில் கணிக்கப்பட்டுள்ளது.
பெருவாரியாக செய்யப்படும் செவ்வாய் தோஷ பரிகாரங்களால் இந்த தோஷம் நீங்கிவிடும் என்கின்ற எண்ணத்தை தயவுசெய்து வாசகர்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.
தார்மீகமாக பார்க்கப்பட்டாலும் ஒரு பரிகாரத்தின்மூலம் எப்படி ரத்தத்தின் தன்மையை மாற்றிவிட முடியும் என்பதை சற்று யோசிக்குமாறு கேட்டுக்கொள்கின் றேன்.
அதேபோன்று அஸ்தங்க தோஷத்திற்கு ஆளாகும் மற்ற கிரகங்களின் காரகங்களை விடவும், இந்த செவ்வாயின் காரகம் சற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணமாக சனி அஸ்தங்கமானால் தொழில் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். சந்திரனின் அஸ்தங்கம் தாயாரின் வகையிலும், மனரீதியான பிரச்சினையையும் வழங்கும் மேலும் கருப்பை சார்ந்த பிரச்சினைகளையும் கொடுக்கும்.
புதனின் அஸ்தங்கம் பத்திரம், தோல், சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றை வழங்கும்.
இவையனைத்துமே தன்னிலிருந்து வெளியில் நிகழக்கூடிய ஒரு தன்மையில் அமையப்பெற்றுள்ளது.
சந்திரன் மட்டும் கருப்பை சார்ந்த பிரச்சினையை அளிக்கும்.
இவையனைத்தையுமே சரிசெய்ய வாய்ப்புகள் சில வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செவ்வாயின் அஸ்தங்கம் ரத்தத்தில் அமையப்பெற்ற சிவப்பணுக்களின் தன்மையை குறிக்கின்றது. இதனால் இந்தச் செவ்வாயின் அஸ்தங்கத்தை மட்டும் சற்று கவனமாக கையாளவேண்டும்.
குறிப்பாக சமீபமாக பார்க்கப்படும் ஜாதகங்களில் ஏற்பட்டுள்ள செவ்வாயின் அஸ்தகமானது பெரும் பாதிப்பை வழங்குவதை கண்கூடாகக் காணமுடிகின்றது.
அதிலும் மேஷம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு அஷ்டமாதிபதியான செவ்வாய் பலம் குறையும்பொழுது மேலும் கவனத்துடன் இருப்பது சிறப்பு. குறிப்பாக சமீபமாக காணப்படும் ஜாதகங்களில் மேஷ லக்னத்தினால் பாதிக்கப்பட்ட செவ்வாயின் தன்மையின் பாதிப்பை அனுபவிக்கும் ஜாதகங்களின் வரவு அதிகமாகக் காணப்படுகின்றது.
இந்த மாங்கல்ய மற்றும் மங்களக்காரகனுடனான சில கிரக இணைவுகள் திருப்தியான சூழலையும், அதிருப்தியான சூழலை யும் அளிக்கவல்லது.
செவ்வாய்+சூரியன்
இந்த கிரக இணைவானது பெண்களின் ஜாதகத்தில் ஒரு மாறுபட்ட தன்மையை வழங்கும்.
இந்த இணைவை எடுத்த எடுப்பில் இளம் விதவை தோஷம் என்று கூறிவிட கூடாது. ஆளுமை மற்றும் அதிகாரத்தை வழங்க வல்ல இரு கிரகங்கள் வாழ்வின் பல வளத்தை அளித்தாலும் பெண்களின் ஜாதகத்தில் சில இடர்பாடுகளை வழங்கிவிடுகின்றது.
செவ்வாய்+சந்திரன்
சந்திர மங்கள யோகத்தைக் குறிக்காட்டும் இந்த இணைவானது வாழ்க்கையில் பல செல்வங்களை அடைய வழிவகுக்கும்.
செவ்வாய்+ராகு
அடம்பிடித்து அனைத்து காரியங் களையும் நிறைவேற்றிக் கொள்ளும் தன்மையையும், உடல் இச்சைகள் சார்ந்த பயணத்தையும் வெகுவாக அளிக்கும்.
செவ்வாய்+குரு
குருமங்கள யோகத்திற்கான சூத்திரத்தை தன்னகத்தைகொண்ட இந்த இணைவு வாழ்வின் சிறப்பையும், மரியாதையையும் பெற வழிவகுக்கும்
செவ்வாய்+புதன்
அடம்பிடிக்காத ஆளுமையையும், புலமைத்தன்மையையும் பிரதிபலிக்கும் இணைவாகும்.
செவ்வாய்+கேது
இந்த இணைவும் ஒரு விஷயத்தின் உள்ளார்ந்த தன்மையை ஆராயும் நோக்கத்தை வழங்குவதோடு, காம எண்ணத்தை தூண்டும் தன்மை வாய்ந்தது.
செவ்வாய் தசையில் செவ்வாய் புக்தி 4 வருடம் 27 நாட்கள்
இந்த காலகட்டமானது, உடலில் நல்ல ஆரோக்கியமும், குடும்பத்தில் தன சேர்க்கையும், பூமி, மனை, சம்பாத்தியம், தைரியம் போன்றவற்றில் ஒரு சிறப்பான தன்மையும் வழங்கும்.
எடுக்கும் காரியங்களில் வெற்றியும், ஆடை, ஆபரண செயற்கையும், உண்டாக்கி கடன் சுமையை குறைக்கும்.
செவ்வாயின் நிலை சற்று பாதிப்புடன் இருக்கும்பொழுது உடல் சார்ந்த நோய்களின் தன்மை சற்று மேலோங்கும். உறவினர்களிடம் கலகம், வாக்குவாதமும், ஏற்பட வாய்ப்புகளை வழங்கும். எதிரிகளால் சில தொந்தரவுகளையும் சந்திக்கும் தன்மையை உருவாக்கி கொடுக்கும்.
செவ்வாய் தசையில் ராகு புக்தி
1 வருடம் 18 நாட்கள்
இந்த காலகட்டத்தில் குல பெருமை உயரும், குடும்ப சுகம் அமையும், சுப செலவு மற்றும் எதிர்பாராத வரவுகளை வழங்கவல்ல இந்த புக்தியில் செவ்வாயின் நிலை மாறுபட்டு இருப்பின் விஷ பூச்சிகளால் தொந்தரவும், நெருப்பு மற்றும் விபத்துமூலம் ஏற்படும் தொந்தரவுகளையும் அனுபவிக்க நேரிடும்.
செவ்வாய் தசையில் குரு புக்தி
11 மாதம் 6 நாட்கள்
இந்தக் காலகட்டத்தில் வண்டி, வாகன யோகம், கல்வியில் சிறப்பு, அசையா சொத்துகள் வாங்கும் தன்மை போன்றவற்றை வழங்குவதோடு பலமற்ற கிரக இணைவினால் திருடர்கள் தொல்லைகளும், சிறுநீரகம் மற்றும் அடிவயிறு சார்ந்த பிரச்சினைகளையும், வீண் பழிகளையும் ஏற்கும் சூழல் அமையலாம்.
செவ்வாய் தசையில் சனி புக்தி
1 மாதம் 9 நாட்கள்
வீடு, மனை, வாகனம் சார்ந்த அனைத்துவிதமான நன்மைகளையும் அளிக்க வல்ல காலமாக இந்த காலத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மனரீதியான சில போராட்டங்களை வழங்கும். ஏனென்றால் அதீத வேகமுடைய கிரகமான செவ்வாய், அதீத பொறுமையுடன் கூடிய சனிபகவானோடு இணையும்பொழுது ஒரு இணக்கமற்ற தன்மையை மனதில் ஏற்படுத்தும்.
செவ்வாய் தசையில் புதன் புக்தி
11 மாதங்கள் 27 நாட்கள்
தான, தர்ம காரியங்கள் மற்றும் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கணிதம், கம்ப்யூட்டர் துறைகளில் சிறப்பை அடைய வைக்கும். ஒரு புது சாஸ்திரத்தை கற்றுக்கொள்ளும் சூழலை வழங்கும்.
மேலும் கிரக இணைவில் மாறாட்டங்கள் இருப்பின் உடல் நலத்தில் சிறு பாதிப்பையும், குறிப்பாக நரம்பு மற்றும் தோல் சார்ந்த பிரச்சினைகளில் பாதிப்பை வழங்குவதோடு தாயாதிவழி விரோதத்தையும் ஏற்படுத்தும்.
செவ்வாய் தசையில் கேது புக்தி
4 மாதம் 27 நாட்கள்
லாபத்தையும், வரவுக்கு மீறிய செலவுகளையும், சகோதரிமூலம் அனுகூலத்தையும், ஆன்மிக, தெய்வீக, காரியங்களில் ஈடுபாட்டையும் வழங்கும்.
கிரகங்களின் இணைவில் இடர்பாடுகள் இருப்பின் தோல் நோய்கள் மற்றும் விஷ ஜந்துக்களினால் பிரச்சினைகளையும், சோம்பலும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையற்ற தன்மையையும் வழங்கும்.
மேலும் எதிர்பாலின ஈர்ப்பை அதிகப் படுத்தி அளிக்கும்.
செவ்வாய் தசையில் சுக்கிரனின் புக்தி
1 வருடம் 2 மாதங்கள்
ஆடை, ஆபரணச் சேர்க்கைகளை அள்ளி வழங்கும் காலமாக இந்தக் காலம் அமையப்பெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி குடும்பத்தில் சிறப்பான சில நல்லக் காரியங்கள் நடப்பதற்கான சூழலை அளிக்கும்.
இந்த காலகட்டம் திருமணம் சார்ந்த விஷயங்களில் ஒரு நல்ல முடிவையும் சிறப் பான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக் கும் தன்மையும் கைசேர்க்கும்.
பரிகாரங்கள்
செவ்வாயின் பாதிப்பில் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் செங்கல் ஒன்றை எடுத்து அதில் பாதிக்கப்பட்டவரின் விரலில் ஊசியால் குத்தி மூன்று சொட்டு ரத்தத்தை செங்கலில் வைத்து அந்த கல்லை எடுத்து ஜாதகரின் தலையை சுற்றி உடைத்து விட வேண்டும்.
செவ்வாய் தசை ராகு புக்தியில் நிச்சயமாக இந்த பரிகாரத்தை செய்து கொள்ளவேண்டும்.
முடியாதவர்கள் ரத்ததானம் செய்யலாம்.
ஒற்றை செம்பருத்தி பூக்களை கொதிக்க வைத்து அதில் இரண்டு, மூன்று சொட்டு எலுமிச்சை சாறைவிட்டு இனிப்பிற்கு நாட்டுச்சக்கரை சேர்த்து தினந்தோறும் குடித்து வருவதனால் செவ்வாயின் பாதிப்பு பெருமளவில் குறையும்.
குறிப்பாக, செவ்வாய் தசையில் சந்திரன் மற்றும் கேது புக்திகளில் ஏற்படும் பிரச்சினைகளான கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு இந்த செம்பருத்திப் பூ கசாயம் மிகவும் சிறந்த பலனை அளிக்கும்.
மலைமேல் அமர்ந்துள்ள முருகருக்கு, ஆறு வெற்றிலைகளில் நெல்லிக்காயில் தீபமேற்றிவர வளமான வாழ்க்கை அமையும்.
தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியன்று வீட்டில் ஒரு அளவை படி நெல் வைத்து பூஜைபோட்டு ஒரு சிவப்பு துணியில் அந்த நெல்லை ஒரு மூட்டையாக கட்டி பழனி உண்டியலில் சேர்க்க இதுவரை பிடி மண்கூட இல்லாதவர்களுக்கு மண்மனை அமையும்.
இந்த தசாபுக்தி காலங்களில் மண்ணுட னான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். காலணிகள் இல்லாமல் நடப்பது மிகவும் சிறப்பு.
செல்: 80563 79988