Advertisment

யோக ஜாதகத்திலும் பாதகத்தை உண்டாகும் திதி சூன்ய ராசிகள்! - ஜோதிடரத்னா சேலம் ஸ்ரீபூங்கொடி

yogam

ம் வாழ்க்கையின் ரகசியங்களை உள்ளடக்கிய ஜாதகத்தின் மூலம்தான் ஜோதிட சாஸ்திரம் எனும் வானியல் சாஸ்திரம்.

Advertisment

ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் நமக்கு வழிகாட்டிகளாக... நம் ஜாதகத்தின் கூறுகளாக உள்ளன.

Advertisment

அவற்றில் ஒன்றாக ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.

அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை.

பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கியமாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்தில் இருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்குமுள்ள தூரமாகும்.

15 திதிகளில் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை. மற்ற 14 திதிகளில் பிறந்தவர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது.

இவற்றை கவனிக்காமல் பலன் சொல்லும்போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை. ஆம், ஜோதிடத்தின் வழி காட்டியாக திதி சூன்யம் உள்ளது.

இந்த திதிகளில் சதுர்த்தசியில் ஒருவர் பிறந்திருந்து புதனும் - குருவும் ஜாதகத்தில் உச்ச நிலையில் இருந்தாலும்  பலன்கள் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், 

சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களையும் செய் வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

திதி சூன்யம் பெற்ற மேற்படி கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றாலும் கேந்திர- திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல

ம் வாழ்க்கையின் ரகசியங்களை உள்ளடக்கிய ஜாதகத்தின் மூலம்தான் ஜோதிட சாஸ்திரம் எனும் வானியல் சாஸ்திரம்.

Advertisment

ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் நமக்கு வழிகாட்டிகளாக... நம் ஜாதகத்தின் கூறுகளாக உள்ளன.

Advertisment

அவற்றில் ஒன்றாக ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.

அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை.

பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கியமாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்தில் இருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்குமுள்ள தூரமாகும்.

15 திதிகளில் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை. மற்ற 14 திதிகளில் பிறந்தவர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது.

இவற்றை கவனிக்காமல் பலன் சொல்லும்போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை. ஆம், ஜோதிடத்தின் வழி காட்டியாக திதி சூன்யம் உள்ளது.

இந்த திதிகளில் சதுர்த்தசியில் ஒருவர் பிறந்திருந்து புதனும் - குருவும் ஜாதகத்தில் உச்ச நிலையில் இருந்தாலும்  பலன்கள் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், 

சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களையும் செய் வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

திதி சூன்யம் பெற்ற மேற்படி கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றாலும் கேந்திர- திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல்லது பலனே இல்லாமல் செய்கிறது.

மேற்படி திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் வக்ரகதியில் இருக்கும் போதும், சிம்மம்- விருச்சிகம்- கும்பம்- மேஷம் ராசியில் இருக்கும் போதும் சூன்ய தோஷ நிவர்த்தி பெறுகிறது. 1, 5, 9 ஆகிய கிரகங்களின் சாரம் பெறும்போதும், திருவாதிரை- சுவாதி- சதயம் 

என்னும் ராகுவின் நட்சத்திரக் காலில் இருக்கும்போதும் சூன்யதோஷ நிவர்த்தி யைப் பெறுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சூன்ய தோஷத்தை மட்டும் பார்க்காமல் தோஷ நிவர்த்தியையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொன்னால்,

"போற்றுகின்ற ஜோதிட நூல்
பொய்யாது ஒருநாளும்''


என்கிற ஜோதிடப் பாடலின்படி ரண பலமும், நலமும் பெற முடியும் என்பதே ஆய்வு.

சூன்ய திதி, சூன்ய ராசி, சூன்ய கிரகம்

1. பிரதமை திதி துலாம்- மகரம், சுக்கிரன்- சனி.

2. துவிதியை திதி தனுசு- மீனம். குரு.

3. திருதியை திதி மகரம்- சிம்மம், சனி- சூரியன்.

4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம். சனி-சுக்கிரன்

5. பஞ்சமி திதி மிதுனம்- கன்னி, புதன்.

6. சஷ்டி திதி மேஷம்- சிம்மம், செவ்வாய்- சூரியன்.

7. சப்தமி திதி தனுசு- கடகம், குரு- சந்திரன்.

8. அஷ்டமி திதி மிதுனம்- கன்னி, புதன்.

9. நவமி திதி சிம்மம்- விருச்சிகம், சூரியன்- செவ்வாய்.

10. தசமி திதி சிம்மம்- விருச்சிகம், சூரியன்- செவ்வாய்.

11. ஏகாதசி திதி தனுசு- மீனம், குரு.

12. துவாதசி திதி துலாம்- மகரம், சுக்கிரன்- சனி.

13. திரயோதசி திதி ரிஷபம்- சிம்மம், சுக்கிரன்- சூரியன்.

14. சதுர்த்தசி திதி மிதுனம்- கன்னி, புதன்- குரு, தனுசு- மீனம்.

15. அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு திதி சூன்யம் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி திதியில் திதி சூன்யம் இல்லை. இருந்தாலும் அமாவாசை யில் கடக ராசியும், பௌர்ணமியில் சிம்ம ராசியும் திதி சூன்யம் என்று சில நூல்கள் கூறுகின்றன.

உதாரணமாக ஒருவர் வளர்பிறை பஞ்சமி திதியில், ரிஷபம் லக்னத்தில் பிறந்துள்ளார் என்றால், அவருக்கு திதி சூன்ய ராசிகள் மிதுனம், கன்னி அந்த ராசிக்குரிய ஆட்சி கிரகம் புதன் ஆகும். இவர் பிறந்தது ரிஷபம் லக்னம். ரிசப லக்னத்திற்கு மிதுனம், கன்னி ராசிகள், 2, 5-ஆம் வீடாக வரும். மற்றும் புதன் சமயோசித புக்தி மற்றும் கல்வி. வியாபாரம் மற்றும் தாய்மாமன் போன்ற காரகங்களை தன்னகத்தே கொண்டவர்.

ஆக, அந்த ஜாதகருக்கு 2, 5-ஆம் பாவக விஷயத்தில் பிரச்சினை ஏற்படும். எப்படியெனில் பணவரவில் பிரச்சினை, குடும்பத்தில் குழப்பம் மற்றும் குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து, பாட்டன் போன்றவற்றில் பலன்கள் தீமையில் முடியும். மற்றும் புதன் கிரக காரக பலனும் ஜாதகருக்கு எதிர்மறையாக கிடைக்கும்.

திதி சூன்யத்திற்கு தீர்வு:

திதி சூன்யத்திற்குரிய தேவதைகளை வழிபட்டால் திதி சூன்யத்தின் தாக்கம் குறையும்.

திதிகளுக்குரிய தேவதைகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திதி தேவதைகள்

பிரதமை: துர்க்கை.

துவிதியை: கிருஷ்ணர்.

திருதியை: சந்திரன் மற்றும் சிவ வழிபாடு.

சதுர்த்தி: விநாயகர்.

பஞ்சமி: இந்திரர்.

சஷ்டி: முருகன்.

சப்தமி: சூரியன்.

அஷ்டமி: லட்சுமி.

நவமி: சரஸ்வதி.

தசமி: வீரபத்திரர்.

ஏகாதசி: பார்வதி.

துவாதசி: விஷ்ணு.

திரயோதசி: பிரம்மா.

சதுர்த்தசி: ருத்ரன்.

உங்கள் பிறந்த திதியைத் தெரிந்து வழிபாடுகள் செய்வது நன்மைதரும்.

பிறந்த திதிகளுக்குரிய தெய்வங்களை வழிபடுவதன்மூலம் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் சிறப்பான வெற்றி கிடைப்பதுடன், பிறப்பு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

திதி அதிபதிகள் என்பவர்கள் யார்?

திதி அதிபர்கள் என்பவர்கள் ஒவ்வொரு திதிக்கும் (பௌர்ணமி, அமாவாசை உட்பட) உரிய தெய்வங்கள் அல்லது கடவுள்கள், இவர்கள் அந்தந்த திதிகளின் தன்மைகளுக்கு ஏற்ப நல்ல அல்லது கெட்ட பலன்களை வழங்குபவர்கள்; உதாரணமாக, பிரதமைக்கு அக்னி, துவிதியைக்கு பிரம்மா அல்லது துவஷ்டா, திரிதியைக்கு பார்வதி, சதுர்த்திக்கு விநாயகர் போன்றோர், குறிப்பிட்ட காரியங்களை அந்தந்த திதியில் செய்ய, அந்தந்த திதி அதிபதியை வழிபடுவது சிறப்பு என ஜோதிடம் கூறுகிறது. 

முக்கிய திதி அதிபதிகள்

பிரதமை (முதல் திதி): அக்னி பகவான்.

துவிதியை (இரண்டாம் திதி): பிரம்மா அல்லது துவஷ்டா தேவதை.

திரிதியை (மூன்றாம் திதி): பார்வதி தேவி.

சதுர்த்தி (நான்காம் திதி): விநாயகப் பெருமான்.

பஞ்சமி (ஐந்தாம் திதி): நாக தேவதைகள் (நாகங்கள்).

ஷஷ்டி (ஆறாம் திதி): முருகன் (கார்த்திகேயன்).

சப்தமி (ஏழாம் திதி): சூரிய பகவான்.

அஷ்டமி (எட்டாம் திதி): காளி தேவி அல்லது பைரவர்.

நவமி (ஒன்பதாம் திதி): துர்க்கை அல்லது கால பைரவர்.

தசமி (பத்தாம் திதி): தர்ம ராஜா (யமதர்மர்).

ஏகாதசி (பதினொன்றாம் திதி): விஷ்ணு பகவான்.

துவாதசி (பன்னிரண்டாம் திதி): விஷ்ணு பகவான்.

த்ரயோதசி (பதின்மூன்றாம் திதி): காமதேவன்.

சதுர்த்தசி (பதினான்காம் திதி): சிவனார் (ருத்ரர்).

பௌர்ணமி (முழு நிலவு): சந்திரன் (நிலவு).

அமாவாசை (தேய்பிறை முதல் திதி): பித்ருக்கள் (முன்னோர்கள்).

முக்கியத்துவம்:

ஜனன ஜாதகத்தில் ஒருவருக்கு அமையும் யோக திதி சூனியமாகும் போது, அந்த திதிக்குரிய தெய்வத்தை வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்யலாம்.

திருமணம், வீடு கட்டுதல், புதிய தொடக்கங்கள் போன்ற நல்ல காரியங்களை அந்தந்த திதிக்குரிய தெய்வத்தின் அருளுடன் செய்ய, திதி அதிபதிகளின் அருள் கிடைக்கும்.

வளர்பிறை திதி கோவில்கள்...

பிரதமை- பட்டிஸ்வரம் துர்க்கை.

துவிதியை- திருவைகாவூர் வில்வமணநாதர்.

திருதியை- திங்களூர்.

சதுர்த்தி- பிள்ளையார்பட்டி. 

பஞ்சமி- பெண்ணாடம் பிரளயகாளேஸ்வரர்.

சஷ்டி- திருச்செந்தூர்.

சப்தமி- சூரியனரர் கோவில்.

அஷ்டமி- தேவூர்.

நவமி- கூத்தனூர் சரஸ்வதி.

தசமி- வீரபத்திரன் திருவொங்காடு. 

ஏகாதசி- மதுரை மீனாட்சி. 

துவாதசி- கும்பகோணம் சாரங்கபாணி.

திரியோதசி- திருகண்டியூர்.

சதுர்த்தசி- திருபுவனம் சரபேஸ்வரர்

அமாவாசை- இராமேஸ்வரம்.

திதி சூன்யம் என்பது பலனைத் தடுப்பதுடன், சில நேரங்களில் அந்த பலன்களை மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மையையும் கொண்டது.

சரியான பரிகாரத்திற்கு, ஒரு நல்ல ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து, அவருடைய வழிகாட்டுதலின் பேரில் பரிகாரங்களை செய்வது மிகவும் முக்கியம்.

bala280226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe