முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூராடம்- 4.
சந்திரன்: சித்திரை- 3.
செவ்வாய்: பூராடம்- 4.
புதன்: பூராடம்- 3.
குரு: புனர்பூசம்- 2 (வ).
சுக்கிரன்: உத்திராடம்- 1.
சனி: பூரட்டாதி- 4.
ராகு: சதயம்- 4.
கேது: பூரம்- 2.
கிரக மாற்றம்:
13-1-2026 மகரத்தில் சுக்கிரன் அதிகாலை 3.58 மணிக்கு
14-1-2026 மகரத்தில் சூரியன் பகல் 3.07 மணிக்கு
16-1-2026 மகரத்தில் செவ்வாய் அதிகாலை 4.28 மணிக்கு
17-1-2026 மகரத்தில் புதன் பகல் 10.24 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: துலாம்
13-1-2026 மாலை 5.21 மணிக்கு- விருச்சிகம்.
16-1-2026 அதிகாலை 5.48 மணிக்கு- தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும், 9, 10-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்க முடியும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகுவதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன் மூலமாக கெடுதிகள் விலகி நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன், செவ்வாய் வரும் 14-ஆம் தேதிமுதல் 9-ல் சூரியனும், 16-ஆம் தேதிமுதல் 9-ல் செவ்வாயும் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம்கூட இனிவரும் நாட்களில் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் ரீதியாக இருக்கக்கூடிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள தேக்கங்கள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன் மூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14, 15 .
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய ஸ்தானங்களில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். பணவரவில் ஏற்ற- இலக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத் துக்கொண்டு சிக்கனத்தோடு இருக்க வேண்டும். உடல்ரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தேவையற்ற தூரப் பயணங்களைத் தள்ளி வைக்க வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மேலதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது, தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 9-ல் சனி, வார முற்பாதியில் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு உங்களது தேவைகள் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். 14-ஆம் தேதி முதல் சூரியன் 7-லும், 16-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-லும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற தூரப் பயணங்களைத் தற்போதைக்கு தள்ளிவைப்பது உத்தமம். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட சிறப்பாக செய்து முடிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது குறைவதால் மன நிம்மதி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். பொதுவாக உங்கள் முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற துர்க்கையம்மனை வழிபடுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் வரும் புதன்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதன் உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். பண விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருக்கவேண்டும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரத்தை குறைத் துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கவனமாக இருந்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய காலமாகும். மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் பழகக்கூடிய மாணவ- மாணவிகளால் தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன் மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வரும் புதன்கிழமை முதல் சூரியன் 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன் சற்று குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் எதிலும் தனித்திறமையோடு செயல்பட்டு எடுத்த பணியை முடிப்பீர்கள். நீங்கள் உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது, சில இடங்களில் நெருங்கியவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதை விட பயனுள்ள விஷயத்திற்கு நேரத்தை செலவிடுவது நல்லது. குடும்பத்தில் நீண்டநாட்களாக தடைபட்டுவந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு கால பைரவரை வழிபாடு செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 11-ல் கேது சஞ்சரிப்பதும், செவ்வாய்க்கிழமைமுதல் 4-ல் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். இருக்கக் கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களைப் பெறுவீர்கள். புதன்கிழமை முதல் சூரியன் 4-லும், வெள்ளிக்கிழமைமுதல் செவ்வாய் 4-லும் சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் நீங்கள் எதையும் சாமர்த்தியமாக கையாண்டு எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு களை அடையக்கூடிய நேரமாகும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் ஒருசில வளமான பலன்களைப் பெறமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பது, ராகுகால நேரங்களில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 16, 17.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன் சஞ்சரிப்பதாலும், வரும் புதன்கிழமைமுதல் சூரியன் 3-லும், வெள்ளிக்கிழமைமுதல் செவ்வாய் 3-லும் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் ஒருசில வளமான பலன்களைப் பெறலாம். தொழில் வியாபாரத்தில் முத-ல் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். வார முற்பாதியில் ஒருசில நெருக்கடிகள் இருந்தாலும் வார இறுதி நாட்களில் எதிர்பாராத பொருளாதார வரவுகளை பெற்று வளமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் நீங்கள் தனித்திறமையோடு செயல்பட்டு எடுத்த பணியை முடிப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைப்பது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு செயல்படவேண்டும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்கா-கமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால்தான் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 1, 2-ல் சூரியன், செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தற்போது குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். நம்பியவர்களே உங்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். தேவையில்லாத பயணங்களைத் தள்ளிவைப்பது மிகமிக நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் ஒருசில அனுகூலத்தை அடையமுடியும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது சிறப்பு. வேலைக்கு செல்பவர்களுக்கு பிறருடைய வேலையும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு நடந்துகொண்டால் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் நீங்கள்சிறப்பாக செயல்பட்டாலும் சக மாணவ- மாணவிகளால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்கள் அடைவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 16, 17 .
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப் பதாலும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு காரியத்தைகூட நீங்கள் சிறப்பாக கையாண்டு குறித்த நேரத்தில் முடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய காலமாகும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு எதையும் எளிதில் புரிந்துகொண்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும். தேவையற்ற பயணங்களை தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14, 15 .
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட வேண்டும். வார முற்பாதியில் சூரியன், செவ்வாய், புதன் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்கவேண்டும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு நடந்துகொள்வது உத்தமம். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள்வழியில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொறுமையாக செயல் பட்டால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள் வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வதன் மூலம் ஏற்றங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10, 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அமைப்பானது உங்களுக்கு இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்கள் தனித்திறமையால் எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச் சினைகளைத் தவிர்க்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங் கள் கிடைக்கக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கமுடியும். பெரிய மனிதர் களுடைய உதவியானது கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/09/weekrasi-2026-01-09-15-51-09.jpg)