முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment


கிரக பாத சாரம்:
சூரியன்: திருவோணம்- 1.
சந்திரன்: ரேவதி- 3.
செவ்வாய்: உத்திராடம்- 4. 
புதன்: திருவோணம்- 1. 
குரு: புனர்பூசம்- 2 (வ). 
சுக்கிரன்: திருவோணம்- 2. 
சனி: உத்திரட்டாதி- 1. 
ராகு: சதயம்- 4.
கேது: பூரம்- 2.   

Advertisment

thisweekrasi1


கிரக மாற்றம்:
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மீனம்
25-1-2026 பகல் 1.36 மணிக்கு மேஷம்.
27-1-2026 மாலை 4.45 மணிக்கு ரிஷபம்.
29-1-2026 மாலை 6.31 மணிக்கு மிதுனம்.


மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகக்கூடிய நேரம் ஆகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையென்று ஏங்கியவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்ட கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு படிப்பில் சிறப்பாக செயல்பட முடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

Advertisment

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 30, 31.

ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உங்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். எந்த ஒரு விஷயத்திலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவி களை தற்போது பெறமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு கள் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. மாணவ- மாணவியர் கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப் படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசு பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29.

மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகி மன அமைதியை குறைக்கும். உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் ஆகும். பிறரிடம் பேசுவதை தற்கா-கமாக குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.

கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நெருங்கியவர் களின் உதவியால் வளமான பலன்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். அஜீரண கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது உங்களது பலமும் வ-மையும் அதிகரிக்கும். விரும்பிய இடமாற்றங் கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29.

சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்லவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும் என்றாலும் சில விஷயங்களில் பிறரை நம்பாமல் நீங்கள் நேரடியாக சில காரியங்களை செய்தால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பிறரால் முடிக்கமுடியாத காரியத்தைகூட நீங்கள் தலையிட்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பேச்சை தவிர்த்துவிட்டு உங்களுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30, 31.

கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 5-ல் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இடத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உங்க ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் உதவியால் வளமான பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சக ஊழியர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

வெற்றி தரும் நாட்கள்: 30, 31. 

துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று 4-ல் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு யோகக்காரர்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சனி 6-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒருசில அனுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பங்காளியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் எளிதில் சமாளித்து எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரத்தில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26.    

விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், 5-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். நண்பர்கள்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களைப்பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்துச் சென்றால் ஏற்றமிகுந்த பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது வெளியூர் தொடர்புகள்மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் உடனிருப்பவர்களிடம் பேசுகின்றபோது சற்று கவனத் தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்து படிப்பில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வரும் நாட்களில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலம் நல்ல பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28.    

தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதாலும், குரு வக்ரகதியில் இருப்பதாலும் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தேவையற்றவகையில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமாகும். பொதுவாக பிறரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தீபம் ஏற்றுவதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30, 31.    

மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். நண்பர்கள்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். சில நேரங்களில் உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டிய நேரம் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்ககூடிய பலமானது உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 31.

கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். எதிர்பார்க்கின்ற பண வரவுகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். வயது மூத்தவர் களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கிடைப்பதில் இடையூறுகள் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் படிப்பில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் நன்மை அடைய சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதன்மூலமாக ஏற்றங்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27.    

மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் என வர்ணிக்கப் படக்கூடிய 11-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கின்ற உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் குறைந்து மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்களுக்கு உங்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய சிறப்பான நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு கால பைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29.