Advertisment

இந்த வார ராசி பலன் 22-2-2026 முதல் 28-2-2026 வரை

thisweekrasi

முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாத சாரம்:
சூரியன்: சதயம்- 1.
சந்திரன்: அஸ்வினி- 2.
செவ்வாய்: அவிட்டம்- 2. 
புதன்: பூரட்டாதி- 3. 
குரு: புனர்பூசம்- 1 (வ). 
சுக்கிரன்: பூரட்டாதி- 1. 
சனி: உத்திரட்டாதி- 2. 
ராகு: சதயம்- 3.
கேது: பூரம்- 1.   

Advertisment

கிரக மாற்றம்: 

thisweekrasi1


23-2-2026 கும்ப செவ்வாய் பகல் 11.50 மணிக்கு
26-2-2026 புதன் வக்ரம் ஆரம்பம் பகல் 12.17 மணிக்கு

சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மேஷம்
23-2-2026 இரவு 10.12 மணிக்கு, ரிஷபம்.
25-2-2026 இரவு 12.54 மணிக்கு, மிதுனம்.
28-2-2026 அதிகாலை 3.52 மணிக்கு, கடகம்.


மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு, புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். பண வரவுகள் சாதகமாக இருந்து தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் புதிய பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் ஒரு கௌரவ நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய இடத்தி-ருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்களுக்கு கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 26, 27

ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்க முடியாத ஒரு பணியைகூட நீங்கள் சிறப்பாக கையாண்டு நல்ல பெயர் எடுக்க முடியும். மேலதிகாரிகளிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசு பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றம்மிகுந்த பலன்களை நீங்கள் ப

முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாத சாரம்:
சூரியன்: சதயம்- 1.
சந்திரன்: அஸ்வினி- 2.
செவ்வாய்: அவிட்டம்- 2. 
புதன்: பூரட்டாதி- 3. 
குரு: புனர்பூசம்- 1 (வ). 
சுக்கிரன்: பூரட்டாதி- 1. 
சனி: உத்திரட்டாதி- 2. 
ராகு: சதயம்- 3.
கேது: பூரம்- 1.   

Advertisment

கிரக மாற்றம்: 

thisweekrasi1


23-2-2026 கும்ப செவ்வாய் பகல் 11.50 மணிக்கு
26-2-2026 புதன் வக்ரம் ஆரம்பம் பகல் 12.17 மணிக்கு

சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மேஷம்
23-2-2026 இரவு 10.12 மணிக்கு, ரிஷபம்.
25-2-2026 இரவு 12.54 மணிக்கு, மிதுனம்.
28-2-2026 அதிகாலை 3.52 மணிக்கு, கடகம்.


மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு, புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். பண வரவுகள் சாதகமாக இருந்து தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் புதிய பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் ஒரு கௌரவ நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய இடத்தி-ருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்களுக்கு கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 26, 27

ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்க முடியாத ஒரு பணியைகூட நீங்கள் சிறப்பாக கையாண்டு நல்ல பெயர் எடுக்க முடியும். மேலதிகாரிகளிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசு பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றம்மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 28.

மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சுக்கிரன், சூரியன் சேர்க்கைபெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பொருளாதாரரீதியாக ஏற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பு. தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் திங்கட்கிழமைமுதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய உடல்ரீதியான பிரச்சினைகள் எல்லாம்கூட படிப்படியாக விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இருக்கும் இடத்தைவிட வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து நல்ல லாபத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். வேலையாட்களுடைய ஆதரவானது சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்கும் இடத்தை விட வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. சக ஊழியரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் எதிலும் பொறுப்போடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுப்பார்கள். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 26, 27. 

கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதாலும், வரும் திங்கட்கிழமைமுதல் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடும் நிதானத்தோடும் செயல்பட வேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொண்டால் மட்டுமே வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். சின்ன பாதிப்பு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக எடுப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப் பாட்டோடு இருப்பது, தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைப்பது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லக் கூடிய நேரம் என்பதால் நீங்கள் சற்று கவனத்தோடு இருந்தால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25, 28.

சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மேல் அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருந்தால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் தேவையற்ற எண்ணங்களை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். முடிந்தவரை தூரப்பயணங்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27.

கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதும், வரும் திங்கட்கிழமைமுதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளக்கூடிய பயணங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்டுவந்த சுப காரியங்கள் வரும் நாட்களில் கைகூடி மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் விரும்பிய பதவி உயர்வுகளை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் முன்புவிட எதிலும் தற்போது உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப் பான மதிப்பெண்களை எடுப்பீர்கள். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன் மூலமாக அனுகூல மான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28.

துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கை பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை வரும் நாட்களில் எளிதில் அடையமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய ஒரு பலம் உண்டாகும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சில நாட்களாக உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்த செவ்வாய் வரும் திங்கட்கிழமைமுதல் 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அசதி, டென்ஷன் எல்லாம் வரும் நாட்களில் குறையும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல ஒரு லாபத்தை ஈட்டக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய யோகமும் அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய சூழலும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். உடல்ரீதியாக உங்களுக்கு இருந்துவந்த அனாவசிய தொந்தரவுகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 28.

விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், புதன், 5-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், திங்கட்கிழமைமுதல் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். தொழில், வியாபாரத்தில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் இருந்த நெருக்கடிகள் தற்போது குறைந்து ஒருசில அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறருடைய வேலையை இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளித்து சிறப்பாக செய்து முடிக்ககூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப் பாக செயல்பட்டு பெற்றோர்களிடமும் ஆசிரியரிடமும் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மேலும் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25. 

தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு, திங்கட்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன்பிறந்த வர்கள்மூலமாக ஒருசில ஆதாயமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நீண்டநாட்களாக தடைப்பட்டுவந்த சுப காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சட்டரீதியாக இருக்கக்கூடிய சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைவதால் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருந்தவர் களுக்குகூட வருகின்ற நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் முன்பிருந்த தேக்கநிலை தற்போது விலகி படிப்பில் ஆர்வத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27.

மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன் 3-ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்ப தாலும், திங்கட்கிழமைமுதல் 2-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களது முன்கோபத்தை குறைத் துக்கொள்வதும் நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசுவதை குறைத்துக்கொண்டு சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பேசுவதும் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் இணைத்து செய்துஅதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். தேவையில்லாத தூரப்பயணங்களை தற்கா-கமாகத் தள்ளி வைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைக்கூட எளிதில் புரிந்துகொண்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் ஏற்றுமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28. 

கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், ராகு, செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். சில விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருந்தால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்ககூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டிய நேரமாகும். இல்லையென்றால் தேவையற்ற சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவதன் மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 28.

மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சனி, விரய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தேவையில் லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற தூர பயணங்களைத் தள்ளி வைப்பது தற்போதைக்கு சிறப்பு. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது கூடுதல் பணிச்சுமை காரணமாக மன நிம்மதிக்குறைவு ஏற்படும். பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக ஊழியர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமாகும். உடல்ரீதியாக பார்க்கின்றபொழுது ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சின்ன பாதிப்பு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்வது நல்லது. பிள்ளைகள்வழியில் தேவையற்ற மனக் கவலைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் வீண் வாக்குவாதங்கள் மேற்கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25.

bala210226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe