முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: சதயம்- 3.
சந்திரன்: பூசம்- 4.
செவ்வாய்: அவிட்டம்- 4. 
புதன்: பூரட்டாதி- 3  (வ).
குரு: புனர்பூசம்- 1 (வ). 
சுக்கிரன்: பூரட்டாதி- 3. 
சனி: உத்திரட்டாதி- 2. 
ராகு: சதயம்- 3.
கேது: பூரம்- 1.  

thisweekrasi1

கிரக மாற்றம்: 
2-3-2026 மீன சுக்கிரன் 
அதிகாலை 00.57 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கடகம்
2-3-2026 காலை 7.51 மணிக்கு, சிம்மம்.
4-3-2026 பகல் 1.45 மணிக்கு, கன்னி.
6-3-2026 இரவு 10.18 மணிக்கு, துலாம்.
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய்- சூரியன், ராகு, புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக நெருங்கியவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அளவிற்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு கடினமான விஷயத்தைக்கூட எளிதில் புரிந்துகொண்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். தேவையற்ற பயணங்களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை அடைய கால பைரவரை வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
Advertisment
ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் ஏற்படும். கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு மன மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். வேலையாட்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக முடிக்க முடியாத காரியங்களைகூட தற்போது குறித்த நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுக்க முடியும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளைப் வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப்பலன்களை பெறுவதற்கு பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்:1, 7.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
Advertisment
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சூரியன், புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, வேங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதன் மூலமாக நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4. 
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய், ராகு, புதன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், தேவையில்லாத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தேவையற்ற தூரப் பயணங்களைத் தற்கா-கமாக தள்ளிவைக்க வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைபடக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக சக ஊழியர்கள் உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளித்து வளமான பலன்களை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனமாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்:1, 5, 6. 
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் மேலோங் கும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, உடல்ரீதியாக சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொள்வது தற்போதைக்கு நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக் கூடிய நேரமாகும். பொது இடங்களில் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சில விஷயங்களில் வேலை ஆட்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் நீங்கள் நேரடியாக செயல் பட்டால்தான் வீண் பிரச்சினைகளை சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக நண்பர்களால் தேவையில்லாத இடைஞ்சல்களை சந்திக்கக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 7.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் குருபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் மன மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்டநாட்களாக இருந்துவந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடி நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பாராத லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் நிமித்தமாக இருந்த சட்ட சிக்கல்கள் தற்போது குறைவதால் லாபங்கள் அதிகரிக்கும். புதிய கிளைகளை நிறுவக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலையினை அடையக்கூடிய நேரம் ஆகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியருடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 5, 6.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சனி, 11-ல் கேது சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கக்கூடிய நேரம் என்பதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத காரியத்தைகூட நீங்கள் தலையிட்டு குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைய சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்:  1, 2, 3, 7.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் எளிதில் கையாண்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் உழைப்புக்கான ஊதியங்கள் கிடைக்கும். கடினமான பணியை கூட எளிதில் செய்துமுடித்து அதிகாரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் மட்டுமே கல்வியில் சிறப்பாக செயல்பட முடியும். உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5, 6.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் சுலபமாக செய்து முடித்து மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கிளைகளை நிறுவக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுப காரியங்கள் தற்போது கைகூடி மன நிம்மதி ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது மறையும். மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைக் கூட எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு கல்வியில் சிறப்பாக செயல் படுவார்கள். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் அடைவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். பணவரவுகள் தாராளமாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் கைகூடக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், ராகு இருப்பதால் நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும், உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு காரியத்தைகூட நீங்கள் சிறப்பாக கையாண்டு குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 7. 
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், ராகு, 2-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சுப காரிய முயற்சிகளில் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குறிப்பாக தற்போதைக்கு நிதானமாக இருந்துவிட்டால் அடுத்த வாரத்தில் குரு வக்ரநிவர்த்தி அடைய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்கள் அனாவசிய பேச்சை குறைத்துவிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்களுக்கு சக மாணவ- மாணவியர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை அடைவதற்கு துர்க்கையம்மனை வழிபாடு செய்வது, சரபேஸ்வர வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை கிடைக்கும்.
 வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சனி, 12-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடி கள் ஏற்படும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத் துக்கொண்டு சிக்கனத்தோடு இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது,சிறு பாதிப்பு என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது தற்போதைக்கு நல்லது. தேவையில்லாத பயணங்களை தள்ளிவைக்க வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் வீண்பழி சொற்கள் வரலாம் என்பதால் சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொண்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடல் உபாதைகள் காரணமாக கல்வியில் கவனம் செலுத்த முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.