திருமணத்திற்குரிய சாஸ்திர சம்பிரதாயங்கள் இவைகள்தான் என உலகோருக்கு தன் திருமணத்தின் மூலமே சிவபெருமான் காட்டியருளிய திருத்தலங்கள் நான்கு. அவை திருத்துருத்தி, திருவேள்விக்குடி, திருஎதிர் கொள்பாடி, திருமணஞ்சேரி இத்தலங்கள் திருமண சம்பிரதாயங்களை உணர்த்தும் திருத்தலங்களாகப் போற்றப் பட்டு வழிபடப்படுகின்றன. இவற்றில் சிவன் உமையை காந்தர்வ (இன்றைய காதல்) மணம் புரிந்த திருத்தலமே திருத்துருத்தி. துருத்தி என்பது ஆற்றிற்கு நடுவேயுள்ள மண் மேட்டை குறிப்பதாகும். புராண காலத்து திருத்துருத்தியே இன்றைய குத்தாலமாகும். 

Advertisment

தலச்சிறப்பு 

சிவன் உமையம்மையை காந்தர்வ விவாகம் செய்தது, அம்மையப்பர் திருமணத்தை அவர்களது பிள்ளை விநாயகரே முன்னின்று நடத்தியது, திருமணப்பேறு அளிக்கும் வரப்பிரசாதியான அமிர்தமுகிழாம்பிகையை நாயகியாகக்கொண்டது, திருமணத்திற்காக கயிலாயத்திலிருந்து பெருமானுக்கு நிழலாக வந்த உக்தால மரத்தை தலவிருட்ச மாகக்கொண்டது, மூர்த்தி, தலம், தீர்த்தம், உபதெய்வங்கள் என அனைத்துமே திருமண யோகம் அளிக்கத்தக்கது. அக்னிபகவான் தனக்கு ஏற்பட்ட பழி தீர சுவாமியை வழிபட்டது, விக்கிரமசோழ மன்னனின் மனைவி கோமளையின் குட்ட நோய் தீர்த்தது,  வருணனின் சலோதரம் நீக்கியது,  காளி, சூரியன், காமன் மற்றும் காசியபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்டது, சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது.  சிவபக்தன் ஒருவனின் காச நோயை போக்கியது, காசித் தலத்துக்கு நிகரானது போன்ற பல்வேறு சிறப்புகளைக்கொண்டது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 100-ஆவது மற்றும் காவிரியின் தென்கரைத்தலங்களில் 37-ஆவது திருத் தலம் திருத்துருத்தி. 

Advertisment

இறைவன்: வீங்கு நீர் துருத்தி உடையார் என்று போற்றப்படும் சொன்னவாரறிவார். வடமொழியில் உக்தவேதீசுவரர். 

இறைவி: அரும்பன்ன வளமுலையாள், அமிர்தமுகாம்பிகை, திருமணத்திற்காக இறைவனை வேண்டிய கோலம்: பரிமள சுகந்த நாயகி. 

Advertisment

தல விருட்சம்: உக்தாலமரம் (ஒருவகை அத்தி மரம்), தீர்த்தம்: சுந்தர, காவிரி தீர்த்தங்கள் 

தல வரலாறு

பசு உருவம் (கோரூபம்) கொண்டு தேரிழந்தூர், கோமல், திருக்கோழம்பம், கரைகண்டம் ஆகிய தலங்களில் சிவனை வழிபட்ட உமையம்மை இறுதியாக திருவாவடுதுறை தலத்தில்  வழிபடும்போது சுய உருவத்தைப் பெற்றதுடன், சிவபெருமானின் திருக்காட்சியை காணும் பேறும் பெற்றார். ஆனால், திருமணம் நடைபெற முடியாமல் அம்பாளுக்கு மற்றொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தன்னை மகளாகப் பெறவேண்டி தவம் செய்த பரத்வாஜ முனிவரின் விருப்பத்தை நிறைவேற்றும். விதமாக அவரது வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி பரிமளசுகந்தநாயகி என்னும் பெயருடன் பிறந் தாள். வளர்ந்து உரிய பருவம் அடைந்த பின்னர் மீண்டும் சிவனை மணம் புரியவேண்டி, தினமும் காவிரிக்குச்சென்று ஆற்றின் நடுவிலிருந்த மணல் திட்டில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். எட்டாவது நாள் இறைவன் அந்த மணல் லிங்கத்திலிருந்து கையை நீட்டி அம்பிகையின் கரம் பற்றினார். 

அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங் களில் கூறியுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் செய்து அழைத்துச் செல்லவேண்டும்'' என்றும் மேலும், "திருமண வைபவத்தின்போது கடைபிடிக்கவேண்டிய சம்பிரதாயங்களை (திருமணச் சடங்குகள்) உலகத்தாருக்கு வகுத்துக் கொடுக்கும்படியாக நமது திருமணம் நிகழ்வுகள் அமையவேண்டும்' என்ற விருப்பத்தை வெளியிட அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் அம்பாளுக்கு வாக்களித்தபடி நந்திதேவரை அனுப்பி பரத்வாஜ முனிவரிடம் பெண்கேட்டு திருமணம் பேசி, குறித்தநாளில் கயிலாயத்திலிருந்து புறப்பட்டு வந்து தனக்கு நிழற்குடையாக தன்னுடன் வந்த உக்தாலமரத்தின் கீழ் மணவாளராக எழுந்தருளி உமையம்மையை மனையாளாக்கிக் கொண்டார். இப்படி சொன்னது போல நடந்துக் கொண்டமையால்  இறைவன் திருப்பெயர் "சொன்னவாரறிவார்' என்றாயிற்று. 

பொதுவாக, சுபநிகழ்ச்சிகளின்போது விநாயக பெருமானை வணங்கி வழிபட்ட பின்னரே தொடங்குவது மரபாகும். ஆனால் உலகத்தவரே பார்த்து வியந்த  சிவன்பார்வதி திருக்கல்யாண வைபவத்தை தாமே முன்னின்று மகிழ்ச்சியுடன் நடத்திக்காட்டினார் விநாயகப்பெருமான்.  திருமணத்திற்காக கயிலாயத்திலிருந்து பெருமானுக்கு நிழலாக வந்த உக்தாலமரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். அத்தி இனத்தைச் சேர்ந்த இம்மரம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பூக்கள் பூக்கின்றது. ஆனால் பன்னிரண்டு வருடங் களுக்கு ஒரு தடவை மட்டுமே காய் காய்க் கிறது. 

இறைவியின் தவத்தினை ஏற்று இறைவன் சிவலிங்கத் திருமேனியிலிருந்து கரம் பற்றியதால் மூர்த்தி, தலம், தீர்த்தம் மற்றும் உபதெய்வங்கள் என அனைத்தாலும் திருமண