தெய்வங்களும் மனிதர்களும் பிரிக்கமுடியாதவர்கள், திருமணம், குழந்தைப்பேறு, மக்கள் செல்வத்துடன் வாழ ஒவ்வொரு குடும்பத்தினரும் விரும்புவதும் தெய்வத்தை நாடுவதும் நமது பாரம்பரியம். திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் தவிக்கும் தம்பதிகள் பலர். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை மலரச் செய்து குழந்தை பாக்கியம் வழங்கிவருகிறார் அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை.
ஒவ்வொரு செயலுக்கு பின்பும் இறையருள் நிச்சயம் உண்டு. அந்தவகையில் மனிதர்கள் உடலில் ஏற்படும் பலவித நோய்களை தீர்ப்பதற்கு நாம் மருத்துவர்களை நாடிச் செல்வதைபோல் மறு பக்கம் தெய்வங்களை நாடிச்செல்வதும் அவசியமாகிறது. இப்படி மனித வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் துணை நிற்கும் ஆலயங்கள் நமது தமிழகத்தில் உள்ளன. அந்தவகையில் திருமணத்தடை, குழந்தைப் பேறின்மை, நீண்டநாள் நோய் உள்ளவர்கள், தெரிந்தோ தெரியாமலோ- பாவகாரியங்கள் செய்தவர் கள், பிரமஹத்தி தோஷத்துக்கு ஆளானவர்கள் என பல பாவங்களையும் நீக்கி நல்லருள் புரிகிறார்கள். பரம் பொருளான இறைவன் முல்லைவனநாதர், இறைவி கர்ப்பரட்சாம்பிகை. கருவை காப்பாற்றும் தெய்வம் இங்குள்ளதால் இவ்வூருக்கு திருக்கருகாவூர் என்ற பெயர் உருவானது.
இந்து புராணத்தின்படி முல்லை வனமாக இருந்த இப்பகுதியில் கௌதமர், கார்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர்.
இவர்களுக்கு நிறுத்துவர் என்ற முனிவர் முனிவர்களுக்கு பணிவிடை செய்துவந்தார். காவிரி ஆற்றில் உபநதியான வெண்ணை யாற்றங்கரையில் அமைந்துள்ள இப்பகுதியில் தனி குடில் அமைத்து தனது மனைவி வேதிகையுடன் பரம்பொருளான சிவனுக்கும், அம்பாளுக்கும், பூஜையையும் செய்துவந்தார் நிறுத்துவ முனிவர். இந்த நிலையில் அவரது மனைவி வேதிகை கர்ப்பமடைந்தார். கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு பணி நிமித்தமாக நிறுத்துவர் வெளியூர் சென்ற
தெய்வங்களும் மனிதர்களும் பிரிக்கமுடியாதவர்கள், திருமணம், குழந்தைப்பேறு, மக்கள் செல்வத்துடன் வாழ ஒவ்வொரு குடும்பத்தினரும் விரும்புவதும் தெய்வத்தை நாடுவதும் நமது பாரம்பரியம். திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் தவிக்கும் தம்பதிகள் பலர். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை மலரச் செய்து குழந்தை பாக்கியம் வழங்கிவருகிறார் அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை.
ஒவ்வொரு செயலுக்கு பின்பும் இறையருள் நிச்சயம் உண்டு. அந்தவகையில் மனிதர்கள் உடலில் ஏற்படும் பலவித நோய்களை தீர்ப்பதற்கு நாம் மருத்துவர்களை நாடிச் செல்வதைபோல் மறு பக்கம் தெய்வங்களை நாடிச்செல்வதும் அவசியமாகிறது. இப்படி மனித வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் துணை நிற்கும் ஆலயங்கள் நமது தமிழகத்தில் உள்ளன. அந்தவகையில் திருமணத்தடை, குழந்தைப் பேறின்மை, நீண்டநாள் நோய் உள்ளவர்கள், தெரிந்தோ தெரியாமலோ- பாவகாரியங்கள் செய்தவர் கள், பிரமஹத்தி தோஷத்துக்கு ஆளானவர்கள் என பல பாவங்களையும் நீக்கி நல்லருள் புரிகிறார்கள். பரம் பொருளான இறைவன் முல்லைவனநாதர், இறைவி கர்ப்பரட்சாம்பிகை. கருவை காப்பாற்றும் தெய்வம் இங்குள்ளதால் இவ்வூருக்கு திருக்கருகாவூர் என்ற பெயர் உருவானது.
இந்து புராணத்தின்படி முல்லை வனமாக இருந்த இப்பகுதியில் கௌதமர், கார்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர்.
இவர்களுக்கு நிறுத்துவர் என்ற முனிவர் முனிவர்களுக்கு பணிவிடை செய்துவந்தார். காவிரி ஆற்றில் உபநதியான வெண்ணை யாற்றங்கரையில் அமைந்துள்ள இப்பகுதியில் தனி குடில் அமைத்து தனது மனைவி வேதிகையுடன் பரம்பொருளான சிவனுக்கும், அம்பாளுக்கும், பூஜையையும் செய்துவந்தார் நிறுத்துவ முனிவர். இந்த நிலையில் அவரது மனைவி வேதிகை கர்ப்பமடைந்தார். கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு பணி நிமித்தமாக நிறுத்துவர் வெளியூர் சென்றிருந்தார். நிறைமாத கர்ப்பம் காரணமாக உடல் சோர்வடைந்த நிலையில் வேதிகை இருந்துவந்த அந்த நேரம் ஊத்துவ பாத முனிவர் என்பவர் வேதிகை வீட்டு முன்பாக வந்து யாசகம் கேட்டார். யாசகம் கேட்ட முனிவரின் குரல் வேதிகையின் காதில் விழுந்தது. அதேநேரத்தில் உடனே எழுந்துவந்து யாசகம் கொடுப்பதற்கு அவரது உடல்நிலை சோர்வு காரணமாக இருந்துள்ளது. அதனால் யாசகம் கொடுக்க சற்று காலதாமதமானது. வேதிகையின் நிலையை அறியாத ஊர்த்துவ பாத முனிவர் வீட்டுக்குள் இருக்கும் பெண்மணி வெளியே வந்து யாசகம் கொடுக்காமல் தன்னை அவமானப்படுத்துவதாக எண்ணி கோபம் ஏற்பட்டு சாபமிட்டார். இத னால் வேதிகையின் வைற்றில் வளர்ந்த கரு சிதைந்து போனது.
இதனால் மனம் கலங்கிப்போன வேதிகை அம்பாளை மனமுருக வேண்டினார். வேதிகையின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அன்னை அவர்முன் தோன்றினார். அங்கு சிதைந்து கிடந்த கருவை எடுத்து ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்தார். குறிப்பிட்ட நாளில் அந்த கரு குழந்தையாக உருவாகி வெளியே வந்தது. அந்த குழந்தைக்கு நைந்துருவன் என்று பெயரிட்டு குழந்தையை வேதிகையின் கையில் கொடுத்தார். நித்திருவ முனிவரும், வேதிகையும். அம்பாளின் கருணையை நேரில் கண்டுணர்ந்தனர்.
அப்போது வேதிகையும் முனிவரும் உலகத்தில் கருத்தரிக்கும் அனைத்து தாய்மார்களின் கருவையும் காப்பாற்றவேண்டும் என்று அன்னையிடம் பிரார்த்தித்தனர். அவ்வாறே அன்னை அருள்பாலித்து வருகிறார். அது முதற்கொண்டு திருக்கருகாவூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அப்போது முதல் இத்தலத்து அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை என்ற பெயருடன் எழுந்தருளினார். குழந்தை நைந்துருவனுக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லை. உடனே அம்பாள் காமதேனுவை அனுப்பி அந்த குழந்தைக்கு பால் கொடுக்க செய்தார். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியை கீறவும் அங்கே ஒரு பால்குளம் தோன்றியது. அது தற்போதும் திருக்கோவிலுக்கு முன்புறம் உள்ளது.
இவ்வாலய அம்மனை நினைந்து வணங்கினால் தாய்மார்களுக்கு கரு உண்டாகிறது. அது நிலைத்து சுகப்பிரசவமும் நிகழ்கிறது. பழமையான இக்கோவில் தெய்வம் சுகப்பிரசவம் தேடும் பெண்களை ஆசீர்வதித்து அவர்களின் மலட்டு தன்மையை நீக்கி சக்தி வடிவமாகி அவர் களுக்கு குழந்தை வரம் வழங்கிவருகிறார்.
சீர்மிகு இவ்வாலயம் குறித்து அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகியோர் நமது ஆன்மாவை கிளர்ச்சி அடைய செய்யும்வகையில் கோவிலைப் பற்றியும் இறைவன்- இறைவியை பற்றியும் பாடியுள்ளனர்.
இவ்வாலயத்தின் மூலவராக உள்ள லிங்க வடிவ முல்லைவனநாதர் எறும்புகள் கொண்டுவந்த மண்ணால் உருவான சுயம்புலிங்கம் எனவே இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதில்லை. கர்ப்பரட்சாம்பிகை, முல்லைவன நாதரை வேண்டி, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள் ஏழு அடி உயரம் உள்ள கர்ப்பரட்சாம்பிகைக்கு தங்கள் நன்றிக் கடனை செலுத்துவதற்கு அணி அணியாக திரண்டு வருகிறார்கள்.
இந்தியாவில் கரு உருவாவதற்கான முதல் தெய்வமாக அழைக்கப்படுகிறார் கர்ப்பரட்சாம்பிகை, தங்கள் குடும்பத்தில் கருவுற்றிருக்கும் பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக இவ்வாலயத்திற்கு வந்து தாய்மை அடைந்த பெண்களின் குடும்பத்தினர் அம்மனை வழிபடுகிறார்கள். இதன்மூலம் அந்தப் பெண்களுக்கும் சுகப்பிரசவம் நடக்கிறது. வாழ்க்கைத்துணையை தேடும் பெண்கள், குழந்தை இல்லாத பெண்கள் சிறிதளவு நெய்கொண்டு அம்மன் சன்னதி படிகட்டுகளை சுத்தம் செய்யவேண்டும். குழந்தை இல்லாத தம்பதிகள் கர்ப்பரட்சாம்பிகை தேவியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து நெய்யை அர்ச்சகர்கள் வழங்குவார்கள். அந்த நெய்யை தொடர்ந்து 48 (ஒரு மண்டலம்) நாட்கள் தினமும் சிறிதளவு நெய்யை பிரசாதமாக கணவன்- மனைவி இருவரும் உட்கொள்ளவேண்டும். இதன்மூலம் பெண்கள் வயிற்றில் கரு உருவாகும். மேலும் கருவற்றிற்கும் பெண்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்த ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெயை கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்திருந்து பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும்போது இந்த எண்ணெயை அவர்கள் வயிற்றில் தடவினால் பிரசவத்தில் ஏற்படும் வலி சிரமங்கள் நீங்கி சுகப்பிரசவம் அடைகிறார் கள். அதோடு தாய்மார்கள் சுகப்பிரசவம் ஆகவேண்டி பதினோரு தீபங்களை அம்பாளுக்குமுன்பு ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள்.
இப்படி குழந்தைப் பேறு பெற்றவர்கள், சுகப்பிரசவம் அடைந்தவர்கள் தங்கள் குழந்தைகளோடு வந்து நேர்த்திக்கடனாக இங்குள்ள துலாபாரத்தில் செலுத்துகிறார்கள். அம்பாளுக்கு புடவை வழங்கியும் தங்கள் நன்றி கடனை செலுத்துகிறார்கள்.
துலாபாரத்தில் காணிக்கை செலுத்த வந்திருந்த கடலூர் மாவட்டம் பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா, பிரகாஷ், தம்பதிகளிடம் கேட்டோம். திருமணமாகி சுமார் எட்டு ஆண்டுகள் எங்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. இவ்வாலாயம் வந்து முல்லைவனநாதர், கர்ப்பரட்சாம்பிகையை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தோம். அர்ச்சகர்கள் அளித்த பிரசாத நெய்யை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டோம், அதன்பலன் எங்கள் குழந்தை முகுந்தா. எங்களுக்கு குழந்தை வரம் அளித்த அம்மன் கர்ப்பரட்சாம்பிகைக்கு துலாபாரத்தில் குழந்தையை வைத்து நன்றி காணிக்கை செலுத்த இப்போது வந்துள்ளோம். எல்லாவற்றிற்கும் இறைவியின் கருணையே காரணம் என்கிறார்கள் சுதா, பிரகாஷ், தம்பதிகள். (நீண்ட தூரத்தில் உள்ளவர்கள்கூட அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய், பிரசவ எண்ணை ஆகியவற்றை இணைய வழியில் பதிவுசெய்து பெற்று பயனைடைகிறார்கள்.
இவ்வாலய இறைவனையும் அம்பாளையும் முனிவர்கள் மட்டுமல்ல; பிரம்மன் உட்பட பலரும் வந்து வழிபட்டுள்ளனர்.
பிரம்ம தேவனுக்கு படைப்பு தொழில் செய்வதால் தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்ற கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த சிவபெருமான் பிரம்மன் படைப்பு தொழிலை தொடரமுடியாமல் இடையூறு செய்தார். இதனால் படைப்புத் தொழில் கைகூடவில்லை. இதன்மூலம் உலக இயக்கம் நின்று போகும் நிலை ஏற்பட்டது. உடனே தன் தவறை உணர்ந்த பிரம்மன் இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு குளம் உருவாக்கி அதிலிருந்து நீர் எடுத்து முல்லைவனநாதர் அன்னை கர்ப்பரட்சாம்பிகை ஆகியோருக்கு பூஜைசெய்து தனது தவறுக்குப் பிராயச்சித்தம் தேடி மீண்டும் படைப்பு தொழிலை இறைவன் அருளால் பெற்றார்.
பிரம்மன்முதல் பல முனிவர்களும் இவ்வாலய இறைவனிடம் சாப விமோசனம் பெற்றுள்ளனர். சிவன் ஆலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இங்கும் நடைபெறுகிறது. மார்கழி திருவிழா, வைகாசி திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா, நவராத்திரி விழா, மகா சிவராத்திரி ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் சோழர் காலத்தைச் சேர்ந்தது கோப்பேரிவர்மன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் போன்றவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. இதற்கு சான்றாக ஆலயத்தில் பதிக்கப்பட்டுள்ள 31 கல்வெட்டுக்களை ஆய்வு செய்துள்ளனர் அதில் குறிப்பாக முதலாம் பராந்தக சோழனின் 21-ஆம் ஆண்டு கல்வெட்டு தகவலில் இவ்வாலயத்திற்கு நெய் விளக்குகளை ஏற்றி பராமரிப்பதற்காக விலையனத்தேவன் என்ற தனி நபர் 1.5 வேலி நிலம் அதாவது சுமார் ஆறு ஏக்கர் தானமாக வழங்கியதாக கல்வெட்டு ஆதாரம் கூறுகிறது. அதேபோல் இக்கோவிலின் அன்றாட பணிகளை நிறைவேற்றுவதற்காக திருச்சிற்றம்பல உடையார் என்ற பக்தர் 13 வேலி அதாவது 52 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இப்படி இறைவன்மீது பக்திகொண்ட பக்தர்களின் தன்னலமற்ற செயல்களால் இதுபோன்ற ஆலயங்கள் பிரகாசிக்கின்றன. இவ்வாலய தெய்வமான கர்ப்பரட்சாம்பிகையின் கருணையினால் பெண்களையும் பெண்களின் வயிற்றில் வளரும் கருக்களையும் காப்பாற்றும் தாயாக இந்த ஆலயம் விளங்கி வருகிறது.
ஆலய அமைவிடம்
கும்பகோணம்- தஞ்சை சாலை வழியில் அமைந்துள்ளது.