இறையனுபவம் என்றால் என்ன..? நசிகேதன் யமனிடம் கேட்கிறார்...
யமதர்மன் கூறுகிறார்...
ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, கலை, மனம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, துவக்கமும் முடிவும் இல்லாத புத்தியைவிட மேலான நிலையான இறை அனுபவமே மரணத்தின் பிடியிலிருந்து விடுபட ஒரு நல்ல வழியாகும்.
அதாவது விழிப்படைந்த புத்தியில் எவ்வாறு ஆன்ம தரிசனம் உண்டாகிறது?
இறையனுபவ உணர்வு என்றால் என்ன?
மரணத்திற்கு பின்னால் என்ன நிகழ்கிறது?
இந்த கேள்விகளுக்கெல்லாம் யமதர்மன் பதில் கூறுகிறார்.
முதலில் யமதர்மன் மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே, மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று உன்னுள்ளே இருக்கிறது.
அதுவே நீ'' என்கிறார்.
"அது' என்கிற ஆத்மா இங்கே பத்து கோணங்களில் விளக்கப்படுகிறது.
"நான்' என்கிற "அது' உடம்பு, உயிர், அனைத்தையும் கடந்த ஆன்மா என்பதை திரும்ப திரும்ப பல்வேறு வழிகளில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
அதுவே நீ.
அதுவே நான் என்கிற ஒரு தத்துவம்.
அந்த "அது' வெறும் அஃறிணை அல்ல.
அது ஆன்மா. இதனை அறிவது எப்படி...? அதாவது புலன்களைப் புறஉலகிற்காகப் பகவான் படைத்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கு உள்நோக்குப் பார்வை இல்லை. எப்போதும் வெளியே பார்க்கின்றன. உள்ளேயிருக்கின்ற ஆன்மாவைப் பார்ப்பதில்லை. விவேகமுள்ளவன் மட்டும் உள்நோக்கி, ஆன்மாவை நோக்கி, மெல்ல தன் பார்வையை நகர்த்திப் பார்க்க துவங்கு கிறான்.
நம் சாதாரண கண்களுக்குப் பார்க்க முடியாத நுண்ணிய கிருமிகளைப் பற்றி ஆராய ஒரு தனிக்கருவி இருக்கிறது. அது அந்தக் கிருமிகளை பன்மடங்காகப் பெரிதாக்கி காட்டுகிறது. அதிலிருந்து அது எந்த நோயின் கிருமி என்பதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்து கொள்கின்றனர் இதிலும்கூட சிறிது நிதானம் தேவைப்படுகிறது.
அதுபோல் "விவேகம்' என்ற கருவி வழியே
இறையனுபவம் என்றால் என்ன..? நசிகேதன் யமனிடம் கேட்கிறார்...
யமதர்மன் கூறுகிறார்...
ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, கலை, மனம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, துவக்கமும் முடிவும் இல்லாத புத்தியைவிட மேலான நிலையான இறை அனுபவமே மரணத்தின் பிடியிலிருந்து விடுபட ஒரு நல்ல வழியாகும்.
அதாவது விழிப்படைந்த புத்தியில் எவ்வாறு ஆன்ம தரிசனம் உண்டாகிறது?
இறையனுபவ உணர்வு என்றால் என்ன?
மரணத்திற்கு பின்னால் என்ன நிகழ்கிறது?
இந்த கேள்விகளுக்கெல்லாம் யமதர்மன் பதில் கூறுகிறார்.
முதலில் யமதர்மன் மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே, மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று உன்னுள்ளே இருக்கிறது.
அதுவே நீ'' என்கிறார்.
"அது' என்கிற ஆத்மா இங்கே பத்து கோணங்களில் விளக்கப்படுகிறது.
"நான்' என்கிற "அது' உடம்பு, உயிர், அனைத்தையும் கடந்த ஆன்மா என்பதை திரும்ப திரும்ப பல்வேறு வழிகளில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
அதுவே நீ.
அதுவே நான் என்கிற ஒரு தத்துவம்.
அந்த "அது' வெறும் அஃறிணை அல்ல.
அது ஆன்மா. இதனை அறிவது எப்படி...? அதாவது புலன்களைப் புறஉலகிற்காகப் பகவான் படைத்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கு உள்நோக்குப் பார்வை இல்லை. எப்போதும் வெளியே பார்க்கின்றன. உள்ளேயிருக்கின்ற ஆன்மாவைப் பார்ப்பதில்லை. விவேகமுள்ளவன் மட்டும் உள்நோக்கி, ஆன்மாவை நோக்கி, மெல்ல தன் பார்வையை நகர்த்திப் பார்க்க துவங்கு கிறான்.
நம் சாதாரண கண்களுக்குப் பார்க்க முடியாத நுண்ணிய கிருமிகளைப் பற்றி ஆராய ஒரு தனிக்கருவி இருக்கிறது. அது அந்தக் கிருமிகளை பன்மடங்காகப் பெரிதாக்கி காட்டுகிறது. அதிலிருந்து அது எந்த நோயின் கிருமி என்பதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்து கொள்கின்றனர் இதிலும்கூட சிறிது நிதானம் தேவைப்படுகிறது.
அதுபோல் "விவேகம்' என்ற கருவி வழியே மனம் என்கிற கண்ணாடிமூலம் அந்த ஆன்மா காணப்படவேண்டும்.
விவேகம் என்பது புத்தியின் உயர்ந்த நிலை. வேகம் கூடாது, ஆனால் விவேகம் இருக்கலாம். இதனை சொல்வதோ- எழுதுவதோ சுலபம். ஆனால் நடைமுறையில் அத்தனை சுலபமல்ல. விவேகியால் மட்டுமே அகவளர்ச்சியை எட்ட இயலும். புறப்புலன்களால், வெளி இந்திரியங்களால் ஆத்மாவைப் பார்க்க முடியாமலிருப்பது நான் என்பது யார். அது பரமாத்மாவின் பிரதி பிம்பமே அவனன்றி "நான்' என்பது ஒன்றுமில்லை.
எந்த செயலையும் அதற்கு தக்கவாறு செய்ய மனப்பக்குவம் வேண்டும். அது இல்லாதவர்கள் குழந்தைத்தனமான புற உலக சுகங்களை நாடுகின்றனர். அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் மரணவலையில் வீழ்கின்றனர்.
விவேகிகள் எப்பொழுதும் விழித்துக் கொண்டிருப்பதால் அவர்கள் புற உலகை அதன் இன்பங்களை நாடுவதில்லை.
அந்த விவேகம் எல்லோருக்கும் வருமா என்ன?
மரணத்தின் நிழல் இந்த உலகம் முழுமையிலும் படிந்திருக்கிறது. இங்கே தோன்றும் எல்லாவற்றிற்கும் ஒரு காலகட்டத்தில் மரணம் உண்டு. இது தாவர இனங்களுக்கும் விலங்கினங்களுக்கும் கூடத்தான்.
மரணத்திலிருந்து விலக அதனை தள்ளிவைக்க விவேகியால் மட்டுமே முடியும்.
உதாரணமாக எத்தனையோ சித்தர்கள் நம் கண்களுக்கு புலப்படாத சித்தர்கள் எத்தனையோ ஆண்டு காலமாக திருவண்ணாமலையிலும் இமயத்தின் பனிக்குகைகளிலும் வாழ்வதாகச் சொல்கிறார்கள். விவேகத்தின் அடுத்த நிலைதான் சித்தர் நிலை.
(கீதையில் கண்ணன் கூறுகிறார் இந்த விவேகமுள்ளவனுக்கு எந்த ஒரு செயலைச் செய்தாலும் பயன் இல்லை. அவனுக்கு இங்கு நாடத்தகுந்தது ஏதுமில்லை.
வாழ்வில் எவ்வளவோ நிகழ்கின்றன. உடம்பிற்கு எத்தனையோ அனுபவங்கள் வருகின்றன. எத்தனையோ விஷயங்கள் மனதை கடந்து செல்கின்றன. ஆனால் துயரப்படுவது நாம்தான். ஏதோ ஒன்றிற்காக விரும்புகிறோம்.
சிரிக்கிறோம். வந்தபின் அழுகிறோம். ஆனால் இவற்றில் பங்கெடுக் காமல் மனிதன் மனதை செலுத்தாமல் உள்நோக்காக ஆன்மாவைப் பேண வேண்டும்; முடியுமா..?
மனம் இருந்தால் மார்க்கம் நிச்சயம் உண்டு..
ஆன்மாவின் பொருள்?
நசிகேதன் ஆன்மாவின் பொருள் பற்றிய விளக்கங்களை பத்து கோணங் களில் விளக்கம் கேட்கிறார்?
யமதர்மன் சொல்கிறார்...
பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களும் அவனே ஆகி, பஞ்ச பூதங்களுடன் தோன்றி, எந்த தேவி உயிர்களின் இதயக்குகையில் புகுந்து உலவுகிறாளோ, அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள் நசிகேதா..!
நமக்கு மின்சாரம் பலவழிகளில் பயன்படுகிறது. அவ்விதமே பிராண சக்தி நாம் மின்சக்தியை உணரலாம். ஆனால் தொடமுடியாது. பிராண சக்தியை பார்க்கவும் முடியாது; தொடவும் முடியாது.
'ஆகாயம்' என்பது பிரபஞ்ச சக்தியால்தான் உருவாகிறது.
நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும், ஆற்றல் என்று அழைக்கின்ற பிராணனி லிருந்தே உருவாகிறது.
புவியீர்ப்பு சக்தியும், காந்த சக்தியும் அதனுடைய வெளிப்பாடுதான்.
உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணசக்தியாக வெளிப்படுத்தும் பிராணனே...!
நம் எண்ணங்களும் பிராண சக்தியின் வெளிப்பாடே..! இதனால் தானோ என்னவோ ஆன்மிக ஞானோதயம் ஏற்பட்டு உள்முகமாக ஆன்மசக்தியை பார்க்க இயன்ற மகாகவி பாரதியார் "எங்கெங்கு காணினும் சக்தியடா!'' என்று பாடினார். பரந்து, விரிந்து, விழுதுகளுடன் கூடிய ஆலமரம் அவருக்கு ஜடாமுடியுடன்கூடிய பரம சிவனாக காட்சிதந்தார்.
இல்லை அவர் அப்படி நினைத்தார்.
அந்த சக்தி பிராணனாக, எல்லா தெய்வங்களின் வடிவாக, அனைத்து ஆற்றல் களின் உறைவிடமாக, பஞ்சபூதங்களுடன் தோன்றியதாக கூறப்படுகிறது.
முற்காலத்தில் அதாவது- வேத காலங்களில் தீக்குச்சி இல்லை. முனிவர்கள் காட்டில் ஒருசில குறிப்பிட்ட மரங்கள் மட்டும் ஒன்றுடன் ஒன்று உரசும்பொழுது உருவாகும் தீயைப் பார்த்திருக்கின்றேன்.
அந்த மரம்தான் அரணி மரம். அதன் கட்டைகளுக்குள் தீ இருப்பது கண்களுக்கு தெரியாது. ஒன்றுடன் ஒன்று உரசும் பொழுதுதான் தீப்பொறி வருகிறது.
அந்தப் பொறியை அரணிக்கட்டை உள்ளே பாதுகாப்பதுபோல் கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பதுபோல் அங்கு தீ காக்கப்படுகிறது.
விழிப்புணர்வு பெற்ற யோகிகள் நாள்தோறும் கவனமாக ஆன்ம அக்னியை பாதுகாத்து வழிபடுகின்றனர்.
அந்த ஆன்ம அக்னியே நீ கேட்ட பொருள். கல்லுக்குள் தேரைக்கும் கருப்பையில் உயிருக்கும் உத்திரவாதம் அளிப்பது தாயின் பிராண சக்தியே, நல்ல ஜாதி மாம்பழக் கொட்டைக்குள்ளிருந்த வண்டு எவ்வாறு வாழ்ந்திருக்கிறது என்பதை யாராவது சொல்ல முடியுமா.?
யோகிகளின் மனம் அரணிக்கட்டை தியானம் என்பது... அதை உரசுகிறதுபோல அந்த பொறியின் வெளிச்சத்தில் ஆன்ம தரிசனம் கிடைக்கிறது.
சூரியன் வருவதும் மறைவதும் யாராலே என்ற ஒரு பாடல் உண்டுஅதற்கு பதில் எல்லாம்வல்ல அந்த இறைவனே அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே நசிகேதா..!
எது எங்கே இருக்கிறதோ, அதுவேதான் அங்கேயும் இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ, அதுவே இங்கும் இருக்கிறது. இதில் வித்தியாசத்தை காண்பவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றான்.
"தேடிக் கண்டு கொண்டேன் திருமாலோடு நான்முகனும்,
தேடித் தோடாணா தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்''
(தேவாரம்)
இறைவனைத் தேடி... எங்கும் போக வேண்டாம். அவன் நம்முள்ளேயே இருக்கிறான். அதற்கான பாதையும் நம்முள்தான் இருக்கிறது.
"ஆங்கென்று மீங்கென்று முண்டோ
சச்சிதானந்த ஜோதிய கண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டான்''.
(தாயுமானவர்)
இது மனதாலேயே அடையப் படவேண்டும். பூமியில் எங்கு சென்றாலும், உண்மையான தருமத்தை காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் மரத்திலேயே இருக்கிறது.
ஈஸ்வரன், குரு, அடியார், இவர்கள் எல்லோருடைய அருளைப் பெற்றாலும் வேறு ஒரு தனி அருள்வேண்டும்.
அது இல்லையாயின் ஜீவன் நாசமடைவான். அந்த முக்கியமான அருள் எது தெரியுமா..? உன் நெஞ்சுதான் முக்தி அடையவேண்டும் என்ற ஆர்வம் நெஞ்சில் உதித்தாலே போதும்; அருள் பெறலாம்.
காற்று மேகங்களை குவிக்கிறதுபின் அதே காற்று மழை மேகங்களை கலைத்து விடுகிறது. மனம் இருக்கிறதே. அது பந்தங்களை உருவாக்குகிறது. மனதாலேயே முக்தியும் கிடைக்கிறது.
இறைவன் என்ற பேரோளியின் சுடர் ஒன்று நம்முள் இருக்கிறது. எல்லா உயிரினங்களிலும் எல்லா தாவரங்களிலும் அனைத்திலும் நம் ஒவ்வொரு உள்ளத்திலும் இறைவன் இருக்கிறான் என்றால் நம்மிடையே வேறுபாடு இல்லை. இதனால் வெறுப்பு, கோபம் இரண்டுமே அடிபட்டுப்போகிறது.
நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்..?
நான் ஏன் அடுத்தவனை துன்புறுத்தக்கூடாது என்ற கேள்விகள் எழலாம்.
இறைவன் நம்மை தண்டிப்பார் என்பதல்ல பதில். உம்மாச்சி கண்களை குத்திவிட்டு வாய் என்று சிறு குழந்தைகளை மிரட்டுவதை பார்த்திருக்கின்றோம். அந்த உம்மாச்சி யார்..? சாட்சாத் இறைவனே..! எப்போதும் இறையம்சத்தை காணுகின்றவனுக்கும் எல்லோரையும் நேசிப்பவனுக்கும் மறுபிறவி கிடையாது.
இந்த உண்மை மனதினால் உணரப்படு கிறது. இந்த உலகில் வேறுபாடு ஏதுமில்லை. வேறுபாட்டை காண்கின்றவர்கள் மரணத் திலிருந்து மரணத்தை பெறுகின்றனர்.
இனிப்பிலிருந்து பல திண்பண்டங்கள் செய்யப்படுகின்றன. எல்லாமே இனிக்கத் தானே செய்யும்.
இறையம்சத்தை அறிய நம்மிடமுள்ள ஒரே கருவி மனம், மனத்தூய்மை இறைவனை அடைய ஒரே வழி..!
தூய மனம் என்பது எண்ணங்களே எழாத ஒரு முகமான மனம். நல்ல எண்ணங் களை மனதில் நிரப்பினால் தீய எண்ணங்கள் தானே ஓடிவிடும்.
அஞ்ஞானம் என்பது ஒரு முள் போன்றது. ஞானம் என்பது முள்ளை நீக்கும் மருந்து. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற பழமொழி. இங்கே பொருந்துகிறது.
-தொடர்ந்து பார்ப்போம்!
செல்: 96599 69723
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us