Advertisment

ஆண் குழந்தை கிடைக்க அகத்தியர் காட்டிய வழி! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

agathiyar


ந்திர மாநிலத்தின் தலைநகரிலிருந்து ஒரு தம்பதியினர் நாடியில் பலனறிய வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து "என்ன காரியமாகப் பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன்.

Advertisment

"ஐயா, எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. ஆண் குழந்தை இல்லை. எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமா என்று நிறைய ஜோதிடர்களிடம் சென்று ஜாதகம் பார்த்தோம். சில ஜோதிடர்கள் ஆண் குழந்தை பிறக்கும் என்றார்கள். இன்னும் சில ஜோதிடர்கள் பிறக்காது என்று கூறினார்கள். இந்த நாட்டில் எத்தனை வகையான ஜோதிடம் உண்டோ, அத்தனை முறைகளிலும் பலன் பார்த்துவிட்டேன். ஆனால் அவர்கள் கூறியபடி எதுவும் நடக்கவில்லை.

Advertisment

எனது நண்பர் ஒருவர் "பாலஜோதிடம்' புத்தக வாசகர். அவர் தங்களிடம் சென்று ஜீவநாடியில் பலன் கேட்டால், ஆண் குழந்தை உண்டா? இல்லையா என்று தீர்க்கமாக தெரிந்துகொள்ளலாம் என்று கூறி "பாலஜோதிடம்' புத்தகத்தையும் கையில் கொடுத்து விட்டார். அதில் தங்கள் ஜோதிட பலன் கட்டுரையை படித்து விட்டு, உங்களைப் பார்க்க வந்துவிட்டோம்.  நீங்கள் நாடியில் ஒரு நல்ல வாக்கினை அகத்தியரிடம் கேட்டு சொல்லவேண்டும்'' என்றார்.

உங்களுக்கு ஆண் குழந்தை உண்டு என்ற வினைப் பதிவு இருந்தால் நீங்கள்


ந்திர மாநிலத்தின் தலைநகரிலிருந்து ஒரு தம்பதியினர் நாடியில் பலனறிய வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து "என்ன காரியமாகப் பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன்.

Advertisment

"ஐயா, எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. ஆண் குழந்தை இல்லை. எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமா என்று நிறைய ஜோதிடர்களிடம் சென்று ஜாதகம் பார்த்தோம். சில ஜோதிடர்கள் ஆண் குழந்தை பிறக்கும் என்றார்கள். இன்னும் சில ஜோதிடர்கள் பிறக்காது என்று கூறினார்கள். இந்த நாட்டில் எத்தனை வகையான ஜோதிடம் உண்டோ, அத்தனை முறைகளிலும் பலன் பார்த்துவிட்டேன். ஆனால் அவர்கள் கூறியபடி எதுவும் நடக்கவில்லை.

Advertisment

எனது நண்பர் ஒருவர் "பாலஜோதிடம்' புத்தக வாசகர். அவர் தங்களிடம் சென்று ஜீவநாடியில் பலன் கேட்டால், ஆண் குழந்தை உண்டா? இல்லையா என்று தீர்க்கமாக தெரிந்துகொள்ளலாம் என்று கூறி "பாலஜோதிடம்' புத்தகத்தையும் கையில் கொடுத்து விட்டார். அதில் தங்கள் ஜோதிட பலன் கட்டுரையை படித்து விட்டு, உங்களைப் பார்க்க வந்துவிட்டோம்.  நீங்கள் நாடியில் ஒரு நல்ல வாக்கினை அகத்தியரிடம் கேட்டு சொல்லவேண்டும்'' என்றார்.

உங்களுக்கு ஆண் குழந்தை உண்டு என்ற வினைப் பதிவு இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை அடைய அகத்தியர் சரியான வழியைக் காட்டுவார் என்று கூறிவிட்டு நாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

இவர்களுக்கு ஆண் குழந்தை உண்டென்று முதலில் கூறி, இவர்களின் மன வாட்டத்தையும், மனக் இலக்கணத்தையும் கூறு என்றார்.  நான் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு ஆண் குழந்தை உண்டென்று அகத்தியர் கூறுகின்றார். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் கணவன்- மனைவி இருவரும் அருகிலிருந்த அகத்தியர் படத்தை கைக்கூப்பி வணங்கினார்கள்.

 ஓலையைத் தொடர்ந்து படித்தேன். இந்த மனைவி வம்சத்தில், வாழவந்த பெண் ஒருத்தி, தன் கணவனுடன் சேர்ந்துவாழ்ந்து, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு இரண்டு வயதான நிலையில், அவளுக்கு வேறு ஒருவருடன் நட்பு ஏற்பட்டு தன் கணவனையும், தான் பெற்ற ஒரே மகனையும் பிரிந்து, மாற்றானுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். 

அந்தக் குழந்தை தாய்பாசமின்றி, தனித்தே வளர்ந்தது. கணவனும் சிறிது காலத்திற்குபின்பு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். இரண்டாவது மனைவி இந்தக் குழந்தையை மகனாக எண்ணாமல், ஒரு வேலைக்காரனைபோல் நடத்தினார்.

சொந்த வீட்டிலேயே அனாதைபோல் வாழ்ந்தான். 

இந்த நிகழ்வு இவள் வீட்டில் நடந்துள்ளதா என்று கேள்.

நாடியில் வந்தது உண்மைதான். எனது தந்தை வழிபாட்டனாரின் தம்பியும், எனது சின்னப் பாட்டனாருமான ஒருவருக்கு, ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்து ஒரு குழந்தை பிறந்த பின்பு, அவரின் மனைவி வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டதாகவும், அதன்பிறகு அவருக்கு, இரண்டாந்தாரமாக ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்து அவளுக்கு மூன்று பெண்  குழந்தைகள் பிறந்ததாகவும் என் தகப்பனார் கூறி நான் கேள்விப்பட்டுள்ளேன். என் வம்ச முன்னோர்கள் வாழ்வில் இதுபோன்று நடந்துள்ளது உண்மைதான்.

பெற்ற மகனைவிட்டு தாய் பிரிந்துசென்ற சாபம், தாயற்ற அந்த மகனுக்கு சித்தி செய்த கொடுமை, தகப்பன் இருந்தும் இதைக்கண்டு கொள்ளாமல் தன் ஒரே மகனை  கஷ்டப்பட செய்ததால் உண்டான புத்திர சாபம், அந்த வம்சத்தில் பிறந்த இவளைத் தொடர்ந்து பாதிக்கச் செய்கின்றது. ஒரு ஆண் குழந்தையை அடையவிடாமல் தடுத்துவருகின்றது.

என் வம்ச முன்னோர்களில் யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி காரணமாவேன். என்னை ஏன் பாதிக்கவேண்டும்.

ஒருவன் தன் முற்பிறவியில் அல்லது வம்ச முன்னோர்கள் வாழ்க்கையில் செய்த பாவ- சாப பதிவுகள், அந்த வம்சத்தில் தொடர்ந்து வாரிசுகளை பாதிக்கும் என்பதை புரிந்துகொள்.  ஒருவன் தன் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த சொத்துகளையும், சுகங்களையும் மட்டும் அனுபவிக்கும் அதேசமயத்தில், முன்னோர்களால் உண்டாக்கி வைக்கப்பட்ட பாவ- சாபங்களையும் அனுபவித்து தான் தீரவேண்டும்.

இந்த சாபம் இவளை மட்டும் பாதிக்கவில்லை. இவன் தந்தையின் மூத்தசகோதரன், இவளின் பெரிய தந்தைக்கும் ஆண்வாரிசு இல்லாமல் செய்துவிட்டது. அவனுக்கும் ஒருபெண் குழந்தை மட்டும்தான் உண்டு.  அவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து வாழ வேண்டிய வயதில் ஒரு விபத்தில் மரணமடைந்தான் என்பதும் இந்த சாப வினைப் பதிவினால்தான். அகத்தியன் யான் கூறுவது உண்மையா என்று கேள்.

உண்மைதான். என் சந்தேகம் தீர்ந்தது. ஒரு ஆண் குழந்தை இல்லாத கவலையாலும், மகன் உண்டா? இல்லையா என்ற குழப்பத்துடன் வாழ்ந்த எங்களுக்கு, புத்திர தடைக்கு உண்டான உண்மையான காரணத்தைக்கூறி அகத்தியர் தெளிவுபடுத்திவிட்டார்.  எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க சரியான வழியையும், சாப நிவர்த்தியும் கூறி வம்சம் வளர வழிகாட்ட வேண்டும் என்றார்.

பெண்களுக்கு தாம்பத்தியம்மூலம் கரு உருவாகும் காலம் கர்ப்ப காலமாகும். ஆணின் விந்து கருவை உருவாக்குமே தவிர அந்தக் கருவில் ஆண் குழந்தை- பெண் குழந்தை என உருவாக்கி தருவது பெண்ணின் கருமுட்டைதான். பெண்ணிடம் ஆண் கருமுட்டை உருவாகும் நாட்களில் மட்டும், கணவன்- மனைவி தாம்பத்திய உறவு கொண்டு கர்ப்பம் தங்கினால் மட்டுமே ஆண் குழந்தை பிறக்கும்.  பெண் கருமுட்டை உருவாகும் நாளில் உறவுகொண்டு கர்ப்பம்  தரித்தால், பெண் குழந்தைதான் பிறக்கும் என்பதை அறிந்து உறவு கொள்ளவேண்டும்.

இவளுக்கு ஆண் கரு முட்டை உருவாகும் நாட்களை மட்டும் கூறுகின்றேன். அந்த நாட்களில் மட்டும் கணவன்- மனைவி கர்ப்பகால நாட்களில் உறவுகொண்டால் ஆண்குழந்தை பிறக்கும் என்று கூறி, அவளுக்கு ஆண் கருமுட்டை உருவாகும் நாட்களை கூறிவிட்டு, மேலும் சாபம் நிவர்த்தியாக சில பிரார்த்தனை முறைகளையும் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார். 

கணவன்- மனைவி இருவரும் அகத்தியர் கூறியப்படி செயல் பட்டு, ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு "அகத்தியன்' என்று பெயர் வைக்கின்றோம் என்று கூறி என்னிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

புத்திர பாக்கியம் குறை, ஆண் குழந்தை இல்லாத குறை போன்ற நிலைமாறி புத்திர பாக்கியம் அடைய, கடவுள் பிரார்த்தனைகள், தானம், தர்மம், பூஜை, யாகம், விரதம் இவை பலன் தராது.  சரியான கர்ப்பகால நாட்களில் தாம்பத்திய உறவுகொண்டால்தான் ஒரு குழந்தை பிறக்கும் என்பதை நானும் அறிந்துகொண்டேன்.

செல்: 99441 13267.

bala291125
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe